ஒட்டு மொத்த தொண்டர்களை தலைவனாக அழகு பார்க்கும் ஒரே தலைவர் எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்கள் மட்டும்தான்
அவருக்கு நிகர் அவர்மட்டும்தான்
@annamalai_k
@chandrsekar_annamalai __thondan
ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மாற்றத்தைக் கொண்டுவந்து, அடுத்ததாக வரும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு, We The Leaders அதற்குப் பிறகு வரக்கூடிய அரசியல் இயக்கம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
We The Leaders முதன்மை சேவகர் அண்ணன் K. Annamalai i தலைமையில் 15000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திருவனத்தில்.. அலைகடலேனா மக்கள் நடுவிலே சிறப்புரையாற்றினார்
#Thiruvanam#திருவனம்#Annamalai
ஆங்கிலேய அடக்குமுறையால் மெட்ராஸ் மாகாணத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சம் குறித்த வரலாறு உள்ளிட்ட பல்வேறு சிந்தனைகளை ‘Ranabaali’ படக்குழுவினருடன் பரிமாறிக்கொண்டார் தலைவர் அண்ணாமலை.
வரும் 14.10.26 அன்று வெளியாகிறது
பெரிய பெரிய மேடைகளை அமைத்து, ₹500, ₹1,000 கொடுத்து கூட்டத்தைக் கூட்டி, ஆளுங்கட்சி எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியையும் திட்டிக்கொண்டிருக்கிறது!
மாதந்தோறும் ஒரு புதிய திட்டத்தைத் தீட்டி, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார்!
#அண்ணாமலையார்
பெண்கள் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் We The Leaders அமைப்பின் சார்பில் மாரத்தான் .
ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் பெண்களுடன் இணைந்து மாரத்தான் ஓடிய அண்ணாமலை அண்ணா .
பல்லடம் அருகே பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுக்காக 'வீ தி லீடர்' அமைப்பு சார்பில் விழிப்புணர்வு மராத்தான்..
10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - கொடியசைத்து துவக்கி வைத்த அண்ணாமலை..
#Tiruppur | #WeTheLeaders | #Annamalai | #Marathon | #PolimerNews#Annamalai
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான சமூகப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
Thiruvanam, Thiruvanam Event Oct 13, Mannargudi Tree Plantation, Thalayamangalam, We The Leaders, K Annamalai, Maram Valarppom, Pamaniyar River, Thiruvarur Events, Tree Plantation Tamil Nadu
சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்த எனது எண்ணங்களையும், தனிப்பட்ட பார்வைகளையும், 'ஒரு சாமானியனின் அறச்சீற்றம்' என்ற ஒரு தொடராகப் பதிவு செய்ய, ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ள விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வார இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாமானியனாக நான் பார்க்கும் சமூகப் பிரச்சினைகள், நமது இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என, பல்வேறு தலைப்புகளில், எனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்யக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளிக்கிறது.
இந்தத் தொடர் வழியாக, எனது எண்ணங்களையும், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்வேன்.
@JuniorVikatan
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தேசியக் கொடியைத் காக்க தன் இன்னுயிரையே தியாகம் செய்த மாவீரர், திருப்பூர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக இளம் வயதிலேயே துணிந்து போராடி, உயிர்த் தியாகம் செய்த அமரர் திருப்பூர் குமரன் அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்.