நீ போகும் பாதையில் நான் வரவா?
நீங்காத உன் அன்பை நான் பெறவே...
தாயின் அன்பு மாறாதது
தந்தையின் அன்பு தாயானது
மழலை எண்ணங்கள் மாறும் வரை
வாழ்க்கை பூக்கள் இனிதானது
#அrumபு
அந்நியம் என்று
தனியாக ஏதுமில்லை
அது
ஒரு தோற்றம்
அவநம்பிக்கைக்கான பாவனை
தெரிந்த முகத்தில்
விரைப்பு பரவும்போதோ
உணர்வு உதிரும்போதோ
அது தரிசனம் தரும்
கும்பிட்டு நகரவில்லையெனில்
கண்ணாடியில் குடிபுகும்
கண்களுக்குத் தொற்றும்முன்
இடைவெளி விடுங்கள்
அதுவே
சிகிச்சையாகக்கூட இருக்கலாம்
காதலை திறக்கும்
கனவுகள் யாவும்
வானத்தின் சிறகாகும்
மேகத்தை திறக்கும்
மின்னலை போல
கவிதைகள் இசையாகும்
அவள் நினைவுகள்
தின்ற இதயம்
அன்பில் கடலாகும்
மௌனம் போதும்
பூக்களில் இதழில்
புன்னகை வீசும்...
#அrumபு
தராசுகளில் இரண்டு வகை
தனக்கு நிகராக
பொன்னை ஏற்பது ஒன்று
இன்னொன்று
ஒரு பூவிதழைச் சுமப்பது
உன்னிடம் இருப்பது
இரண்டாம் வகையெனத் தெரியும்
அதனால்தான் தைரியமாக வைத்தேன்
சொல்லை.
நாலு எட்டு வைத்தால்
கைக்கொள்ளாத அளவுக்கு இருக்கிறது
என்ற நம்பிக்கையில்தான்
வானம் கவிதையாகிறது
உன்னைப் பற்றி எழுதுவதற்கு
இருப்பதும் அதே இலக்கணம்
கொஞ்சம் கூடுதலாக
அதே அளவு தொலைவும்
'தக்க பதில்'
சொல்லாமல் இருந்ததாக
நினைத்துக்கொள்வோம்
அந்தப் பதிலை
வேறு யாரிடமாவது
சொல்லிக்கொண்டிருப்போம்
உண்மையில்
நெருப்பு சுரப்பிகளை
மறைத்து வைத்திருக்கிறது
மௌனம்
@GerberaSaaral மழை தேடும்
மன வானிலை
குளிர்காற்றில்
ஆடும் மரம்
இசையானது
கிளைகளின் ஓசைகள்
மழையில் என்றால்
மனம் மகிழும்
இயற்கை
அன்பின் கருணை
இறைவன்
எழுதும் கவிதை
நினைவில் நிற்க
இது போதுமே...!
சைதாப்பேட்டையிலிருந்து
தி.நகருக்குத் திரும்பும் சாலையில்
தினம் தினம்
வாகனத்திலிருந்து
தன்னிச்சையாகத்
திரும்பிப் பார்க்கிறது கண்கள்
அபாயம் என்கிறது மூளை
மின்மாற்றியின் மேலேயே
எல்லா நாளும் யாரோ ஒருவரின்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
அருகிலேயே
மின்சார வாரிய எச்சரிக்கை
மூளை சொன்னது எதனை?
பேரன்பின் கனவுகளில்
என் வானம் நீயாக
மனதோடு மழையானாய்
முள்வேலி பூத்திருக்க
நிழலோடு நான்
வண்ணங்கள் சேர்ந்தேன்
உன் அன்பை நினைத்திருக்க
நீரோடை போல
உனைத்தேடி வருவேன்
உன் தோட்டம் பூ பூக்க...
#அrumபு