மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
Overnight, an Iranian drone boat struck the cargo vessel MAYUREE NAREE BANGKOK while it attempted to pass through the Strait of Hormuz. The unmanned vessel hit the ship’s rear, igniting a fire and forcing most of the crew to abandon ship.
VIA: @Osinttechnical
இந்தியாவின் எந்த நகரமும், அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும், நீர் ஆதாரம் மற்றும் வழங்கும் முறை, சாலை மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை மற்றும் சுகாதார கட்டமைப்பு, போக்குவரத்து முறை, பூங்காக்கள், மக்கள் பொழுதுபோக்க கூடும் இடங்கள், கழிவுநீர் அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை, கார்பன் எமிஷன் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்கிற மாஸ்டர் பிளான் உடன் இருக்காது.
இந்த திராவிட மாடல் @mkstalin அரசு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அடுத்த 50 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளானை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. ஏனென்றால் இது இந்த ஆட்சி காலம் பற்றி மட்டும் சிந்திக்கும் அரசு அல்ல. அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்க வேண்டும் அதை எப்படி முன்னேற்ற வேண்டும் என்று சிந்திக்கும் அரசு.
எனவே முதற்கட்டமாக ஒரு நகரத்தை தேர்ந்தெடுத்து, எல்லா வளர்ச்சி கூறுகளையும் உள்ளடக்கி, 50 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் தயாரித்து, அதனை அங்கே அமல்படுத்தி, அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து, அந்த மாஸ்டர் பலனை மேம்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தது.
அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து, ஏற்கனவே நம்மிடம் இருக்கும் தரவுகள் அனைத்தையும் critical analysis செய்து, நாடு முழுவதும் ஏன் உலகெங்கிலும் இருந்து விற்பன்னர்களை வரவழைத்து அவர்களை ஒருங்கிணைத்து கடந்த ஒரு ஆண்டாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் @jeyaseelan_vp அவர்களது கடும் உழைப்பில் அடுத்த 50 ஆண்டுகளுக்கான ராஜபாளையம் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பு. இதுவரை இந்தியாவில் இப்படிப்பட்ட 50 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் ஜீரோ கார்பன் எமிசன் வரை கணக்கிடப்பட்டு தயாரிக்கப்படவில்லை. எப்படிப்பட்ட போக்குவரத்து முறைகள் இருந்தால் இது சாத்தியப்படும் என்பது வரை நுணுக்கமாக ஆராய்ந்து இந்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அறியப்பட்ட சூழலியல் அறிஞர் @ErikSolheim
அவர்கள் சமீபத்தில் ராஜபாளையம் நகரத்தை சுற்றிப் பார்த்து, மாஸ்டர் பிளான் வைத்து அனலைஸ் செய்து மிகவும் பாராட்டி சென்று இருக்கிறார்.
எப்படி திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான இலவச போக்குவரத்து, பெண்களுக்கான உரிமைத் தொகை, காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவற்றை மற்ற மாநிலங்கள் எடுத்துக்கொண்டனவோ,
அதேபோல இந்த மாஸ்டர் பிளான் திட்டத்தையும் அடுத்த 10 ஆண்டுகளில் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு மிக சிறப்பான முன்னெடுப்பை இந்த அரசு எடுத்துள்ளது.