பெரியார் அறிவுலகம் தந்த திராவிட நாயகர்!
2024 நவம்பர் 6-ஆம் தேதி கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 தள��்களுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதுதான் கோவையின் புதிய அடையாளமான 'பெரியார் அறிவுலகம்'.
இது திராவிட மாடல் அரசின் வியர்வையிலும் தொலைநோக்குப் பார்வையிலும் உருவான கனவுத் திட்டம்!
ஆனால், தினமும் காலையில் எழுந்ததும் திமுக கொண்டுவந்த திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவது, அல்லது திமுக கட்டிக் கொடுத்த கட்டடங்களை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்துத் தன் சாதனை போல 'போஸ்' கொடுப்பது, இத���தான் டம்மி முதலமைச்சர் விஜய்யின் முழுநேர வேலையா?
உங்களுக்குத் துப்பிருந்தால், சொந்தமாக ஒரு திட்டத்தையாவது சிந்தித்து, உருவாக்கி, உரிமை கொண்டாடுங்கள்!
"இது மக்கள் வரிப்பணம் தானே, இதில் திமுக உரிமை கொண்டாட என்ன இருக்கிறது?" என்று வாய் கிழியப் பேசும் அரசியல் தற்குறிகளுக்கு ஒரு தெளிவான பதில்!
ஆம், இது மக்கள் பணம்தான்! ஆனால் அந்தப் பணத்தை வைத்து வருங்கால மாணவச் செல்வங்களின் பகுத்தறிவுக்காக 'பெரியார் அறிவுலகம்' என்ற மாபெரும் அறிவுப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட்டது திமுக-வின் மூளை!
ஆனால் இன்று அதே மக்கள் வரிப்பணத்தை வைத்து தவெக,
1. வீண் விளம்பரத்திற்காக பேரிகார்டுகள் கட்டுவதும்,
2. கேமரா வைத்துக்கொண்டு 'ரீல்ஸ்' (Reels) போடுவதும்,
3. கமிஷனுக்காக ரூ.5-க்கு கிடைக்க வேண்டிய மின்ச���ரத்தை ரூ.35 கொடுத்து வாங்குவதும்,
4. விளம்பர வெறியனுக்கு ஹெலிபேட் அமைப்பதும்,
5. ரெட்டி நண்பர்களை கூடவே டிரிப் கூட்டிச் செல்வதும்,
இதுதான் இப்போது நாட்டை ஆளும் தற்குறி அரசின் மூளை!
விதைத்தது எங்கள் திராவிட நாயகர்! ஆனால் இன்று அதை வெக்கமின்றி ரிப்பன் வெட்டுவது தவெக!
தினம் தினம் கொலைகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது என்பதால் இந்த டம்மி CM விஜய் தூங்கி விட்டார் போல!
காசிமேடு முதல் தென்காசி வரை தொடரும் படுகொலைகள���, பாலியல் அத்துமீறல்கள் மற்றும் த.வெ.க நிர்வாகிகளின் அராஜகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்தத் திறனற்ற அரசு எப்போது விழிக்கும்?
#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு பகல் கொள்ளை! வேடிக்கை பார்த்துக்கொண்டு துணை போகிறதா தவெக அரசு?!
விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட 6 முதல் 8 மடங்கு வரை கொடூரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிட்டால் இது 12 முத���் 14 மடங்கு அதிகமாகும்!
போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? எப்போது தான் இதை சரி செய்யப் போகிறீர்கள்?
ஆம்னி பேருந்துகாரர்கள் இப்படிப் பகல் கொள்ளை அடிப்பதைத் தடுக்க நேரில் வந்து ஆய்வு செய்வீர்களா? இல்லை, இன்னும் ஆம்னி பேருந்து முதலாளிகளிடமும், நெடுஞ்சாலை உணவகங்களிடமும் 'கமிஷன்' வாங்கும் பிஸியிலேயே இருக்கிறீர்களா?
பண்டிகை நெருங்கும் முன்���ே முன்கூட்டியே திட்டமிட்டு, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கி, இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாத தவெக அரசின் இந்த நிர்வாகக் கையாலாகாதத்தனத்திற்குப் பின்னணியில் இருக்கும் 'கமிஷன் டீலிங்' என்ன?
இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.
இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "��ஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் த��வையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பத��� சமூக அநீதியாக அமைந்துவிடும்.
மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநா��ில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்��ுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார்.
நமது #DravidianModel அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம்.
அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இ��ைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்.
#AbdulKalam
"நாங்க ஓட்டு வாங்க எந்த முதலும் போடவில்லை.. அதனால் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. சுதந்திரமாக மக்களுக்கு சேவை செய்யுங்கள்.. எங்களிடம் இருந்து எந்த இடையூறும் வராது” - அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்
#Coimbatore #CMVijay#TVK#MinisterAnand#PettiKadaiMedia@BussyAnand
SIR குளறுபடி குறித்தும், அதைச் செய்த தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பது குறித்தும், ஒன்றிய பாஜக அரசையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர்த்துப் போராட்டம் நடத்திய கட்சிகளின் கூட்டணியில் உள்ள த.வெ.க-வின் கொடியையும், அதில் கலந்து கொண்ட த.வெ.க நிகழ்ச்சிகளுக்கு MC செய்வதற்காகச் சேர்க்கப்பட்ட, ராஜ்மோகனின் பேச்சில் 'பாஜக' என்ற வார்த்தையையும் கண்டுபிடிப்பவர்களுக்குத் தீபாவளி பரிசு காத்திருக்கிறது!
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை! நீர்வளத்துறை செயலாளர் எங்கே? ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை?
கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை.
கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் விஜய் சந்தித்தாக த��ிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் விஜயின் வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணங்கள் எதுவுமே வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. நதிநீர் பற்றி மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் எனில், இரண்டு முதல்வர்கள் தவிர சுற்றிலும் இரு மாநில நீர்பாசனத் துறை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இரு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருக்கும் குழுப் புகைப்படம் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. அதில், தமிழக நீர்வளத்துறை செயலாளர் மற்றும் தமிழக அதிகாரிகள் யாருமே இல்லை. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ��� அர்ஜுனா தவிர முதல்வர் விஜயின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிதான் பிரதானமாக அமர வைக்கப்பட்டிருந்தார். நீர்வளத்துறைச் செயலாளரை விட விஷ்ணு ரெட்டிக்கு அங்கே வேலை? விஜய் ஆட்சி அமைந்த பிறகு ₹4.42 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டது. அது குறித்து விவாதிப்பதற்காக இருக்குமோ என்று மக்கள் யோசிக்கிறார்கள்.
முதலமைச்சர்கள் சந்தித்த கூட்டத்தில் அதிகாரிகள் தயாரித்து கொடுத்த கிருஷ்ண நீர் தொடர்பான அறிக்கை எதையும் முதல்வர் வாசிக்கவில்லையே ஏன்? அப்படி வாசித்திருந்தால் அது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டிருக்குமே? நதிநீர் இணைப்பு தொடர்பான கடித்தத்தை முதல்வர் விஜய் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் அளித்திருக்கிறார். அதைக் கொடுக்க ஏன் ஆந்திரா போக வேண்டும். தமிழ்நாட்டில் இருந்தே போஸ்ட் செய்திருக்கலாம்!
முதலமைச்சர் ��ந்திரா செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர், கிருஷ்ணா நீர் வழங்கும் பிரிவு செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட ஏழு பேர் விஜயவாடா சென்றிருக்கிறார்கள். அதிகாரிகள் எதிர்பார்த்து சென்றது போல ஆந்திர முதல்வரின் முகாம் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் எதுவும் நடக்கவில்லை. அதனால் ஆந்திரா ஸ்பெஷல் உணவுகளை சாப்பிட்டுவிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனம் முடித்துவிட்டு தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் வெறும் கையோடு திரும்பிவிட்டார்கள். இன்றைக்கு நாளிதழிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.
கோதாவரி -கிருஷ்ணா-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் பற்றி பேசினார்கள் என்றால், அதற்கான வரைவு போடப்பட்டதா? சாத��தியக்கூறு அறிக்கை தயாரிக்க முடிவு எடுத்தார்களா? கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புக்காக பிரதமரை இருமாநில முதல்வர்களும் சந்தித்து கோரிக்கை வைப்பது தொடர்பாக இறுதி செய்யப்பட்டதா? இப்படி எந்த தகவலும் இல்லாமல் மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
மாநிலப் பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த போவதாகச் சொல்���ி முதல்வர் விஜய் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.
காவிரி பிரச்சனையை பேசப் போகிறேன் என்று கர்நாடகா சென்றார். இவரை நம்பி விவசாயிகள் நெல் விதைத்தார்கள். இப்பொழுது டெல்டா காய்ந்து கிடக்கிறது. போராட்டங்கள் வெடிக்கி��்றன. நெல்வரத்து குறைந்து அரிசி விலை விண்ணை முட்டுகிறது.
முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் செல்வதாகச் சொல்லி அங்கே கார் ரேஸில் பங்கேற்றார். 5 நாட்கள் பயணத்தில் 3 நாட்கள் என்ன செய்தார்? என்பது இன்று வரை கேள்வியாகவே உள்ளது.
நேற்று ஆந்திரா. நாளை கேரளம். இப்படி தனிப்பட்ட பயணங்களுக்கு மாநில நலன் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார். தனிவிமானத்தில்தான் சென்று வருகிறார். அவர் சொல்வதைப் போலவே சொல்ல வேண்டுமென்றால் ஊரான் வீட்டு நெய்யில் ஸ்விட் செய்ய ஊர் ஊராக கிளம்பி கொண்டிருக்கிறார்.
“இந்த அரசின் கொள்கைகளும் செயல்பாடுகளும் மக்களுக்கு நூறு சதவீதம் வெளிப்படையானதாகவே இருக்கும். எந்தவொரு திட்டமும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசியமாக விவாதிக்கப்படாது" என்று தான் முதலமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே பிரசங்கம் செய்தார். பேசும் போதெல்லாம் Transparency பற்றி பாடம் எடுத்தத��� பொய்யா?
அரசு பணத்தில் செல்கிறவர், அரசின் பணியை மேற்கொண்டதாக சொல்லக் கூடியவர், என்ன பணியை மேற்கொண்டார்? என்பதை மக்களுக்கு விளக்க கூடிய தார்மீக கடமையும் பொறுப்பும் முதல்வருக்கு உண்டு. என்னை யாருமே கேள்வி கேட்க முடியாது என்கிற தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதாக இல்லை. நினைத்ததை எல்லாம் செய்ய முதலமைச்சர் விஜய் இந்த நாட்டின் மன்னரோ, இளவரசரோ அல்ல. மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர்.
வாக்களித்த மக்களுக்கு அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது தார்மீக கடமை. ஆனால் முதலமைச்சர் விஜ்���் அரசு முறை பயணங்களை மேற்கொள்ளும் போது பின்பற்றப்படும் மரபுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.
நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்க��்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.
வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள்.
இந்த Cheap CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்ற���, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்?
‘முதல்வன்’ என்று சொன்னாலே கழகத்தலைவர் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா?
இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள�� ஆவது பிடிக்கவில்லையா?
கழக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது - திட்டங்களை Cancel செய்வது - Cancel செய்தவற்றையே Cancel செய்து U-Turn அடிப்பது என்று Circus நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த Dummy முதலமைச்சர் நடத்த வேண்டும்.
திராவிட மாடல் அரசால் அமைக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம் திறப்பு.
திறந்து வைப்பதில் என்ன பெருமை, எதையும் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை!
- கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது!
2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை ���ற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் ��ெரியார் அறிவுலகம்.
தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இ���ழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது��� என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவ��க்கினார். கலைஞரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர், அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ��ல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன்.
தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும், அப்போதைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமத�� திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி, மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம்.
கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன.
அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை.
நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்���ை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ��மைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம்.
அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு அறிவகம் எனப் பெயர் வைத்தார் நம் ஆருயிர் அண்ணா. அவரை ‘அறிஞர்’ என்றும், கலைஞரை முத்தமிழ் ’அறிஞர்’ என்றும்தான் அடைமொழி தந்து அழைக்கிறோம். தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டு இன்றளவும் கழகத்தின் தலைமையகமாகத் திகழு��் அலுவலகக் கட்டடத்துக்கும் அண்ணா ‘அறிவாலயம்’ என்றுதான் கலைஞர் பெயரிட்டார். இந்த அறிவுமரபின் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு கழக இளைஞரணியின் சார்பில் அறிவுத்திருவிழா நடத்தப்பட்டது.
அறிவுத்தீ எங்கும் பரவ வேண்டும், அறிவு ஜனநாயகமயமாக வேண்டும், வாசிப்புப் பழக்கம் வளர்ந்து பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கினோம். புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம். கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம்.
இவையாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் ப��ல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்க��் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி!
அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங���களுள் ஒன்றாகத் திகழும்!
என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வ���்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்க�� நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ��ராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
இன்றைக்கும் என்றைக்கும் ஒரே தலைவர்!
கோவை மக்களுக்கு உலகத்தரத்தில் பெரியார் அறிவுலகம் பரிசளித்த கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
பகுத்தறிவுப் பகலவனின் சிந்தனைகளைத் தலைமுறை தாண்டி கடத்தும் அறிவுக்கோட்டை கோவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
#PeriyarArivulakam #MKStalin #Coimbatore #DMK
கரண்ட் கட், விலைவாசி உயர்வுனு எல்லாத்துலயும் முத்திரை பதிச்சுட்டு, கடைசியா மக்களோட வாழ்க்கையிலும் மண் அள்ளிப் போட்டு தமிழ்நாட்டையே மொத்தமா முடிச்சுட்டீங்க CM சார் @actorvijay! 📉🤦♂️
#Inflation#PowerCut#PriceHike#TNEconomy
டம்மி விஜய் அவர்களே, நீங்க படிக்கிற பாரம்பரியமான தந்தி பேப்பர் உங்களைக் கழுவி ஊத்திருக்கு, விலைவாசி உயர்வுல உங்க ஆட்சிதான் நம்பர் ஒண்ணு.
ஆட்சி நிர்வாகம் செய்யத்தெரியாமல் விலைவாசி உயர்வு, மின் கொள்ளை என்று சீர்கேடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றி துளியும் கவலை இல்லாமல் அரசு பணத்தில் ��ொகுசாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விலைவாசியை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் ஓடிவிடுங்கள்.
#TVKFailsTN
அமைச்சர் “நா���் பிறந்ததிலிருந்தே ரேஷன் அரிசிதான் சாப்பிடுறேன்!” 🤦♂️
ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய ரேஷன் அரிசி உங்களுக்கு எப்படி கிடைக்கும்? கேள்வி கேட்டதும் வாயடைத்துப் போன உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்!
#RicePriceHike #TVKFails #DummyCMVijay