“அவர் ஊத, இவர் ஆட”
பாஜக சொல்ல தவெ�� செய்ய!!!
மாநில சுயாட்சிக்கு எதிரான தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கை! பாஜகவின் விருப்பத்த��� நிறைவேற்றுகிறதா விஜய் அரசு?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாகப் பிரதிபலிக்காமல், வலுவான ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் ஒருமைத் தன்மை கொண்ட கூட்டாட்சி அமைப்பாக (Quasi-Federal) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரக் குவிப்பைக் கருத்தில் கொண்டுதான், மாநிலங்களுக்கான உரிமைகளும் அதிகாரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண��டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் “மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
அந்தக் கொள்கையின் வழியில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் ஒவ்வொரு முறையும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான மற்றும் அரசியலமைப்புச் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கிறது. தனக்குள்ள அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆணையங்களை அமைப்ப��ு, அவற்றின் பரிந்துரைகளை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்பது, தேவைப்படும்போது நீதிமன்றங்களை நாடுவது எனத் தொடர்ந்து மாநில உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கிறது.
அந்த வகையில், கடந்த திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மாநில சுயாட்சிக்கான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை வழங்கியதோடு, இந்திய அரசியலமைப்புச் ச��்டத்தில் மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியது. இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் தொடர வேண்டிய நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அந்தக் குழுவைக் கலைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தனது கொள்கைத் தலைவராகப் பேரறிஞர் அண்ணாவைக் கூறிக்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம், அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக்கான முயற்சியையே முடக்குவது எத்தகைய முரண்பாடு?
இந்தக் குழுவைக் கலைத்த தமிழக வெற்றிக் கழக அரசின் முடிவை பாஜக உடனடியாக வரவேற்றுக் கொண்டாடுகிறது. இதிலிருந்தே இந்த முடிவு யாருடைய அரசியல் விருப்பத்திற்கு ��கந்ததாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
பாஜகவால் நேரடியாகச் செய்ய முடியாத பலவற்றை, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறதா பாஜக என்ற கேள்வி எழுகிறது.
சினிமாவில் சொல்வதைப் போல, “அவர் ஊத, இவர் ஆட” என்ற நிலைதான் தமிழ்நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வு வலுப்படுத்துகிறது.
அண்ணா பெயர���ச் சொல்லிக்கொண்டு, அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சியையே பலியிடுவது கொள்கை முரண்பாடு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு இழைக்கப்படும் அநீதியும் ஆகும்!
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசமில்லை!
மாநில சுயாட்சியே நமது இலக்கு!
#DMK
#TVKVijayFails
மனிதம் போற்றும் தத்துவம் பேசும்
உலக நாயகன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்கள் கலைப் பயணமும், கருத்துச் செறிவுமிக்க ச��ந்தனைகளும், மனிதநேயக் கொள்கைகளும் தலைமுறைகள் தோறும் பரவட்டும். உங்கள் சிந்தனைகள் சமூக மாற்றத்திற்கான விதைகளாகத் தொடர்ந்து முளைக்கட்டும்!
தமிழ்போல் வாழ்க! ❤️
@ikamalhaasan
‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.
உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்கள��க்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண நிதி வழங்கினோம்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை அனுமதித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மாயமானது தொடர்பான புகார்களை கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே, மீனவர்கள் மரணத்துக்கு காரணம் என்று கண்ணீரோடு கூறினர்.
அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்�� வேண்டும் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - மீனவர்களுக்கு காப்பீடு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற அக்குடும்பத்தினரின் கோரிக்கையை இந்த சோப்ளாங்கி அரசு உடனே நிறைவேற்றவேண்டும்.
அரசின் மெத்தனத்தால் இனியொரு மீனவரின் உயிர் பறிபோகக்கூடாது. அதனை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
#ChennaiFishermen
@rdsekarmla @SUDHARSANAM_S @JJEbenezer1 @kpshankar
கோவை பெரியார் அறிவுலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில், அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட நூல்களின் ஆசிரியர்கள் பட்டியலில் திரிஷா விஜய் (Trisha Vijay) என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திரிஷா விஜய் எழுதிய நூல் எது?
அந்த நூலின் உள்ளடக்கம் என்ன?
திரிஷா விஜய் யார்?
அவருடைய எழுத்தாளர் தகுதி என்ன?
அவருடைய இலக்கியப் பங்களிப்பு மற்றும் எழுத்துப் பின்னணி என்ன?
அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன? அவற்றைக் கொள்முதல் செய்ய யார் பரிந்துரைத்தார்கள்?
எந்தத் தகுதியின் அடிப்படையில் இந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன?
பெரியார் ��ெயரில் உருவாக்கப்பட்ட அறிவுலகத்திற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தில் நூல்களைக் கொள்முதல் செய்ததில் இத்தனை கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த அரசு மௌனம் காக்க முடியாது.
இந்த ஆட்சி இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்! @imrajmohan
இது பெரியார் அறிவுலகம் தொடர்பான கேள்வி மட்டுமல்ல; மக்கள் பணத்திற்கான கணக்குக் கேட்கும் உரிமை!
நீலகிரி மாவட்டத்தின் கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தின் தொடர்ச்சியாக, ஒன்றிய, நகர, பேரூர்க் கழகங்களின் மறுசீரமைப்பு நிர்வாகத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இன்று உதகையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கே. என். ராஜு அவர���கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நானும், கழக இளைஞர் அணி து��ை செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரர் கே. வி. பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டு, நிரப்பப்பட்ட படிவங்களைப் பெற்றுக்கொண்டோம்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர்க் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
#DMK
பெரியார் என்பது வெறும் தத்துவம் அல்ல; அது ஒரு வாழ்வியல்.🖤
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவும், சுயமரியாதையோடு வாழவும், சமத்துவத்தோடு மனிதநேயத்தைப் போற்றவும் வழிகாட்டும் பேர���ன்ப வாழ்வின் பெரும் தொடக்கம்!
பெரியாரியம் என்பது அரசியல்,அதிகாரம்,பதவி,புகழ் தாண்டிய வாழ்வின் விடுதலை உணர்வு ✨
கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் முன்னாள் செயலாளரும், கொள்கைக் குன்றுமான அண்ணன் C.T. தண்டபாணி அவர்களின் நினைவு நாளையொட்டி, மாவட்டக் கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற��கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.
இந்நிகழ்வில் அவரது மகன் C.T.D பாபு, மாணவரணி துணைச் செயலாளர் தம்பி V.G. கோகுல், மாவட்டப் பொருளாளர் அண்ணன் முருகன், பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், LPF பெரியசாமி,LPF விவேகானந்தன் ,கழகப் படாகர் இக்பால்,தோழர் சுரேஷ், அண்ணன் பிரின்ஷ், தோழர் பூபாலன்,வட்ட செயலாளர் அக்பர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
கழகத்தின் கொள்கைத் தடத்தில் வாழ்ந்து, தொண்டால் தடம் பதித்த அண்ணன் C.T. தண்டபாணி அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நேற்று கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கும்!
இன்று உதகை மற்றும் குன்னூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் K.M.ராஜீ எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேரூர் நகர, ஒன்றிய, கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநிலக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று, கழக மறுசீரமைப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தலைமை கழகத்தின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் எடுத்துரைத்தேன்.
#dmk
முன்னாள் அமைச்சரைக் கைது செய்ய ஆளுநரின் ஓப்புதல் வாங்க வேண்டும் என்கிற சட்ட விதிமுறைகளை மீறியும்..
வழக்கறிஞர் அலுவலகத்தில் யாரையும் கைது செய்ய கூடாது என்கிற விதிகளை ��ீறியும் சட்டத்தின் எல்லைகளைத் தாண்டி அத்துமீறி இருக்கிறது இந்த Reels அரசு !
திராவிட முன்னேற்றக் கழகம் பொய் வழக்குகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும் அஞ்சிப் பின்வாங்காது!!
உச்சநீதிமன்ற மன்றத்தால் குற்றவாளி என தீர்ப்புக்கு உள்ளனா செல்வி ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை சட்டை பையில் வைத்து சுத்து ஊழல் அமைச்சர்களை அமைச்சரவையில் வைத்து கொண்டு யோக்கிய வேசம் போடுகிறார் விஜய்!!
அதிகாரத்தின் ஆணவத்தால் ஜனநாயகத்தையும் சட்டத்தின் மாண்பையும் காலில் போட்டு மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். @TVKVijayHQ
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்; மக்கள் தீர்ப்பளிப்பார்கள்!
#AnbilMahesh
கோவையில் தனியார் பள்ளியில் ச���தியின் பெயரால் ஆசிரியரால் இழிவு செய்யப்பட்டு அதானால் மாணவர்களால் அவமதிக்கப்பட்டு ஏற்பட்ட மனஉளைச்சலால் தற்கொலை செய்து உயிரிழந்த தம்பி அகிலனுக்கு நீதி கேட்டு, அவரது உடலைப் பெற்றுக்கொள்ளாமல் தொடந்து போராடும் பெற்றோருக்குத் துணையாக ஜனநாயக சக்திகள் களத்தில் நிற்கின்றன.அவர்களுக்கு ஆதாரவாக போராட்ட களத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்!!
தம்பி அகிலனின் மரணத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமென்றால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்திற்குக் காரணமான ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அகிலனுக்கு நீதி கிடைக்க வேண்டும்! சாதிய வன்கொடுமைக��கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்!
@TVKVijayHQ
சமையல் என்பது பெண்களுக்கானது மட்டுமே என்று கற்பிக்கப்பட்ட சமூகத்தில், ஆண்களும் சமையலறைக்குள் நுழைவதற்குப் பொதுவெளியில் நடத்தப்படும் சமையல் போட்டிகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன.
இலக்கிய மரபில் “நளபாகம்”என்பது ஆணின் சமையல் திறனைப் போற்றும் அடையாளமாக விளங்கியது. இன்று அறிவியல் வளர்ச்சியும், மாறிவரும் சமூகச் சூழலும் சமையல் மீதான ஆண்களின் ஆர்வத்தை அதிகர���த்துள்ளன.
அந்த வகையில், பாரம்பரியத் தமிழர் சமையல் கலைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவரும், பத்மஸ்ரீ விருது பெற்ற சமையற்கலைஞருமான செஃப் தாமு அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். சமையல் கலையைத் தாண்டி, தமிழர்களின் உணவுப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உலகறியச் செய்த அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள���கிறேன்.
#RIP
அரசு ஊழியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தானே! அவர்களுக்குக் அரசியல் அமைப்பு ச��்டம் சரத்து 19 வது சரத்து வழங்கும் கருத்துச் சுதந்திரம் இல்லையா?
மிஸ்டர் தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை உங்கள் ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கே வாய் பூட்டுப் சட்டமா??
பேசக்கூடாது… கருத்துச் சொல்லக்கூடாது… இதுதான் உங்கள் மாற்றமா?
மாற்றம்! முன்னேற்றம்! 🤦🏻🤦🏻
நல்லா இருக்கு உங்க கருத்துச் சுதந்திரம்!
மேடைக்கு மேடை அண்ணாவின் பெயரை உச்சரித்தால் மட்டும் போதாது; அண்ணாவின் அரசியல் கொள்கைகளையும் நெஞ்சுரத்தோடு பின்பற்ற வேண்டும்!
“மாநிலத்தில் சுயாட���சி; மத்தியில் கூட்டாட்சி” என்பதுதான் பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய அரசியல் முழக்கம்.
ஒன்றிய அரசு மாநில அரசைத் தனது எஜமான மனப்பான்மையோடு அணுகுவதை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருப்பதல்ல மக்களாட்சி. மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடுவதுதான் ஓர் உண்மையான முதலமைச்சரின் தெம்பும் திறனும்!
இன்றைக்கு விஜய் அவர்களின் பேச்சைப் பார்த்தால், அண்ணாவின் பெயரும் அரசியலும் மேட��� அலங்காரமாக மட்டுமே இருக்கின்றனவோ என்ற கேள்விதான் எழுகிறது.
ஒன்றிய அரசின் திட்டங்களைக் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், ஒன்றிய அரசு மாநில அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும்போது, அதைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும் மாநில ��ரிமைகளை நிலைநாட்டும் உறுதியும் ஒரு முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
அண்ணாவின் பெயரைச் சொல்வது எளிது; அண்ணாவின் கொள்கைக்காக நிற்பதுதான் அரசியல்!
உங்களிடம் அந்தத் தெம்பும் திறனும் இருக்கிறதா என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி! @TVKVijayHQ
பழக்கவழக்கம், பண்பாடு என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து, களத்தில் விடுதலை வீரனாக நின்று, ஆதிக்கச் சாதிவெறிக்குப் பலியான மாவீரர் அய்யா இம்மானுவேல் சேகரனார்!
அன்று அவர் விதைத்த சமூக விடுதலைக்கான விதை, இன்று சமூகநீதி மற்றும் சம உரிமைக்கான குரலாகவும், உரிமைகளை நிலைநாட்டும் விவாதமாகவும் வளர்ந்து நிற்கிறது!
விதைத்தவர் உறங்கலாம்; விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை!
அதற்குச் சாட்சியாக, தலைமுறைகள் கடந்தும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அய்யா இம்மானுவேல் சேகரனார்!
வீர வணக்கம்!🔥