மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
2021 Election-க்கு முன்னாடி Parandur மக்களுக்கு வாக்குறுதி…
ஜெயிச்சதும் அதே மக்களுக்கு துரோகம். இதுதான் DMK.
1000+ நாள் ஜனநாயக வழியில் போராடிய மக்களுக்கு தீர்வு கொடுத்தது ஜனநாயகன் CM Vijay. 🔥
Alternative Airport ready ஆகுற வரைக்கும் passenger, cargo & commercial demand-ஐ T5 மூலம் handle பண்ணலாம்.
T5 + Alternative Airport - simultaneously work பண்ணுற clear plan.👍🏾
@CMOTamilnadu
🏆 T20 World Cup 2007
🏆 World Cup 2011
🏆 Champions Trophy 2013
🏆 Asia Cup 2010, 2016 & 2018
#OnThisDay in 2020, MS Dhoni announced his retirement from international cricket. 🇮🇳🧤
The captain who conquered every ICC trophy, led India through an unforgettable era and built a legacy that remains unmatched. 🏆📸
16 years of greatness. One legendary Captain Cool. 🐐💙
#MSDhoni #India #Retirement #Sportskeeda
We can count the entries. But we’ll never be able to measure what they made us feel! ♥️
Experience the #OneLastEntry, now showing in theatres! ✨
#JanaNayagan Running Successfully in Cinemas
Book your tickets now and watch it at #AGSCinemas
🔗 https://t.co/9RiRaN7t7c
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay
Tamil Nadu's ruling TVK said it was not just against irregularities in NEET, but wanted the medical entrance examination scrapped altogether. The party also demanded that states be given full powers over matters related to medical education.
Read More: https://t.co/syQqpLkYru
#NEET #TVK #TamilNadu #MedicalEducation #IndiaTodaySocial
All the aggravation, attitude, fouls, taunting, vulgarity, fans throwing bottles at fans from the opposing team, to produce ZERO shot on goal during the final.
1963 ஆம் ஆண்டு காமராஜர் அவர்கள் தனது முதல்வர் பதவியைத் துறந்து, தேசிய அரசியலை நோக்கி நகர்ந்த ‘காமராஜர் திட்டம்’ (K-Plan) தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்பது ஒரு சாராரின் கடுமையான விமர்சனமாக இன்றும் நீடிக்கிறது. அந்தச் சூழலில், தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளத்தையும் உரிமைகளையும் மீட்டெடுக்க, பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாற்றுச் சக்தியாக, தமிழகத்தின் ஆபத்பாந்தவனாக உருவெடுத்தது வரலாற்று உண்மை.
1967 இல் அண்ணா அவர்களின் கைகளில் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அந்தத் தருணமே, நவீன தமிழகத்தின் அரசியல் திசைவழியைத் தீர்மானித்த மிக முக்கிய புள்ளியாகும். அன்று விதைக்கப்பட்ட சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய மூன்று தூண்கள்தான் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தை இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து தனித்துவப்படுத்திக் காட்டும் திராவிட அரசியலின் அடித்தளமாக விளங்குகின்றன.இந்தத் தத்துவார்த்த அடித்தளம் என்பது வெறும் கட்சி சார்ந்ததாக இல்லாமல், தமிழக மக்களின் வாழ்வியல் விழுமியமாகவே மாறிப்போனதுதான் இதன் ஆகச்சிறந்த வெற்றியாகும்.
திமுக - அதிமுக, கலைஞர் - எம்.ஜி.ஆர், ஜெயலலிதா - ஸ்டாலின் என அதிகாரப் போட்டியில் யார் வென்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தாலும், தமிழ்நாட்டின் இந்த மூன்று அடிப்படை விழுமியங்களில் எந்தவொரு சமரசமும் ஏற்பட்டதே இல்லை. ஒரு கட்சிக்கு மாற்று இன்னொரு கட்சி என்ற இருதுருவ அரசியல் கட்டமைப்புதான் இந்த விழுமியங்களை இத்தனை காலம் எவ்விதச் சேதாரமுமின்றிப் பாதுகாத்து வந்தது.
இத்தகைய சூழலில், 2021 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தபோது, தமிழக அரசியல் தளத்தில் ஒரு தத்துவார்த்தக் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டது....ஏனெனில், ஸ்டாலின் அவர்களுக்கு நிகரான ஒரு மாற்று ஆளுமை இல்லாத பட்சத்தில், தமிழகத்தின் இருதுருவ அரசியல் கட்டமைப்பு உடைந்து, அது நேர் எதிர் துருவமாக இருக்கும் வலதுசாரி அரசியலோடு நேரடியாக மோதும் சூழல் உருவாகுமோ என்ற கவலை எழுந்தது. தமிழகம் அதுவரை போற்றிப் பாதுகாத்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சமநிலையைக் குலைக்கக்கூடிய ஆபத்தாக அது மாறிவிடும்...
அந்த இக்கட்டான சூழலில்தான், தமிழக அரசியல் வரலாற்றின் அடுத்த கட்டப் பாதுகாப்பரணாக, காலம் தந்த தேவையாக நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை அமைந்தது. ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் வாய்ப்பைத் தவறவிட்ட இடத்தில், விஜய் அவர்கள் மிகச் சரியான வயதில், தீர்க்கமான முடிவோடு அரசியலுக்குள் நுழைந்து அந்த இடத்தை அசாத்தியமாகப் பிடித்துக் கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம்' என்ற பேரியக்கத்தைத் தொடங்கி, சமரசமற்ற தீர்க்கமான திராவிடக் கொள்கைகளையும், சமூக நீதிப் பாதையையும் தனது கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளாக அவர் அறிவித்தபோது, தமிழகத்தின் இருதுருவ அரசியல் எதிர்காலம் குறித்த அச்சங்கள் அனைத்தும் தவிடுபொடியாயின. அவர் மீது ஆயிரம் தனிப்பட்ட மனமாச்சரியங்கள் இருந்தாலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவும், அதன் அடிப்படை விழுமியங்கள் சிதைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் விஜய் அவர்களின் இந்த அரசியல் நகர்வை ஆதரிப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகம் கண்ட அந்தப் பெருமாற்றம், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு 2026 இல் மீண்டும் ஒரு புதிய வடிவத்தில், புதிய ஆளுமையின் வழியே நிகழ்ந்தேறியுள்ளது. ஆற்றல் மிக்க இளமைப் பருவத்திலேயே, தனக்கிருந்த உச்சக்கட்டத் திரைத்துறைக் புகழையும் வருமானத்தையும் துறந்து, தமிழகத்தின் எதிர்காலத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள விஜய் அவர்களின் எண்ணமும் செயலும் போற்றத்தக்கவை. இனிவரும் கால் நூற்றாண்டு காலத்திற்குத் தமிழகம் தன் தத்துவார்த்தப் பாதையிலிருந்து சற்றும் விலகிவிடாமல் நேர்க்கோட்டில் பயணிப்பதை, 'ஸ்டாலின் vs விஜய்' என்கிற ஆரோக்கியமான இருதுருவ அரசியல் அசைக்க முடியாதபடி உறுதி செய்யும். தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், மாநிலத்தின் உரிமை மீட்புக்காகவும் உழைக்கத் தடம் பதித்துள்ள தமிழகத்தின் முதல்வருக்கு, நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் மக்கள் பணியாற்ற இத்திருநாளில் நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
🍰💐🎂🎂❤️🙏 @CMOTamilnadu@TVKVijayHQ