முதல்வரின் உடல்மொழி:
___________________
மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! _______________________________
காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.
முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,விசிக.
(2/2)
பாஜக அரசு தொகுதி மறு சீரமைப்பை மேற்கொண்டால் அதன் பின்னர் வடக்கு வாழும் தெற்கு தேயும். ஏற்கனவே வரி வருவாய்ப் பகிர்விலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இப்போது தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து போனால் அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு மதிப்பும் இல்லாமல் போய்விடும். எனவே இந்த கொடிய முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். அதை விடுதலைச் சிறுத்தைகள் வழிமொழிகிறது. தொகுதி மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 16 4 2026 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். கட்சி அலுவலகத்திலும், தமது வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்
இவண் :
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
(2/2)
ஒன்றிய பாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை எதிர்த்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க எனது வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டியும், கையில் ஏந்தியும் சட்ட மசோதாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக எதிர்ப்பு தெரிவித்த போது...
தாம்பரம் மாநகராட்சி வார்டு 20க்கு உட்பட்ட ஈஸ்வரன் நகர் வேலுச்சாமி நகர் பாக்கியம்மாள் தெரு கோல்டன் அவென்யூ மற்றும் கஸ்தூரிபாய் தெரு ஆகிய பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது இதனை மாமன்ற உறுப்பினர் திரு செ.முத்துகுமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
இன்று பவளவிழா காணும் 'உச்சப் புகழின் ஒளிர்மிகு ஆளுமை' @rajinikanth அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
பெருமகிழ்வும் பேரமைதியும் நிறைந்த பெருவாழ்வு, நோய்நொடியின்றி நீடித்து நூறாண்டு காண நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
மழை காலத்தில் முறிந்து விழும் நிலையில் இருந்த மரக்கிளைகளை நமது மாமன்ற உறுப்பினர் திரு செ.முத்துகுமார் அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் துணை கொண்டு வெட்டி கழித்து சுத்தம் செய்தார்...
தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 2 வார்டு எண் 20, கீழ் கட்டளை பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில், வருகின்ற பருவமழை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் சிறார்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு
நாளை(நவ-09) மாலை 6.00 மணிக்கு
தேவநேயப் பாவாணர் அரங்கில் சந்திப்போம்.
களம் புதிது அமைப்பு வழங்கும் விருது.
அண்ணன்அறிவுமதி அவர்களின் வாழ்த்துரை.
தோழர்கள் மனுஷ்யபுத்திரன்,
பவா செல்லதுரை, சுகிர்தராணி ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் எழுத்துக்களையும் உரைகளையும் கடிதங்களையும் விசிக துணைப் பொதுச் செயலாளர் கவுதம சன்னா அவர்கள் 50 நூல்களாக தொகுத்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஜெய்பீம் ஃபவுண்டேசன் சார்பில் விரைவில் வெளிடப்படவுள்ள 50 நூல்களையும்
இங்கிலாந்து நாட்டின் இலண்டன் மாநகரில் அறிமுகப்படுத்தினேன்!
#Tambaram வார்டு 20 அம்பாள் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர் வாரும் பணியை மாமன்ற உறுப்பினர் திரு செ.முத்துகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட பொழுது..
#Tambaram வார்டு 20 வேலுச்சாமி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க இன்று பணி தொடங்கபட்டது மாமன்ற உறுப்பினர் திரு செ.முத்துகுமார் அவர்கள் நேரில் சென்று கலந்துகொண்டார்...
@tambaramcorpor2
அடித்தட்டு மக்கள் வாழ்வினை உயர்த்த அன்றாடம் ஒலிக்கும் சமத்துவக் குரல் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் உரிமை முழக்கத்தையும், ஒடுக்கப்பட்ட - விளிம்புநிலை மக்களின் லட்சிய வேட்கையையும் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும் அம்பேத்கர் - பெரியாரின் கொள்கை வார்ப்பு. பாசிசத்தை எதிர்க்கின்ற போரில் நம் தலைவர் அவர்களுடன் தோளோடு தோள் நிற்கும் தோழர்.
மதச்சார்பின்மை - சமூகநீதி காக்கும் களத்தில் உறுதியாய் நிற்கும் அண்ணன் அவர்களின் சமூக - அரசியல் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்! வாழ்க பல்லாண்டு!
#Thirumavalavan
தம்பி தருமபுரி #இளவரசன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன்!
#தீர்மானம் 2:
2. காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த இளைஞர் அஜித் குமார், காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில், காவல் வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) பிரிவு 120(1) மற்றும் 120(2) இன் கீழ் காவல்துறை அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக சித்திரவதை செய்வது குற்றமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இன் பிரிவு 379 இன் கீழும் காவல்நிலையங்களில் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு சட்டப் பாதுகாப்புகள் இருந்தும், காவல் வன்முறைகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன. இது காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்து மதிப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.
எனவே, காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்துப் பயிற்சி அளிப்பதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், காவலர்களால் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட அஜித் குமார் குடும்பத்திற்கு ₹1 கோடி இழப்பீடு வழங்கி, அந்த தொகையை குற்றமிழைத்த காவலர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.