அனைவருமான அருவியாக குற்றாலத்தை மாற்றியவர் ஆஷ் துரை. சாவர்க்கரின் இந்து மகா சபை அல்ல.
பணி முழுமையடையாத போதிலும் மத அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டான் இந்த சங்கி இராம இரவிக்குமார்.
திரிணாமுல் காங் ஆட்சியில் கூட தோழர் லெனின் சிலை அகற்றப்படவில்லை.
மே.வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்த அடுத்த நொடியே ஒரு வன்முறையை கையில் எடுத்து விட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
"நீங்கள் ஆயிரம் பூக்களைப் பறிக்கலாம் வந்துகொண்டிருக்கும் வசந்தத்தை தடுக்க முடியாது"
#westbengal
ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை மூ��ம் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை இந்த கல்வி ஆண்டு முதல் CBSE பள்ளிகளில் தொடங்கிவிட்டது.
இந்தியே தெரிஞ்சாலும் North media-க்களுக்கு English-ல address பன்றது தான் தமிழ்நாட்டோட அரசியல்.
#TamilnanduElection
#TVK
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
ஒன்றிய பாஜக அரசே
தமிழ்நாடு மீனவர்களை வஞ்சிக்காதே..!
உலகின் மூன்றாவது பெரிய இராணுவம் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் நீங்கள் சிறிய (இலங்கை) நாட்டின் இராணுவத்திடமிருந்து தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தைரியமில்லையா?
fertility ratio குறைந்து விட்டது. நம் அருகில் உள்ள சொந்தங்கள் நண்பர்களில் கூட Miscarriage, Infertility, Artificial insemination, test tube என ரொம்ப சாதாரண வார்த்தைகளாக புழக்கத்திற்கு வந்துவிட்டது.
அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#Delimitation
அரசு மருத்துவமனைகளில் 2வது குழந்தை பிரசவத்தின் பிறகு இன்றும் கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுகிறது.
முதலீட்டு திட்டங்கள் முதல் பாதுகாப்பு திட்டங்கள் வரை பல திட்டங்களில் அதிகபட்ச நபர்களில் 2 குழந்தை வரை மட்டுமே உள்ளது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இவற்றை தளர்த்தி..
1/2
கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். மேலும் மானியங்கள் திட்டங்கள் 2 குழந்தைகளுக்கு மேல் விரிவுபடுத��த வேண்டும்.
இனியும் செய்யத் தவறினால் அதிகாரம், பணம் என இருக்கும் மிச்ச சொச்சத்தையும் இழக்க நேரிடும்.
ஏற்கனவே உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும்..
ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளால்
வடக��கு வாழ்கிறது..!
தெற்கு தேய்கிறது..!
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் குரல்களை நசுக்கும் மற்றுமொரு மோ(ச)டி வித்தையே..!
கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும் உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி இருக்கக்கூடும். ஒர��� படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக் கொந்தளிக்கும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் எ��்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம்.
ஆட்சியில், நிர்வாகத்தில், அரசியல் நிலைப்பாடுகளில் நாம் க்யூவில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறு செய்கிற போது இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறோமா? சினிமாவுக்கு எதிராக இவ்வளவு சீறுகிற நாம், நம் பகுதியின் கவுன்சிலரிடம் என்றைக்காவது முறையிட்டிருப்போமா?
வீட்டைச் ��ுற்றி தண்ணீர் நின்றாலும், கொசுக்கடி கொன்றாலும், பாதிச்சாமத்தில் கரண்ட் கட்டானாலும், சாலை நடுவே பள்ளம் உண்டாகி உருண்டாலும், நியாயமான விஷயங்களுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி வந்தாலும், கண் முன்னே அநீதி நடந்தாலும் அதிகபட்சம் உள்ளுக்குள் குமுறிக்கொண்டே கடக்கிறோம். பிள்ளைகளின் கல்விச் செலவுக்குக் கொஞ்சமும் நியாயமின்றி வசூலிக்கப்படும் கட்டணத்தை கடன் வாங்கியாவது கட்ட��கிறோம். உயிர்க் காக்கும் மருத்துவத்தில் நடக்கிற கொடுவினைகளைக்கூடச் சகித்துக் கொள்கிறோம். இந்த ஆவேசமும் கொந்தளிப்பும் அங்கெல்லாம் எப்படி அமைதியாகிறது? ஒரு படம் நம்மை ஏமாற்றுகிற போது பாய்கிற நாம், ஒரு நிஜம் நம்மை ஏமாற்றுகிற போது சகிக்கவும், தாங்கவும் எப்படி பழகிக் கொள்கிறோம்?
ஒரு பெரியவர் ‘கங்குவா’ படத்திற்கு எதிராகக் கொந்தளித்ததைக் காட்டாத சமூக வலைத்தளங்கள் இல்லை. ஆனால் இன்றைக்கும் சுற்றுச் சூழலுக்காக, சமூக நீதிக்காக, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதர்களை எத்தனை ஊடகங்கள் காட்டுகின்றன? ஒரு படத்தின் நல்லது கெட்டதுகளை போஸ்ட் மார்ட்டம் செய்து கிழித்துத் தொங்கவிட இவ்வளவு புரட்சியாளர்கள் இருக்கிற தமிழ்நாட்டில் நமக்காகக் கொண்டு வரப்படுகிற திட்டங்களை, செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்க, விவாதிக்க எத்தனை நாதிகள் இருக்கின்றன?
“சூர்யா ஏமாத்திட்டார்…” என ஆதங்கப்பட்ட / ஆத்திரத்தில் இன்னும் சில வார்த்தைகளைக் கொட்டிய ஒரு நண்பர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 15 லட்சத்தைப் பறிகொடுத்தவர். எல்லோர��ம் இணைந்து கொடுத்த புகாரில் கையெழுத்துப் போட்டதைத் தவிர, அந்த நண்பர் காட்டிய எதிர்ப்பும், போராட்டமும் எதுவுமில்லை. நண்பரின் விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், நாமும் இப்படித்தான்…எத்தனையோ அநீதிகளை நெருக்கடிகளை மென்று செரிக்கிறோம். ஆனால், சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுகிறோம்.
“படத்தில் ஏன் இவ்வளவு வன்முறைக் காட்சிகள்” என ஆவேசப்படுகிற நாம், நம் கண் முன்னே நடக்கி�� கத்திக் குத்துகளைக் கண்டுகொள்ள மாட்டோம். “படத்தில் ஏன் இவ்வளவு மது போதைக் காட்சிகள்?” என ஆவேசப்படுவோம். வரிசைகட்டி மீன் கடைகள் போல் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளைப் பார்த்துக்கொண்டே கடப்போம். படத்தில் எதுவும் தவறான காட்சிகள் வந்துவிடக் கூடாது. நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது என்ன மனநிலை?
நியாயமும் அறச்சீற்றமும் கேள்வி கேட்கும் திராணியும் கொண்ட ஒருவன், தனக்கு எதிராக நடக்கும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் கொந்தளிப்பான். ஓர் அநீதிக்கு அமைதியாகவும், இன்னோர் அநீதிக்கு புரட்சியாகவும் இருக்க மாட்டான்.
மூன்றே விஷயங்கள்…
1.சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு ம���சமாகக் குறை சொல்லவும் தேவையில்லை.
2.இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம். 3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் க���ள்ள வேண்டும்.
3. சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பதுபோல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி.
பி.கு: நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல…