Seeing Nelson Directing Rajinikanth brings so much of hope. For someone whose first movie got shelved had to wait another decade to make another movie is now in elite league.A symbol of hope that one day things will change.Hang in there it's just a matter of time. Things change
தேர்தலில் தோல்வியை சந்திக்கும் கட்சிகள் பொதுவாக வாக்கு விகிதாச்சார கணக்குகளை பேசுவார்கள், வெற்றி பெறுகிறவர்கள் எண்ணிக்கையை பேசுவார்கள். திமுக இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து ஒரு கணக்கை சொல்லிக்கொண்டு வருகிறது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் அதை இன்று சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
த.வெ.கவை வேண்டாம் என்று 65% சதவிகித மக்கள் வாக்களித்திருப்பதாக சொல்கிறார். திமுக ஆதரவு வாக்குகள் மட்டுமில்லாமல், பிற கட்சிகளின் வாக்கு சதவிகித்தையும் இதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இது அடிப்படையில் பிழையான வாதம். அப்படியே அவர் லாஜிக் படி பார்த்தால், திமுக கூட்டணி வேண்டாம் என்று இந்த தேர்தலில் 63% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதே போல 2021 ஆம் ஆண்டு திமுக கூட்டணி வேண்டும் என்று 45% மக்களும், திமுக கூட்டணி வேண்டாம் என்று 54% மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். இதன்படி 2021 லையே பெரும்பான்மை மக்கள் திமுக ஆட்சியை விரும்பவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியுமா?
இதிலுள்ள Fact என்னவென்றால், மொத்த திமுக கூட்டணி வாங்கியது 30%, தனிப்பெரும் கட்சியாக தவெக வாங்கியது 35%. கடந்த 60 வருடத்தில் தனித்து நின்று எந்தக் கட்சியும் இந்த சதவிகித வாக்குகளை பெறவில்லை என்பதே நிதர்சனம். இதிலிருந்து ந��க்கு என்ன படிப்பினைகள் இருக்கிறது என்பதே அரசியல்.
Recently I saw an interview with astrolger Radhan Pandit where he spoke about approaching #AjithKumar with predictions. Apparently he met him or twice and then Ajith said he doesn���t believe in all this and Pandit retreated. Hmmmmmm
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்த��ருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமை���் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலைய��ன ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச�� சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீ��ு அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்��கைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்ப���ாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Only way all these confusions take rest is dmk declaring their support from outside to tvk.with all the unimaginable things happened can't rule out this
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அதிகார��்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது'
திரு.கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை இப்படித் தொடங்குகிறது. ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை என சொல்வதின் மூலம் த.வெ.க, திமுக, அதிமுக என இம்மூன்று கட்சிகள் பெற்ற அங்கீகாரத்தையும் ஒரே தராசில் வைக்கிறார் கமல். ஆனால் உண்மை என்னவென்றால், கூட்டணி இல்��ாமல் தனித்த கட்சியாக போட்டியிட்டு 108 தொகுதிகளில் கடந்த அறுபதாண்டு கால தேர்தல் அரசியல் வரலாற்றில் வென்றது த.வெ.க மட்டுமே.
திமுக இதுவரை தனித்து தேர்தலை சந்தித்ததில்லை. அதிமுக 2016 இல் பெரிய கட்சிகளின் துணையின்றி கூட்டணிக்குள் வந்தவர்களை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடச் செய்தது.
இரண்டாவதாக, அந்த அறிக்கையில் அமையப்போகும் ஆட்சி குறித்து ஸ்டாலினுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ���ன்கிற பெருந்தன்மையை நிறுவி, விஜய் ஆட்சியமைக்க அழைக்கப்பட வேண்டும் என இறுதியில் கவர்னரை கண்டிப்பதில் முடிகிறது அறிக்கை. நேற்று மாலை வெளியான திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி செய்திக்கு பின் ஸ்டாலின் அளித்த விளக்கத்தின் ஊடாக திமுகவின் ஜனநாயகப் நிலைப்பாடு நிறுவப்பட்டுள்ளது.
மறுபுறம் காங்கிரஸ் த.வெ.கவுக்கு அளித்த ஆதரவை துரோகச் செயல் என நிறுவி இருக்கிறது திமுக. தற்போதிருக்கும் சூழலில் காங்கிரஸ் நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டது என்று திமுக குறிப்பிடுவதில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா? திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு அக்கட்சி ஆட்சிக்கு வரும் சூழலில் காங்கிரஸ் த.வெ.க கூட்டணிக்கு தாவி இருந்தால் அதை துரோகம் என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. அப்படியொரு வாய்ப்பில்லாத போது இதை துரோகம் என எப்படி குறிப்பிட முடியும்?
2006 தேர்தலில் திமுக தனித்து பெற்ற தொகுதிகள் 96. பாமக, கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு வழங்கியது. பாமக 2009 இல் அதிமுக கூட்டணிக்குத�� தாவிய பிறகும் திமுகவால் ஆட்சியில் இருக்க முடிந்ததற்கு காரணம் காங்கிரஸ்.
2004 பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க திமுக எம்பிக்கள் காங்கிரசிற்கு தேவைப்பட்டது, 2006 தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவிற்கு தேவைப்பட்டார்கள். இந்த உடன்ப��டோடு தான் ஐந்தாண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது திமுக.
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசுக்கு திமுக 28 + ராஜ்யசபா வழங்கியது. இதையும் நன்றிக்கணக்கில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். த.வெ.க தற்போது பெற்றிருக்கும் வாக்கு சதவிகிதத்திற்கு காங்கிரசோடு இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்திருந்தால், கூட்டணிக்குள் குழப்பம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். அந்தச் சூழல் வந்���ு விடக்கூடாது என்பதற்கு திமுக கொடுத்த விலையே 28 + ராஜ்யசபா, அதிலும் தேர்தல் கணக்குகள் இல்லாமல் இல்லை. ஒருவேளை அவை உற்ற சகோதர கட்சிக்கு பெருந்தன்மையாக கொடுக்கப்பட்ட இடங்கள் என்றால், அந்த பெருந்தன்மை ஏன் விசிக, கம்யூனிஸ்டுகளிடம் வெளிப்படவில்லை?
அரசியல் கூட்டு என்பது கட்சி மற்றும் மாநில நலன் கருதி மாறிக்கொண்டே இருப்பவை. ஆட்சியில் தொடர முடியாத போது திமுகவோடு கைகோர்க்க வேண்டிய ��ேவை காங்கிரசுக்கு மட்டுமல்ல, வேறு எந்த கட்சிக்கும் தேவையில்லாத நெருக்கடி. இந்த யதார்த்தம் புரியாத கட்சியில்லை திமுக. இன்றைய சூழலுக்கேற்ற காங்கிரசின் முடிவை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டு துரோகமாக சித்தரிப்பது அவர்களது அதீதங்களில் ஒன்று. பிற கூட்டணிக் கட்சியினருக்கும் இதன் மூலம் தமது விருப்பமின்மையை உணர்த்தியுள்ளது.
த.வெ.கவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த பின் நடப்பவை எல்லாமே வேறு கணக்குகளை கொண்டிருப்பதாகவே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. தற்போது ஆட்சி அமைப்பதில் நிலவும் சிக்கல்களில் பாஜக தலையீடில்லாமல் இருக்காது என ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், ஆட்சி அமைப்பதை தடுத்து அரங்கேறும் மாற்று திட்டம் எதுவாயினும், அதையும் பா��திய ஜனதா திட்டமிட்டு கொடுத்ததாகவே இருக்கும்.
@thillainathan02 Even tvk was not prepared for this much of seats thier initial plan was to disrupt the dmk seats and form a coalition with admk in the name of removing dmk from,but when the reverse of that happened they were caught in limbo and can't directly align with admk
@thillainathan02 Part of Aiadmk mlas wanted to join with tvk palanisamy in an angst of frustration he replied "idhuku na Dmk koodave kootani vachupan" around the same time tvk machinery started spinning the narratives so that their inability will not be shown. This is what has happened
தோல்வியில் இருந்து கற்பதற்கு திமு கழகத்கிற்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. It’s time to Rethink and Rewire. I think my party will be open to new thinking.. அது தான் வரலாறு கழகத்திற்கு வழங்கியுள்ள பக்குவம்.
📌யாரை எல்லாம் அருகில் ச��ர்க்க வேண்டும், சேர்க்க கூடாது என்பதே ஒரு அரசியல் தான். இந்த ஐந்தாண்டு ஆட்சியில் கழகத் தலைவரை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மேட்டுக்குடியினர்(Elites). subaltern கட்சிக்காரர்களை தலைவரை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டது இந்த தரப்பு. இந்த திரையை முதலில் அகற்ற வேண்டும். கட்சிக்காரர்களை அணுகுவது என்பது வெறும் Gimmicks-ஆக அல்லாமல் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் செய்ததை போல் உள்ளார்ந்த ஒன்றாக இது இருக்க வேண்டும்.
📌 Consultancies-ஐ தூக்கி எறியு��்கள். அரசியலில் கட்சிக்காரனை காட்டிலும் மிகசிறந்த Consultant என்று ஒருவர் இல்லவே இல்லை. அவர்களின் ஆலோசனைகளுக்கு செவிமடுங்கள். வெறும் எண்களை கொண்டு ஏமாற்றும் வியூக வகுப்பாளர்கள் திமுக போன்ற 75 ஆண்டு கால கட்சிக்கு அவசியம் இல்லை. கழகத்திற்கு உள் இருக்கும் ஆற்றலும் நிபுணத்துவமும் Consultancies-ஐ விட பன்மடங்கு பெரியது. அதை உணர்க. நமக்கு தேவை முரசொலி மாறன்களே தவிர, பிரசாந்த் கிஷோர்கள் அல்ல.
📌 சமூக வலைதளத்தில் களமாட உறுதியான அமைப்பை கட்சியின் ஒரு அங்கமாகவே நிறுவி கொள்ளும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதை மேலும் வலுப்படுத்துங்கள். Influencer-களை சாராமல் கட்சி உறுப்பினர்களை இந்த தளத்திற்கு ஏற்றவர்களாக தரப்படுத்துங்கள்.
📌 தலைவரை பதற்றபடாமல் வைத்திருக்க நினைக்கும் மாய வலை அதிகார மையங்களின் தொடர்பை துண்டித்து கொள்ளுங்கள். யதார்த்ததை முறையாக உள்வாங்கி கொள்ள விடாது தடுக்கும் இந்த வர்க்கம் தி.மு.கழக தலைமைக்கு ஒரு சாபக்கேடு.
📌 இளம் தலைமுறையை குறிப்பாக இளம் ��ெண்களை கட்சிக்குள் கொண்டு வர ஒரு புதிய திட்டம் தேவை. வெறும் உறுப்பினர் சேர்க்கை என்ற எண்ணிக்கை ஜால திட்டமாக அல்லாமல், அமைப்பு சார்ந்த முன்னெடுப்பாக அது திகழ வேண்டும். சார்பு அணிகளை Reform செய்யுங்கள். கட்சியின் அணுகுமுறையில் Rigidity குறைந்து Flexibility அதிகரிக்க வேண்டும். கட்சிகார்கள் தலைவர்களை அணுகுவதிலும் இது வெளிப்பட வேண்டும். தலைமை அதை நோக்கி நகர வேண்டும்.
📌 பல கோடி செலவில் - பல்லாயிரம் உடன்பிறப்புகளின் உழைப்பில்- பல லட்சம் கட்சிகாரர்களை பெரும் திரளில் கூட்டி கணக்குகாட்ட ஏற்பாடு செய்யப்படும் கந்துடைப்பு மாநாடுகள் இனியும் வேண்டாம். சலிப்பூட்டும் அரசியல் யுக்தி அது. எண்ணிக்கை அரசியலில் இருந்து வெளியேறுவோம்.
கழகம் தன்னை அடுத்த பாய்ச்சலுக்கு தயார்படுத்தி கொள்ள இவை எல்லாம் அடிப்படையாக நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியமான மாற்றங்கள் என்று கருதுகிறேன்.
என் பா���்வையில் பிழை இருக்கலாம், குறைபாடு இருக்கலாம், மாற்று கருத்து இருக்கலாம் அவற்றை சுட்டிக்காட்டினால் உரையாட தயார்.
உறக்கமற்ற உடன்பிறப்புகளுள் ஒருவனாகவே இதை எழுதி இருக்க��றேன். துவண்டு போகவில்லை. மீண்டெழுவோம் அதுதான் உதயசூரியனின் குணம்.
#DMK @mkstalin @Udhaystalin @arivalayam #Re_Thinking
Sekar Babu & Ma. Subramaian have been the key reason DMK lost its fortress Chennai. Their arrogance, power politics, ill-treating people, doctors, sanitary workers, and even low level DMK cadres have been the pain points.
Multiple people have warned of this so many times. But DMK first family was in echo chambers for so long.
Deserving loss for DMK. Especially in Chennai.