@polimernews இன்னும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்குவதையே நிறுத்த முடியலை.. தனியார் பள்ளிகளும் கட்டணக்கொள்ளையடிக்கிறானுக.. எப்படி லஞ்சம் ஒழியப்போகிறது??..
27 ஆயிரம் அரசுப் பள்ளிகளை 4 ஆயிரமாக குறைக்கும் தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் (#SFI) சார்பில் போராட்டங்கள் பேரணிகள் நடைபெற்றுள்ளது.
முக்கிய கோரிக்கைகள்
ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை 27,000-ல் இருந்து 4,000-ஆகக் குறைக்கும் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடைகள் மற்றும் இலவசப் பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
மதிய உணவுத் திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை அக்ஷய பாத்ரா, இஸ்கான் (#ISKCON) போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்காமல், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆசிரியர், மண்டல கல்வி அதிகாரிகள் (MEO), மாவட்ட கல்வி அதிகாரிகள் (DEO) மற்றும் விரிவுரையாளர் என நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தனியார் மற்றும் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை முறைப்படுத்தவும், கல்வியை வணிகமயமாக்குவதைத் தடுக்கவும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கல்வி உரிமை (#RTE) சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும்.
தனியார் மற்றும் கார்ப்பரேட் பள்ளிகள் தங்கள் வளாகத்திலேயே பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை விற்பனை செய்யும் முறையைத் தடுத்து, அந்த மையங்களை மூட வேண்டும்.
நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, அரசாணை (G.O.) எண் 7, 8 மற்றும் 9-ஐத் திரும்பப் பெற வேண்டும்.
இடைநிலை (Intermediate) கல்லூரிகளிலும் மதிய உணவுத் திட்டத்தை உடனடியாகத் தொடங்கி, அதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
#Telengana #CongressGov @TelanganaCMO
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து திருவள்ளூரில் அம்மோனியா கேஸ் கசிவால் 18 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது!!
📚 #UDISE+ 2025–26 தரவுகள் கவலைக்கிடம்!
🔻 2023–24-ல் 12.75 கோடி இருந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, 2025–26-ல் 11.89 கோடியாக குறைந்துள்ளது.
➡️ 2 ஆண்டுகளில் 86 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 9.00 கோடியில் இருந்து 9.89 கோடியாக உயர்ந்துள்ளது. (+88 லட்சம்)
பொதுக் கல்வியை வலுப்படுத்துவதற்கு பதிலாக, கல்வியை தனியார்மயமாக்கும் கொள்கைகளின் விளைவுதான் இந்தப் பின்னடைவு.
பொதுக் கல்வியைப் பாதுகாப்போம்!
தனியார்மயத்தைத் தடுக்க ஒன்றிணைவோம்!
#SavePublicEducation #SFI #EducationForAll
பாஜக அரசு மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலை உருவாக்குகிறது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் ஆயுதப் பலத்தைப் பயன்படுத்தியது போல, தற்போது பாஜக கும்பல் வன்முறை மூலம் அரசியல் எதிரிகளை ஒடுக்க முயற்சிக்கிறது.
சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை பாஜக அரசு உறுதி செய்யத் தவறி விட்டது.
காவல்துறையினர் அதிகாரத்தில் இருப்பவர்களின் நலனுக்காகவே செயல்படுவதால், உடனடியாக விரிவான காவல்துறை சீர்திருத்தங்கள் தேவை.
தோழர் முகமது சலீம், மேற்கு வங்க மாநிலச் செயலாளர் #CPIM #WestBengal #PoliceReform #StopViolence
@ThanthiTV ஊழல் அரசியல்வாதிகள் & அதிகாரிகள் வீடுகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் மட்டும் பளப்பள என்று இருக்கும்.. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்??
உலகத்திற்கே தான் தான் தலைவன் என்ற நினைப்பில் கம்யூனிசத்தை ஒழித்தே தீருவேன் என்று கொக்கரிக்கிறார் டிரம்ப்.
கம்யூனிசத்தை எவராலும் அழிக்க முடியாது. உலகில் சுரண்டல் இருக்கும் வரை கம்யூனிசமும் இருக்கும்.
வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்!
ஹிட்லர், முசோலினிகளின் கதை முடிந்ததே தவிர, கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
உங்கள் வாய்க்கொழுப்புதான் உங்களுக்கு முதல் எதிரி!
தொழிற்சாலை மரணங்களை தடுக்கவும், திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட மரணத்திற்கு நீதி கேட்டு இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் முன்பு #CITU சார்பில் ஆர்ப்பாட்டம் #Thiruvallur#AmmoniaLeak#TamilNadu#IndustrialAccident