பாராட்டியதில் எந்த தவறும் இல்லை
கடைக்கோடியில் இருந்தவரையும்
எம்.எல்.ஏ. வாக, அமைச்சராக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல இன்று
முதல்வர் விஜய் வாய்ப்பு அளித்துள்ளார்
அமைச்சர் வினோத்
முதல்வரை பாராட்டியதில்
எந்த தவறும் இல்லை.
-அமைச்சர் CTR. நிர்மல் குமார்
#TVK#ctrnirmalkumar
மறுசீராய்வு மனு
தேனி, வனப்பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாடு அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
-அமைச்சர் CTR.நிர்மல் குமார்
#TVK#TVKVijayHQ#ctrnirmalkumar#ministernimalkumar#CTR
எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்
தமிழகத்தின் நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது.
மின்சார வாரியம், போக்குவரத்து துறை, ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய நிதி ஆதாரம் குறித்து கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி, தனது ஆட்சியில் செய்தது என்ன?.
#TVKVijayHQ
திமுக, அதிமுகவுடன் பேசி பயனில்லை
தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என திமுக நினைக்கிறது.
கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து
மேகதாது விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்.
தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத
திமுக, அதிமுக கட்சிகளுடன் பேசி பயனில்லை.
-அமைச்சர் CTR.நிர்மல் குமார்
#TVK
ஸ்மார்ட் மீட்டர் நவீன மின்சார சேவை
சென்னை மாநகரின் அனைத்து
நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.
மாநிலத்தின் பிற பகுதிகளில்
50 லட்சம் தொழில் & வணிக நுகர்வோருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
வெளிப்படையான மற்றும்
திறன்மிக்க மின்சார சேவைக்கு புதிய முன்னெடுப்பு.
வீட்டுக் கூரை சூரிய மின் திட்டத்திற்கு மானியம் அறிமுகம்
சூரிய மின்பலகை அமைக்க
ரூ.1 லட்சம் வரை மானியமும் திட்ட செயல்பாட்டிற்காக
ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் சூரிய மின் உற்பத்தியை
ஊக்குவிக்கும் புதிய முன்னெடுப்பு.
#TVK#CTR#CMJosephVijay
நீர்மின் உற்பத்திக்கு புதிய வேகம்
ரூ.5,050 கோடி மதிப்பில்
வெள்ளிமலை நீரேற்று புனல் மின் திட்டம்.
திட்டப் பணிகள்
விரைவுபடுத்தப்படும்.
தூய்மையான எரிசக்தி உற்பத்திக்கு
முக்கிய முன்னெடுப்பு.
எரிசக்தியில் தன்னிறைவு வளர்ச்சியின் அடையாளம்
ரூ.8,000 கோடி மதிப்பில்
ETPS ( Expansion Thermal Power Project) விரிவாக்கத் திட்டம்.
அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய
மின் உற்பத்தித் திறன் மேம்பாடு.
தமிழ்நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை
உறுதி செய்யும் புதிய முன்னெடுப்பு.
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள் இன்று (5.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (5.8.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
மதுரையில் 2027-28 கல்வியாண்டில்
சீர்மிகு சட்டப்பள்ளி தரத்தில்
மேம்பட்ட சட்டக்கல்வி வழங்கப்படும் புதிய கல்லூரி உருவாக்கப்படுகிறது.
முதற்கட்டமாக 300 மாணவர்களுடன் கல்லூரி சேர்க்கை தொடங்கப்படுகிறது.
இதற்காக உயர்கல்வித் துறைக்கு
ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது .