கழகத்துக்கும் தலைவர் கலைஞருக்கும் தன் இறுதிமூச்சு வரை உண்மையாக இருந்த களங்கமில்லாத திராவிடத் தீரர் முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன்.
அண்ணாவின் தம்பியாக அவர் ஆற்றிய உரைகளும் எழுதிய நூல்களும் நம் இயக்கத்தின் இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பயின்றாக வேண்டிய பாடப்புத்தகங்கள்.
ஓர் எளிய தஞ்சை டெல்டா மைந்தன் டெல்லி வரை சென்று தடம் பதித்தார். பின்பு தோகா வரை சென்று இந்தியா மட்டுமில்லாமல், உலகின் வளரும் நாடுகள் அனைத்துக்காகவும் வாதாடினார். எத்தனை உயரம் சென்றாலும் அந்தப் புகழை எல்லாம் கலைஞருக்கே காணிக்கையாக்கிய #முரசொலிமாறன் அவர்களின் புகழ் வாழிய வாழியவே!
இயக்குநர் இமயம் பாரதிராஜா - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் திரையுலகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட ‘ராஜகோபுரங்கள் - நினைவு உற்சவம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
தமிழ்த்திரையுலகிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திய பாரதிராஜா சார் - பாக்யராஜ் சாரின் பெருமைகளையும் - சாதனைகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினேன்.
அவர்கள் இருவரின் கலைப்பணி என்றென்றும் மக்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும்!
#Bharathiraja #KBhagyaraj
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.
நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
#சட்டம்_ஒழுங்கு
தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கழக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் என்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டு நலனுக்காகவும் - கழகத்திற்காகவும் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ள கழக வழக்கறிஞர் அணியின் பணிகள் மென்மேலும் வேகமெடுக்கும் வகையில் உற்சாகமூட்டினோம்.
வழக்கறிஞர் அணியின் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்!
@DMKLegalWing@RSBharathiDMK@nrelango_dmk@PWilsonDMK
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று @dmk_youthwing தலைமையகமாக விளங்கி வருகிறது.
இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
#KalaignarForever #Kalaignar103
நாம் பெறப்போகும் வெற்றி, நம் வெற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றி, தமிழ் மக்களின் வெற்றி என்ற உறுதியோடு களப்பணியாற்றுவோம்! தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மாநில உரிமைகளை, நம் மொழியை தனது டப்பா இஞ்சின் மூலம் அழிக்க நினைக்கும் NDA கூட்டணியை, தேர்தல் களத்தில் வீழ்த்துவோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழர் விரோத திட்டங்களையும், சட்டங்களையும் தொடர்ந்து தமிழ்நாட்டுக்குள் திணிக்கும், டெல்லி ஆதிக்கவாதிகளையும், அவர்களுக்குக் கைகட்டி, வாய் மூடி சேவகம் செய்யும் அடிமைகளையும், 2026 தேர்தல் களத்தில் வீழ்த்தி, தமிழ்நாடு காக்கும் நம் திராவிட மாடல் அரசே என்றும் தொடர, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #VoteForDMK
தன்மான இயக்கத்தின் தனிப்பெருஞ் சுடர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகே, பட்டுக்கோட்டை வெற்றி வேட்பாளர் அண்ணன் @annadurai_pkt அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் Remote Control-ஆட்சி நடத்த நினைக்கும் ஆதிக்கவாதிகளுக்கு சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டில் இடமில்லை என உரையாற்றினோம்.
மே-4 அன்று தமிழ்நாடெங்கும் 200-க்கும் அதிகமான இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல உறுதியேற்றோம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
திராவிட இயக்க தீரர்களைத் தந்த தஞ்சை மண்ணில் இன்றைய தினம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @NASHOKKUMARMLA1 அவர்களுக்கு வேதாந்தம் திடலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், தாயுமானவர் திட்டம் என #திராவிடமாடல் ஆட்சியில் நிறைவேற்றியுள்ள முத்திரை திட்டங்களையும், அமையவிருக்கும் #திராவிடமாடல் 2.0 ஆட்சியில் நாம் நிறைவற்றப் போகும் வாக்குறுதிகளையும் சொல்லி உரையாற்றினோம்.
ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அடித்து நொறுக்குவோம்! தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!
#VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாட்டைச் சீரழிக்க நினைக்கும் பாஜக சதிகாரர்களையும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்.
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!
🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!
🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!
#TiruchiWithDMK #VoteForDMK
தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தொடர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில், இன்றைய தினம் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள் @Kavitha_DMK & @nallathambidmk ஆகியோருக்கு, நாட்றாம்பள்ளி பகுதியில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
ஐந்தாண்டுகளில் நாம் நிறைவேற்றி இருக்கும் சாதனைத் திட்டங்களைச் சொல்லச் சொல்ல மக்களிடம் இருந்து எழுந்த கரவொலி, இரண்டு தொகுதிகளிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வண்ணம் இருந்தது.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் #திராவிட_மாடல் நல்லாட்சி தொடர, அடுத்த 22 நாட்களும் அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்