Hon Chief Minister Vijay is currently watching Jananayagan at the Tagore Film Centre in Adyar, Chennai, along with Secretariat staff, DSPs, and several IAS officers.
Great. Why bother about the Cauvery river water tribunal where important arguments took place between TN and Karnataka today ? Movie is more important.
பல தடைகளை தாண்டி நாளை ரிலீசாகும் ஜனநாயகன் திரைப்படம்.. சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் உள்ள திரையரங்கில் தனிப்பட்ட முறையில் அரசு அதிகாரிகளோடு இணைந்து இன்றே திரைப்படம் பார்த்து ரசித்த முதலமைச்சர் விஜய்..!
#JanaNayagan | #CMVijay | #Movie | #PolimerNews
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றி முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
நன்றி தமிழக முதல்வர் @TVKVijayHQ அண்ணன் 😍❤️
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை காலை உணவுத் திட்டத்திற்குச் சூட்டிய தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் முறையான மரியாதை!
@CMOTamilnadu
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் . இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் . அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.
Met Honourable Chief Minister Of Tamilnadu Thiru. C. Joseph Vijay @CMOTamilnadu on my birthday and took His wishes… He is always humble, warm and welcoming @TVKPartyHQ
விளாத்திகுளம் எம்எல்ஏ மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு
BNS 351(3) – கடுமையான குற்ற மிரட்டல் (Criminal Intimidation):
BNS 352 – அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் (Intentional insult to provoke breach of peace):
BNS 353(2) – சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் பொய்யான தகவல் பரப்புதல்
@arivalayam@TVKVijayHQ
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.
உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
நமது சமூக நீதித்துறை சார்ந்த ஆய்வு பணிக்காக இன்று (19.07.26) ஈரோடு சென்ற போது, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தோம். அச்சமயம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்களையும் அங்கு சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. மாண்புமிகு அமைச்சர்களுக்கு ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம்.
@arunraajkg@Balajierodetvk