மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் உழைக்கும் பாட்டாளிகள் மீது எவ்வளவு பாசமாக இருப்பாரோ அதே பாசத்துடன் #மருத்துவர்#அய்யா அவர்களின் சின்னமான மாம்பழம் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார் மருத்துவர்
சின்ன அய்யா வின் இளய மகள்!
#PMKPresidentAnbumani#PMK2_0
அரசு கேபிள் சேவையில் பாலிமர், நியூஸ் தமிழ் உள்ளிட்ட செய்தித் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்.
@TVKVijayHQ#CMOTamilNadu#PMK#TVK#News
@TANGEDCO_Offcl
Place
tindivanam rajampettai street 604001
இந்த கம்பத்தை உடனடியாக மாற்ற ஆணையிடுங்கள்..
கம்பம் மாற்றி தரும்படி கோரிக்கை அளிக்கப்பட்டுவிட்டது...
@CTR_Nirmalkumar
தமிழக மக்களின் நலன் - உரிமைகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, கடுமையாக உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கும் அவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளாக மிக மோசமான ஆட்சியை நடத்தி வந்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தது. திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு மகத்தானது. திமுகவுக்கு எதிரான அலையை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அறுவடை செய்யும்; அமோக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால், தமிழக மக்களின் விருப்பமும், தீர்ப்பும் வேறாக அமைந்திருக்கிறது. மக்களின் இந்த முடிவை பா.ம.க. ஏற்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலாகவே மக்களின் நலன்களுக்காகவும், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதியாக போராடி வருகிறது. இனி வரும் காலங்களிலும் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், களத்தில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பா.ம.க - கூட்டணி கட்சிகளுக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@EPSTamilNadu@NainarBJP@TTVDhinakaran@GK__Vasan@jaganmoorthy_m
உகாதி திருநாள் வாழ்த்துகள்.!
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் உறவுகளின் புத்தாண்டான உகாதி திருநாளைக் கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கு பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் தமிழர்களிடமிருந்து மொழியால் வேறுபட்டு இருந்தாலும் சிந்தனையால் ஒன்றுபட்டவர்கள்; உடலால் வேறுபட்டாலும் உயிரால் ஒன்றுபட்டவர்கள். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களை தமிழக மக்கள் தங்களின் சகோதரர்களாகவே பார்க்கின்றனர். தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் காலம் காலமாகவே பெருமளவில் பங்களித்துள்ளனர்.
புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில் தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். மொத்தத்தில் உகாதி, அனைவருக்கும் அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.!
#HappyUgadi | #ugadi | #telugu | #kannada
தென்மாவட்டங்களில் கனிமக்கொள்ளையை தடுக்க
முடியாததால் மானமுள்ள திமுக நிர்வாகி விலகல்: இனியாவது முதல்வர் விழிப்பாரா, சீரழிப்பாரா?
தென்காசி மாவட்டம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடற்ற வகையில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளையை தடுக்க முடியாததாலும், அதன் தீமைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாததாலும் திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் கடையம் சந்திரசேகர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். சுயமரியாதையைக் காக்க இந்த முடிவை அவர் எடுத்திருப்பது மிகவும் சரியானது.
திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகியின் பதவி விலகலை ஒரு சாதாரணமான நிகழ்வாக பார்க்கக் கூடாது. தென் மாவட்டங்களில் கட்டுப்பாடற்ற வகையில் கனிமக் கொள்ளை நடக்கிறது; அதை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய திமுக நிர்வாகியாலேயே தடுக்க முடியவில்லை; கனிமக் கொள்ளை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திமுக நிர்வாகியே புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல செய்திகளை இந்த ஒற்றை பதவி விலகல் கடிதம் கூறுகிறது.
தென் மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கனிமக் கொள்ளை நடைபெறுகிறது; ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றன; கனிமக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு காட்பாதராக இருந்து திமுகவின் பெரும்புள்ளி ஒருவர் பாதுகாக்கிறார் என்று பல ஆண்டுகளாக நான் குற்றஞ்சாட்டி வருகிறேன். அவை அனைத்தும் உண்மை என்று இப்போது திமுக நிர்வாகியின் வாக்குமூலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நலனிலும், இயற்கை வளங்களின் நலனிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருக்கிறதா? என்பதை நிரூபிப்பதற்கான நேரம் வந்து விட்டது. இனியாவது கனிமக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை வாக்கு என்னும் ஆயுதத்தைக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஊழல், கஞ்சா, பாலியல் வன்கொடுமை திமுக அரசை மக்கள் துணையுடன் வீட்டுக்கு அனுப்புவோம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் , தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இந்தத் தேர்தலை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது.
தமிழ்நாடு மிக மோசமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு ஆட்சியாளர்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது கஞ்சா இராஜ்ஜியம் என்று கூறும் அளவுக்கு மூலைக்கு மூலை கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் விற்கப்படுகின்றன. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடவே முடியாது எனும் அளவுக்கு அவர்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டன.
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தான் தழைத்தோங்கியுள்ளன. பணியாளர்களை நியமிப்பதில் ஊழல், சாலை அமைப்பதில் ஊழல், பாலம் கட்டுவதில் ஊழல், மணல் அள்ளுவதில் ஊழல், நெல் கொள்முதலில் ஊழல், மது வணிகத்தில் வரி ஏய்ப்பு ஊழல், மின்சாரம் கொள்முதலில் ஊழல், பணியிட மாற்றம் வழங்குவதில் ஊழல் என அனைத்திலும் ஊழல் தான். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6,00,00,00,00,000 ( ரூ. 6 லட்சம் கோடி) ஊழல் செய்து திமுக சாதனை படைத்திருக்கிறது.
திமுக ஆட்சியை அகற்றுவதன் மூலம் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான முன்னேற்றத்தைத் தர முடியும், பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்க முடியும், மது மற்றும் கஞ்சா போதையில்லா தமிழகத்தை உருவாக்க முடியும், உண்மையான விடுதலையை வழங்க முடியும். இதை உணர்ந்து இன்னும் 49 நாள்களில் மக்கள் துணையுடன் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உழைக்க பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்றுக் கொள்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல், சமூகநீதி சிந்தனையை அவரது பிறந்தநாளில் போற்றுவோம்!
அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் 78-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சராக தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் நினைவு கூர்கிறேன்.
துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார்; சட்டம் - ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 69% இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அதை சட்டரீதியாக முறியடித்து சமூகநீதியின் மீது தாம் கொண்டிருந்த அக்கறையை நிரூபித்தார். முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.
சென்னையில் பாமக தலைவர் திரு. @DrARamadoss அவர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழக மக்களின் நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம்.
தமிழகத்தில் ஊழல் நிறைந்த மற்றும் பிளவுபடுத்தும் அரசியலைச் செய்யும் திமுகவை வேரறுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வலுவாகவும், ஒற்றுமையுடனும் நிற்கிறது.
Delighted to meet PMK President Thiru @DrARamadoss ji in Chennai and discuss matters at the core of the welfare of the people of Tamil Nadu.
The NDA stands united and strong to uproot the corrupt and divisive DMK in the state.
மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500 : ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல்
பயணிகளை சுரண்ட திமுக அரசு துணை போவதா?
பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்குன் ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது.
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு முறையும் அம்பலப்படுத்தி வருகிறது. அப்போதெல்லாம் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி ரூ.100 அல்லது ரூ.200 கட்டணக் குறைப்பு செய்ய வைப்பது, அதையும் மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது போன்ற ஏமாற்று வேலைகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது.
ஒரு மக்கள்நல அரசின் கடமை மக்களின் பக்கம் நிற்பது தான். திமுக அரசு மக்களின் பக்கம் நிற்கிறது என்றால், சட்டவிரோதமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் கட்டணங்களைக் குறைக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட திமுக அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பக்கம் நின்று அவை மக்களை சுரண்டுவதற்கு துணை போவதையே திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து, தனியார் முதலாளிகளுக்கு ஏவல் செய்வதையே கடமையாக வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை திமுக அரசு தடுக்கத் தவறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இளைஞர் வெட்டிக் கொலை: மருத்துவமனைகள் கூட கொலைக் களங்களாக மாறும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிர்காக்கும் மருத்துவமனைகளைக் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்த ஆதி என்ற இளைஞரை, தலைக்கவசம் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் மகப்பேறு பிரிவுக்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. இந்தக் கொலையை செய்த கூலிப்படையினரை காவல்துறையினரால் இது வரை கைது செய்ய முடியவில்லை.
கொலை செய்யப்பட்ட ஆதி மீது கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பின்னணி கொண்டவர்கள் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அவர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஆயிரக்கணக்கான நோயர்கள் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், கூலிப்படையினர் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்குள் நுழைந்து கொடூரக் கொலையை நிகழ்த்தியிருக்க முடியாது. கொலையாளிகள் தப்பி ஓடியதைக் கூட காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளை கண்காணித்தல், மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளித்தல் என இரு அடிப்படை பணிகளிலுமே காவல்துறை தோல்வி அடைந்து விட்டது.
கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக் குத்து, தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை என புனிதமாக மதிக்கப்பட வேண்டிய இடங்களில் கூட படுகொலைகள் நிகழும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருக்கிறது. கொலை நடக்காத நாள்களே இல்லை என்ற நிலை மாறி ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 கொலைகள் நடக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை திமுக அரசு சீர்லைத்திருக்கிறது.
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒரே வ்ழி திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவது தான். பாதுகாப்பான தமிழகம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து திமுகவை விரட்டியடிப்பார்கள் என்பது உறுதி.
@CMOTamilnadu@tnpoliceoffl