மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கனிவான கவனத்திற்கு!
---------------------------------
சென்னை தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை தலைமையகத்தில் டிஐஜியாக பணியாற்றி வரும் திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 25 ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு, ரயில்வே, ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி, தனது நேர்மை மற்றும் திறமையின் மூலம் காவல்துறையில் தனித்த முத்திரை பதித்துள்ளார்.
தாம் பணியாற்றிய அனைத்து இடங்களிலும், உடன் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அலுவலர்களை மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் அணுகுபவர் என்ற நல்ல பெயரை பெற்றுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி சிறப்பான சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால், அவருடன் பணியாற்றி வரும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு பெண் உயர் அதிகார��யின் மரியாதையையும் கண்ணியத்தையும் பொருட்படுத்தாமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, டிஐஜி திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்களை குறித்து அவதூறு பரப்பி வரும் அலுவலர்கள் மீது உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், காவல்துறை உயரதிகாரிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம���.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான மற்றும் திறமையான உயர் அதிகாரிகள் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் பணியாற்றும் சூழலை உருவாக்குவது அரசின் முக்கிய கடமையாகும். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆயுதப்படையில் உயர்பதவியில் சிறப்பாக பணியாற்றி வரும் இந்த பெண் அதிகாரியின் நற்பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாத வகையில், தமிழக அரசு உடனடி மற்றும் நியாயமான நடவடிக்கை எடுக்க ���ேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @tnpoliceoffl
— பெ. ஜான்பாண்டியன், M.A.,
நிறுவனர் & தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
பள்ளிகள், குடியிருப்புகள் நிறைந்த மதுக்கரை மெயின் ரோ��்டில் செயல்படும் இந்த டாஸ்மாக் காரணமாக பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இளம் வேட்பாளர் @VigneshTvkCbe @CMOTamilnadu இதை கண்டு கொள்வாரா?
#மதுக்கரை #TASMAC #kinathukadavu
Coimbatore Corporation Ward 97, Srinivasan Nagar Road work has been left incomplete for over a month. One side is done, but the other side is full of exposed iron rods, stones, and uneven surface. School children use this road daily High risk of accident.
@CbeCorp@CollectorCbe
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட மாண்புமிகு திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் @CPRGuv இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்த திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், நீண்டகால அரசியல் மற்றும் பொது சேவை அனுபவம் கொண்டவர். துணை குடியரசுத் தலைவராகவும், ராஜ்யசபையின் தலைவராகவும் பொறுப்பேற்கும் இவர், இந்திய அரசியலமைப்பின் காவலராகப் பணியாற்ற உள்ளார்.
அவரது தலைமையில், சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மேலும் வலுவடையும் என உறுதியாக நம்புகிறோம். அவரது ��னுபவம், மக்கள் நலனில் அக்கறை மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மையை மதிக்கும் அணுகுமுறை ஆகியவை ராஜ்யசபையின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும்.
திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், ராஜ்யசபை புதிய உயரங்களை எட்டி, இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வலு சேர்க்கும் என முழுமையாக நம்புகிறோம்.
இன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் மாண்புமிகு மகாராஷ்டிரா ஆளுநர் திரு.CP.ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.
@CPRGuv@NainarBJP@BJP4TamilNadu@annamalai_k @Murugan_MoS
கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதியின் உறுதியை நிலைநாட்டியுள்ளது.
2019-ல் தமிழகத்தை அதிரவைத்த இந்த வழக்கில், ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் தைரிய��ான சாட்சியங்கள் மற்றும் சிபிஐயின் வலுவான ஆதாரங்கள் இந்த தீர்ப்பை சாத்தியமாக்கியுள்ளன.
நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ₹85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியதோடு, சமூகத்தில் இ��்தகைய கொடிய குற்றங்களுக்கு எதிராக கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. நமது நீதித்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையை மனதார பாராட்டுவோம்.
நீதி வென்றது!
#PollachiCase
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி தலைவர் இளைஞர்களின் Ideal Leader டாக்டர். JP.வியங்கோபாண்டியன், அவர்கள�� 05/05/2025, திங்கள்கிழமை காலை: 9.00, மணிக்கு கோவை இல்லத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இரா.அமுதமுரளி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் C.N.அக்பர்ஷெரிப்,
அடக்குமுறைக்கு எதிராக கவிதையால் கர்ஜித்த பாரதிதாசன் அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழ் மண்ணின் மைந்தனாக, கவிதையால் புரட்சி விதைத்தவர் பாரதிதாசன் அவர்கள், மனித நேயத்தின் குரலாக ஒலித்த பாரதிதாசனின் நினைவு தினத்தில், அவரது இலக்கியப் பயணத்தை நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்துவோம்.
#Bharathidasan
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் தேனாம்பேட்டை - காமராஜர் அரங்கத்தில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், மண்டலச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் & மாவட்ட செயலாளர்கள் உரையாற்றி 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"தேவேந்திர குல வேளாளர்" மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற��், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு, சாதிவாரி கணக்கெடுப்பு, மீனவர்கள் பாதுகாப்பு, நியாயமான மக்களவை தொகுதி மறுசீரமைப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலில் மக்கள் விரோத திமுக அரசை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்பது உறுதி, வெற்றிப்பாதையில் அயராது உழைப்போம் என உறுதியேற்போம்.
அமமுக பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன் அவர்களின் சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி.
இந்த விழாவில் முன்னாள் முதல்வர் திரு. O பன்னீர் செல்வம் அவர்கள், பாஜகவின் ��ிரு. கரு. நாகராஜன் அவர்கள் மற்றும் திரு. வேலூர் இப்ராஹிம் அவர்கள், பாமகவின் திரு. பாலு அவர்கள், புதிய நீதிக் கட்சியின் திரு. AC சண்முகம் அவர்கள், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்கள், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திரு. திருமாறன் ஜி அவர்கள் கலந்து கொண்டனர்.
சமூக நல்லிணக்கத்திற்கு என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியுடன் செயல்படும் என உறுதி���ளித்து ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.
@TTVDhinakaran @OfficeOfOPS @KaruNagarajan @ACSHANMUGAM1 @DrRavipachamuthu @kcthirumaran @PMKAdvocateBalu
சக்தி பீடங்களில் ஒன்றான அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி நிறைவ�� பெற்றது. அதே தினத்தன்று விடையாற்றி உற்சவம் தொடங்கியது. இதன் நிறைவு நாளையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மகிழம்பூ போன்ற பல்வேறு மலர் மாலைகள் அணிந்து பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனை நிகழ்வில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
திமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் @SavukkuOfficial வீட்டின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக அரசுக்கு எதிராகப் பேசினாலே கைது நடவடிக்கைகள் மற்றும் இது போன்ற வீட்டைச் சூறையாடும் நடவடிக்கைகள் என்பது கோழைத்தனமான செயலாகும். திமுகவின் இது போன்ற மக்கள் விரோத பாசிச போக்கை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனிமேலும் இது நிகழ்வுகள் நடக்காதவாறு அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin@CMOTamilnadu
இது தான் திமுக மற்றும் காங்கிரஸ் பேசும் ஜனநாயகம் மற்றும் கருத்துரிமையா ? ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழல் புகார் வைத்த���ரின் வீட்டைச் சூறையாடிவிட்டால் ஊழல் செய்தது யாருக்கும் தெரியாது என நினைக்கிறாரா முதல்வர் ?
@SavukkuOfficial @mkstalin
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் & தலைவர் தமிழினவேந்தர் டாக்டர் திரு.பெ.ஜான்பாண்டியன் அவர்களை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் 25.03.2025 செவ்வாய் கிழமை அன்று நடைபெறும் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்விற்கான அழைப்பிதழை வழங்கினார்கள்.
@annamalai_k
Indian-origin astronaut Sunita Williams has safely returned to Earth, marking yet another milestone in space exploration and a warm welcome to Sunita Williams and her team! 🚀🌍🇮🇳 #SunitaWilliams#NASA
ஐரோப்பா கண்டத்தில் சுமார் 5,595 அடி மிக உயரமான மலையின் மீது ஏறிய முதல் தமிழக வீரர் என்ற சாதனை படைத்த கழுகுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு.நல்லசாமி அவர்களின் மகன் திரு.வெங்கடேச சுப்பிரமணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு,
தன் உயிரை துச்சமாக மதித்து சாதனை படைத்த திரு.வெங்கடேச சுப்பிரமணியன் என்ற வீரருக்கு "தமிழக அரசு" ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சாதனை தமிழனுக்கு 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினேன்.
மேலும்,நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்த திரு.வெங்கடேச சுப்பிரமணியன் அவர்களின் எதிர்கால பயணங்களும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
சட்டப்பேரவையில் நடுநிலை வகிப்பது தான் சபாநாயகருக்கு அழகு. அப்படி இருக்கையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்படுவது எந்த விதத்தில் சரியாகும் ?
சபாநாயகர் அப்பாவு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கனிவான��ர், ஆசிரியர் என்றெல்லாம் புகழ்ந்து பேசியுள்ளார்.
இதே அப்பாவு 1996-ல் "கலைஞர் ஒழிக" என்று சொன்னதெல்லாம் ��ுதல்வர் மறந்து விட்டார் போலும். எதிர்க் கட்சித் தலைவர் சொன்னது போல எதிர்க் கட்சிகளின் கேள்விக்குச் சபாநாயகரே திமுக அமைச்சர்களுக்கு முன் பதில் சொல்கிறார்.
சட்டப் பேரவையில் இது போல் சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழியில் தள்ளுவது போல அமைகிறது. ஆகவே சபாநாயகர் இனியாவது நடுநிலை வகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin @CMOTamilnadu
எதிர் கட்சித் தலைவர்கள் மற்றும் MLA-க்கள் சட்டசபையில் பேசும்பொழுது நேரலை துண்டிக்கப்படுவதாக அதை எதிர்த்து கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போதே துண்டிக்கப்பட்ட நேரலை.
திமுகவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு இந்த நேரலை துண்டிப்புகளே சாட்சி.
#budgetsession2025