துரோகம்!! அநீதி!!
1970 களில் தொடங்கிப் பலகட்டமாகப் பலமுறை பேசி பேசி கர்நாடக அரசுகள் ஒன்றுக்கும் ஒத்து வராததால் தான் கோர்ட்டுக்கு போனோம் அங்கே பல வருட போராட்டத்திற்குப் பிறகு நடுவர் மன்றம் உருவானது. அந்த நடுவர் மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைபடுத்தாமல் பல ஆண்டுகளாகச் சண்டித்தனம் செய்தது கர்நாடகா. அதன் பிறகு அதைச் சரியாக நடைமுறைப்படுத்த மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அந்த மேலாண்மை வாரியம் கண்காணித்தும் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீரை கொடுக்காமல் ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு காரணம�� சொல்லி தர மறுக்கிறது கர்நாடகம்.
இவ்வளவு நடந்த பிறகு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார் முதல்வர் விஜய். தன்னை அவ்வளவு பெரிய அப்பட்டக்கராக எண்ணிக்கொண்டு போய்ப் பேசி தண்ணி வாங்க முடியும் என எண்ணும் முதல்வர் அவர்கள் 177.25 டி.எம்.சியையும் வாங்கி வரவேண்டும். இதில் ஒரு டி.எம்.சி குறைந்தாலும் அது தமிழ��� விவசாயிக்கு செய்யும் துரோகம். முதல்வரின் இமேஜ் பில்டிங்காக கர்நாடக பயணம் பேச்சுவார்த்தை அதன் மூலம் சில டி.எம்.சிக்கு ஒப்புதல் என கூட்டணி காங்கிரசோடு சேர்ந்து ஏதேனும் செய்தால் அது இத்தனை வருட சட்ட போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்தால் அது தமிழர்களுக்குச் செய்கிற அநீதி.
பரந்தூரிலிருந்து புதிய வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற, தவெக அரசு இதுவரை ஒன்றிய அரசிடம் கோராதது ஏன்?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
NEET தேர்வு அல்ல, கொலை!!
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து நடத்தும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இணைவீர்!!
நாளை காலை 10 மணி சென்னை ராஜரத்தினம் திடல் அருகில் (25.07.2026)
#Ntk_Protest4BanNeet