Ravikumar (big culprit in helping Sekar Babu) has been appointed back in CMDA. @FelixGerald_TVK will explain which super CM has appointed the same culprit in the same position. #TNwantstoknow@redpixnews please help to get answers.. @SavukkuOfficial
அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன.
அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் களங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர் , தமிழ்நாட்டு மக்களால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார். அதை மேடையில் இருக்கும் சென்னை மாநகர மேயர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர் பிரியா அவர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள திருமதி.கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் தலைகுனிந்து மௌனமாக இருக்கிறார். அவர் அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காதது ஒருபுறம் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், உடனடியாக, சட்டப்படியான முறைகளில், தி.மு.க-வின் இதுபோன்ற அநாகரீக செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும். அதனால், தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வெறும் வார்த்தைகளில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது "அவரே இதுபோன்ற கொச்சையான பேச்சுக்களை கேட்டு ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற அவதூறுகளால், ஆபாசப் பேச்சுக்களால் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி மறைத்துவிட முடியாது. ஆனால், தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி!
ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கண்டன அறிக்கை
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசியவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
தமிழக முதலமைச்சரைப் பொது மேடையில் அவமரியாதையாகப் பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் எதிரான செயலாகும்.
தமிழக முதலமைச்சரைப் பற்றி அவதூறாகவும், இழிவாகவும் பேசியவர்களின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்தகைய தரக்குறைவான பேச்சுகளில் ஈடுபட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து, தமிழக முதலமைச்சரிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சரைப் பற்றி இழிவாகப் பேசப்பட்ட வேளையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி @KanimozhiDMK அவர்களும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா @PriyarajanDMK அவர்களும் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது பொறுப்பான பொது வாழ்வுக்கு ஏற்ற செயலல்ல. இத்தகைய அணுகுமுறை அரசியல் நாகரிகம் மற்றும் பொதுவாழ்வின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
தொடர்ந்து இத்தகைய அவதூறான பேச்சுகளில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து, தங்களது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவதூறுப் பேச்சுகள் அல்ல, கண்ணியமான அரசியலும் பொறுப்பான செயல்பாடுகளுமே அவசியம்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிநபர் அவமதிப்பும் தரக்குறைவான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களது பேச்சிலும் செயலிலும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.
எனவே, தமிழக முதலமைச்சரை அவதூறாகவும் இழிவாகவும் பேசியவர்கள் தங்களது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசியல் நாகரிகத்தையும் பொதுவெளியின் கண்ணியத்தையும் காப்பது அனைவரின் கடமையாகும்.
— மாண்புமிகு கு. ஜெகதீஸ்வரி அவர்கள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
ஒரு கிழட்டு முண்டம் எங்க அண்ணன பத்தி கேவலமா பேசுற அதையும் ஒரு சென்னை மேயர் நாய் சிரிச்சுட்டு கேட்டுகிட்டு இருக்கு.
@PriyarajanDMK நீ எல்லாம் பேசலாமா என்ன மாதிரி ஜென்மம்
மேயர் பதவி என்பது மக்களுக்கான பணி ஆனால் மக்கள் பணி செய்யாமல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் ஒரு அக்கா மக்கள் பணியாற்றும்போது அரசியல் அங்கே இல்லை எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களோடு ஒருங்கிணைந்து பணியை மேற்கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட அரசியல் செய்யும் திமுக கட்சி மக்களுக்கு தேவையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யுங்கள்
அவதூறு பேசுவது நீங்களே பாதிக்கப்படும்போதுதான் தவறா? அல்லது பாதிக்கப்படுவது #CMJosephVijay என்றால் உங்கள் கோபமும், கண்டனமும் காணாமல் போய்விடுமா?
#MayorPriya மற்றும் #Kanimozhi மேடையில் அமர்ந்துகொண்டு, ஒரு பெண் வெளிப்படையாகத் தரக்குறைவாகப் பேசி, #Vijay அண்ணாவின் மரணத்தைக்கூட விரும்பிப் பேசும்போது சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு வார்த்தை கண்டனம் கூட இல்லை. ஒரு சாதாரண எதிர்வினைகூட இல்லை. 🤬
உங்களுக்கு வெட்கமாக இல்லையா @PriyarajanDMK & @KanimozhiDMK 🤬🤡
திமுக மேடையிலே முதலமைச்சருக்கு death abusive பண்ணிட்டு இருக்கானுங்க
கனிமொழி மேடமோ கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க!
எவ்வளவு கேவலமான கட்சி திமுக🤮
முதலமைச்சர் அவர்களை பொது இடத்தில் தரை குறைவாகவும் அருவருக்கத்தக்க உதையும் பேசி உள்ள இந்த பெண்மணி மீது @tnpoliceoffl தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@chennaipolice_@COPTBM
இறப்பு என்பது எல்லாருக்கும் வரும் ஸ்டாலின் அவர்களுக்கும் வரும் அவருக்கும் மூக்கில் பஞ்சு வைப்பார்கள், ஏன் இந்த வயதில் பேசிக்கொண்டிருக்கும் உனக்கும் வரும்.😡😡😡
Cheapest charector @PriyarajanDMK 🤮👎.
உங்களுக்கும் அவர் தான் CM கொஞ்சமாச்சும் நாகரிகம்னு ஒண்ணு இருக்கு ஆன திமுக காரனுக்கு அது இல்லைன்னு மட்டும் தெரியும்.
நீங்க எல்லாம் சோறு தான் திங்கிருங்களா இல்ல வேற எதுவும் திங்கிருங்களா @PriyarajanDMK
So proud of you @KanimozhiDMK Mam..
என்ன ஒரு முற்போக்கான அரசியல் பேச்சு👏🏻பொதுமக்கள் முன்னிலையில்🤦🏻♀️
#CMJosephVijay அவர்களை இழிவுபடுத்திப் பேசுவதுதான் நீங்கள் ஊக்குவிக்கும் அரசியல் நாகரிகமா? 🤷🏻♀️
#DMK எதற்காக கொளத்தூரையும் ஆட்சியையும் இழந்தது என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? ரீல்ஸ்களால் மக்கள் உங்களை நிராகரிக்கவில்லை..உங்கள் கட்சியின் இழிவான பேச்சுகளும் தரம் தாழ்ந்த அரசியலும்தான் அதற்குக் காரணம்🤦🏻♀️ தலைவர்களே பெண்களின் உருவத்தைக் கேலி செய்கிறார்கள்🤷🏻♀️தொண்டர்களோ பொதுவெளியில் தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களில் இறங்குகிறார்கள்..தலைவர் முதல் தொண்டர் வரை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான🤦🏻♀️
@PriyarajanDMK மேயர் பிரியா Mam, இப்படிப்பட்ட இழிவான பேச்சுகளைக் கேட்டு உங்களால எப்படிச் சிரிக்க முடிகிறது? கொஞ்சமாவது பொறுப்புணர்வும் அரசியல் நாகரிகமும் வேண்டாமா? 🤦🏻♀️
மக்களின் வரிப்பணத்தில் ₹4,000 கோடி செலவிட்ட பிறகு, #CMVijay அவர்கள் ரிப்பன் மாளிகைக்கு ஆய்வுக் கூட்டத்திற்காக வந்தபோது நீங்க எங்கே இருந்தீங்க? மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களின் நிலையை அறியக் களத்தில் எங்கே இருந்தீங்க? மற்றவர்களைக் கேலி செய்வதைவிட, திறமையான நிர்வாகம் என்றால் என்ன என்பதைச் செயலால் காட்டுங்கள்..மக்களுக்குத் தேவை பொறுப்பான தலைமைதான்..வெற்று பேச்சுகள் அல்ல😡
#DMKFailsTN இப்படியே போச்சுன்னா, “Opparilin ஒப்பாரிகள்” Book Release பண்ண போறேன் 😂 தலைமை முதல் தொண்டர்கள் வரை ஒரே ஒப்பாரி தான்🤣🤣
#TVKVijay #TVKGovernance #DMKFails
#DMKOpparigal
நடவடிக்கை தேவை 🚨 ⚠️
TVK அரசு அமைந்தது முதல் சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வந்த ஊழல் புகார்கள் குறித்தும் மேயர் பிரியா ராஜன் ஊழலில் சம்பந்தப்பட்டது குறித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியம் எவ்வளவோ பதிவுகள் இட்டும். இதுவரை ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்காததன் விளைவே அவர் நம் முதல்வரை மேடையில் ஒரு பெண் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கும்போது உட்கார்ந்து கைதட்டி எள்ளி நகையாடி சிரித்ததற்கு காரணம். @CMOTamilnadu
இனியும் தாமதிக்காமல் சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் அதில் மேயர் மற்றும் சேகர்பாபுவின் பங்கு குறித்தும் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி உடனே மேயர் பிரியா & சேகர் பாபு மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் தான் சரியாக வரும் மக்கள் கருத்து.
@PriyarajanDMK@PKSekarbabu