கணிப்பும்…நடப்பும்…!
——-
தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகும் நிலை காணப்பட்டதை சில மாதங்களுக்கு முன்பே கணித்தது 👇🏼 நடந்துள்ளது
வன்முறையான கொண்டாட்டம்…!
———-
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டம் வென்ற பிஎஸ்ஜி அணி ரசிகர்களின் கொண்டாட்டம்…
New Era…!
——-
The end of the current era of bi-polar DMK/ADMK politics, and the start of a new era (over the last year).
In fact, I stated that the share of State-wide votes for the TVK in the 2026 General Election would determine if this was the last election of the old era (if TV got around 15%, or the first election of the new era (if TVK got up to 25%).
I must admit that I never saw a scenario in which it would get to 35%, as it did. In fact, I underestimated all three trends in scale and speed.
We are surely in the new era - and some of us have experienced the transition through personal loss. All of us in the arena will now need to learn new skills and adapt.
Change is relentless, and those who cannot adapt become irrelevant.
- Palanivel Thiaga Rajan
@ptrmadurai
செப்பேடுகள்: தமிழ்நாட்டிற்கு வருமா?
—————
ஆனைமங்கலம் செப்பேடுகள் (Leiden Copper Plates) என்பவை முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆவணங்களாகும். இந்தச் செப்பேடுகள், நெதர்லாந்திலிருந்து அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இராஜேந்திரச் சோழன் வழங்கிய செப்பேடுகளில் 5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தில் உள்ள பகுதி, சோழ மன்னர்களின் பரம்பரையை தெரிவிக்கின்றது. தமிழில் உள்ள பகுதி ராஜேந்திரச் சோழனின் தந்தையான ராஜராஜ சோழனின் சாதனைகள் சிலவற்றைச் சொல்கிறது.
ராஜேந்திரச் சோழன் வழங்கிய 21 செப்பேடுகளும் ஒரு மிகப் பெரிய வளையத்தினால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதுடன், அந்த வளையம் ராஜேந்திரச் சோழனின் முத்திரையால் இண��க்கப்பட்டிருக்கிறது.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இந்தியாவிற்கு வந்த நெதர்லாந்து நாட்டினர் சோழ மண்டலக் கடற்கரை பகுதிகளான பழவேற்காடு, சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களால் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டவை, தற்போது இந்தியா வசம் வந்துள்ளது.
——-
இந்தியாவிற்கு திரும்பியுள்ள செப்பேடுகளை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
கணித்ததும்…நடந்ததும்…!
———-
தமிழ்நாட்டில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தொகுதிகள் 1 - 0 - 6 ஆக இருக்கும் என கணித்த நிலையில், 1 - 0 - 8 ஆக அமைந்துள்ளது.
ஆதாரங்களும் & மாறும் வேகமும் - சந்திரபாபு…!
———
திமுகவின் நாளேடான முரசொலி:
‘தனது அரசியல் குருவான அத���வானி முதுகில் குத்தியவர் மோடி’என்று சொன்னார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு.
‘குஜராத் வளர்ந்திருக்கிறதா? ஹைதராபாத் வளர்ந்திருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினார்.
2019 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயத்துக்கு வந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வார்கள் என்பதற்கான ஆதாரங்களை வழங்கினார்.
இப்படி தன்னுடைய பழைய வரலாறுகளை மாண்புமிகு சந்திரபாபு அவர்கள் மறந்துவிட்டு பா.ஜ.க.வுக்��ு ஆதரவாக பேசி வருகிறார்.
இன்று பா.ஜ.க.வை ஆதரிக்கும் வேகத்தில் மாறவும் செய்வார்.
@ncbn
தலைமுறைக்கான தேர்தல்…!
———-
🗳�� "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும்.
அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கூட்டணி…!
——-
எப்படி இருக்கீங்க?
தொகுதி நிலவரம் எப்படி இருக்கு?
திமுக வேட்பாளர்களிடம் மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களிடமும் அலைபேசி வாயிலாக நலமும், நிலவரமும் விசாரிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சதித் திட்டம்…!
——
தமிழ்நாட்டில் ஒரு பலவீனமான ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அப்போதுதான் நம் மாநிலத்தைப் பலவீனப்படுத்தி, டெல்லியிலிருந்து நம்மை ஆட்டிப்படைக்க முடியும் என திட்டம் தீட்டுகின்றனர்.
அந்தச் சதித் திட்டத்தை வீழ்த்த நம்மால்தான் முடியும்
- திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேரணி…!
——-
சேலத்தில் இன்று மாலை 6:30 மணியளவில் மாபெரும் பேரணியானது கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சிலை அருகே தொடங்கி, கோட்டை மைதானத்தில் நிறைவுபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் கலந்துகொள்ளவுள்ளார்.
பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்…!
—————
சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீர்களா?
தமிழ்நாட்டை பாதிப்பது போன்றோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் அனைவரும் பார்த���துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.
தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! தமிழ்நாடு த��து எதிர்ப்பைக் கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம்.
தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்
நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியிருக்கும். 50-கள், 60-களில் பார்த்த பழைய தி.மு.க.வை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
களப்பணி…!
——
மக்களுடனான நம் உறவு எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்துவதுடன், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் உங��களில் ஒருவனான நானே நிற்கிறேன் என்ற எண்ணத்துடன் களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
- திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
175…!
—-
தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.
உதயசூரியனும் நமது சின்னம்தான்.
கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான்.
234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான்.
- திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக: 2021 & 2026…!
————
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை போன்றே பெரிய அளவி��் மாற்றமில்லாமல், 2026 தேர்தலிலும் களம் காணவுள்ளது திமுகவின் உதயசூரியன்.
கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை கூடினாலும், போட்டியிடும் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாத வகையிலான யுக்தியை திறம்பட கையாண்டுள்ளது திமுகவின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குழு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குறிப்பிட்ட கருத்துகளையும் மனதில் கொண்டு, அவர்களுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டம் ஒன்று வைத்திருக்கக் கூடும்.
பரவல்: Meningitis…!
———-
இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில், (meningitis) மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. மூளை மற்றும் தண்டுவடத்தை பாதிக்கும் கடுமையான தொற்றுப் பரவலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.