தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள��� கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் த���்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
ஒரு மிகப்பெரிய தற்குறி கூட்டம் மக்கள் மனநிலையை எந்த அளவுக்கு கேவலமா மாற்றி வச்சிருக்காங்க பாருங்க...
ஒரு குழந்தைக்கு அநியாயம் நடக்குது, இது மத்த ஆட்சியில் நடக்கிறது இல்லையா? அப்படின்னு ஒருத்தங்க கேக்குறாங்க... கேக்குறது யாருன்னு பார்த்தா அவங்களும் ஒரு பெண் தான்...
கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மனசுல இதெல்லாம் தப்பு கிடையாது அப்படின்னு எல்லா விஷயத்தையும் Normalize பண்ணுறாங்க... Even கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை கூட...
மிகப்பெரிய சமுதாய சீர்கேட்டுக்கு வழி வகுத்து கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி...
இதே பெண் அவர்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் இதே மனநிலையோடு இருப்பார்களா என்பது தான் கேள்வி...
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தி���் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரைக்கும் தற்குறித்தனமான GEN Z யோட எழுச்சியை தான் பார்த்திருப்பீங்க ..
இனிமே அறிவார்ந்த GEN Z யோட எழுச்சியை பாப்பீங்க 🔥
@annamalai_k 🇮🇳
#அண்ணாமலை_எனும்_ஆளுமை
2024 ல் அண்ணாமலை கொடுத்த நம்பிக்கை தான்
#TVKVijay
வெற்றிக்கு காரணம்
நோட்டா கட்சியை கூட
11% வாக்குகள் எடுக்க வைக்க முடியும் என்றும்
பல இடங்களில் கூட்டணி 2 ஆம் இடம் வந்ததும்
அதற்கு அவர் கொடுத்த அதிரடி அரசியல், தினமும் மீடியா சந்தித்து, ஒரு எதிர் கட்சி மாதிரி செயல் பட்ட விதம்
ஆளும் கட்சிக்கு இருக்கும் எதிர்ப்பு அலைய ஓட்டுக்களாக மாற்றலாம்
என,
அதை தனது சினிமா பாப்புலாரிட்டி மூலம் செய்தார் விஜய்
இப்பொழுது #TVKVijay சின��மா கவர்ச்சி ரீல்ஸ் அரசியல் மூலம் இளைஞர், இளம் பெண்கள் என ஓட்டு போட வைக்கும் போது
நாம் ஏன் படித்த அறிவான இளைஞர்களுக்கு,
அறிவு சார் அரசியல்
அதிரடியாக செய்ய கூடாது என்ற எண்ணம் தீவிரமாக இருக்கிறது, அண்ணாமலை அவர்களுக்கு
இ��ில் அவர் நீண்ட பயணம்,செய்ய வேண்டி வரும்
ரீல்ஸ்க்கு அடிமையானவர்கள்
ரியாலிடிக்கு திரும்ப நாள் ஆகும்,
அதற்குள் பழைய மொந்தையில் புதிய கள் இறக்க ஆசைப்படும் திராவிட கட்சிகள், முயலும்
அதையும் தாண்டி ஜெயிக்க முடியும் அவரால்
அந்த நம்பிக்கை, அவர் கடந்து வந்த பாதை பார்க்கும் போது உண்மையாகிறது
பார்ப்போம் என்ன முடிவு எடுக்கிறார் என்று
#annamalaii
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படிய��� கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
TASMAC-ஐ மூடினால் கள்ளச்சாராயம், கஞ்சா அதிகம் ஆகும்.
- TVK மதுவிலக்கு துறை அமைச்சர்.
(இதத்தானடா திமுக காரனும் சொன்னான்).
#மாற்றம் என்று விஜய் உங்கள் வாயில் வைத்த வாழைப்பழத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுவைக்கவும் மக்களே. ❤️ எதுவும் மாறாது. Enjoy.