விஜய் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் முட்டு கொடுப்பானுக,
திமுக வாக்கை வாங்கி வெற்றிபெற்ற கூட்டணி கட்சிகளோடு கூட்டணி வைத்தால் முட்டு குடுப்பானுக,
முன்னாள் போராளியை நாடு கடத்தி கைது செய்ய வைத்தால் முட்டு கொடுப்பானுக!
வைக்காத கூட்டணிக்கு சீமானை கடிப்பானுக!
தூய தமிழ்தேசியவாதிக💀
நாம் தமிழர் கூட்டணி வைப்பது
அண்ணன் சீமான் பொது வேட்பாளர்
இது எல்லாம் கட்சியின் முடிவு.
பாலியல் தவெகன்களும், மகீரிஸ் டாப்பாக்களும் ,முத்திய பத்திரிகையாளர்களும் , கரடி கார்டூனிஸ்களும், பால் டாப்பாக்களும், கட்சியில் ஆட்டையைப் போட்ட திருடர்களும் ஓட்டைகளை பொத்திக் கொண்டு இருக்கவும்
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம் தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.
தமிழ்நாடு என்ற சொல்லாடல் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதை பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
என்று சிலப்பதிகார காட்சிக் காதையில் பாடும் இளங்கோவடிகள்
“‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
என்று வாழ்த்துக் காதையில் பாடுகிறார்.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.” என்று பாடுகிறது பரிபாடல்
தொல்காப்பியத்திற்கு பதினொராம் நூற்றாண்டில் உரை எழுதிய இளம்பூரணர் தெளிவான கேள்வி-பதிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டு தெளிவாக வரையறுக்கிறார்.
“மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்” என்றும்
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்” என்றும் பெரிய புராணத்தில் பாடுகிறார் சேக்கிழார் பெருமான்.
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ” என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! என்று தமிழ்நாடு தமிழ்நாடு என்று கொண்டாடுகிறார் பெரும்பாவலர் பாரதியார்.
அப்பெருமை மிக்க வரலாற்றுப் பெயரை மீண்டும் சென்னை மாகாணத்திற்கு இடக்கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 79 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய் நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ நாம் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம்.
‘தமிழ்நாடு’ என்று பெருமிதத்தோடு அழைத்தாலும் தமிழர் நிலத்தில், தமிழர்களுக்கான முதன்மைத்துவம் இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதன் பெருங்கொடுமை. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கன்னடர் ஒருவரை நியமித்துள்ள அநீதி தவெக அரசால் இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உச்ச பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தமிழர் அல்லாத பிறமாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். தவெக அரசின் அதிகார மையங்களாக இருப்பவர்கள் அனைவரும் பிற மாநிலத்தவர்களாகவே உள்ளனர். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் ஏதுமற்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாய்மொழிக்காக தன் இன்னுயிரை இழந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லைதான். ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது.
ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலையுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் எங்கும் விரவிக் கிடக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் சட்டசபையிலயே வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசும் அவலத்தையும், அமைச்சர் பெருமக்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை தப்பும் தவறுமாக தமிழைப் பேசும் அவலத்தையும் தமிழ்நாடு காண்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டு தாய்மொழிக் கல்வி முற்றாக சிதைந்துள்ளது.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்துவிட்ட பிறகும், அதைவிட மோசமானநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். அத்தகு பிறமொழி கலக்கும் அவலநிலை நீங்கி தாய்த் தமிழ்மொழி ஆட்சி அதிகார மொழியாக உண்மையான மாட்சிமை பெற்றிட தமிழ்நாடு நாளில் உளமாற உறுதியேற்போம்.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
NTK சீமான் அண்ணன், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பிற கட்சிகள் தாமாக ஆதரித்தால் ஏற்பேன் என்கிறார்.
ஆனால் TVK Vijay ஆட்சி அமைக்கவே திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவு பிச்சை கேட்டு தான் ஆட்சியே நடத்திக் கொண்டு இருக்கிறார்!
தற்குறிகள் சற்று பொத்திக்கொண்டு இருக்கவும்!
முதல்வர் விஜய் விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்குச் சென்று, இப்போதே பரப்புரையைத் தொடங்கினால்கூட தவறில்லை.
மாறாக, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் மட்டும் வலிய அரசு விழாவைத் திணித்து, அதிகார முறைகேடு செய்து, அங்கு செல்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம்!
சீமான் அண்ணன் போடியிடுகிறேன் என்று அறிவித்த அடுத்த நாளில்
ஊரில் பள்ளிகள் ஆயிரம் இருக்க அம்பை பள்ளியில் முதல்வர் குழந்தைகள் நாள் கொண்டாட போகிறாராம்..
ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகபோகிறது திடிரென மாஞ்சோலை மக்களை அமைச்சர்கள் படையோடு முதல்வர் சந்திக்க போகிறாராம்..
அங்கே போய் சர்ப்பரைசாக அந்த தொகுதிக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கயிருக்கிறாராம்..
கடந்த தேர்தலிலும் மதுரை வந்து இறங்கியவர் அங்கே பிரச்சாரம் செய்யாமல் காரைக்குடி வந்து பிரச்சாரம் செய்தார்.. சட்டசபைக்குள் சீமான் அண்ணன் இருக்கக்கூடாது எவ்வளவு மெனக்கெடுகிறார் விஜய்..
இந்த சண்டை நல்லாத்தான் இருக்கு!!!
எவனோ ஒரு அனாதப்பய: என்ன ப்ரோ, எதிரிகளின் ஆதரவோடு NTK சீமான் அப்படி வென்றே ஆகனுமா?
நான்: நீங்க யாரு ப்ரோ?
அதே அனாதப்பய: TVK Vijay கட்சி ப்ரோ!
நான்: ஏன்டா தீய சக்தி திமுக ன்னு சொல்லிட்டு அவங்க ஓட்டுல MLA ஆன VCK Congress CPI CPIM ஆதரவுல பிச்சை எடுத்து ஆட்சி அமைச்சிட்டு பேச்சு மயிரப்பாரு! தற்குறி!