கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் பிள்ளைகளுக்கு 5 இலட்சம் நிதி உதவி வேண்டும் என்று யாரும் வீதிக்கு வந்து போராடவில்லை அந்தப் பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தை கருதிக்கொண்டு 5 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி உதவி அளித்தீர்கள்
காலை உணவு திட்டம் வேண்டும் என்று எந்த ஒரு பெற்றோரும் உங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை நீங்கள் செயல்படுத்திய திட்டத்தால் பல ஏழை குழந்தைகளின் வயிறு நிறைந்தது
கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை
பெரியார் நூலகம் கோயம்புத்தூர்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
பஞ்சப்பூர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் இது எதுவும் வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை யாரும் வைக்கவில்லை
உயர் கல்விக்கு செல்லும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று எந்த ஒரு கோரிக்கையும் உங்களிடம் வரவில்லை
உயர் கல்விக்குச் செல்லும் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று யாரும் உங்களிடம் வந்து முறையிடவில்லை
ஐஏஎஸ் ஐபிஎஸ் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக மாதம் உதவித்தொகை வேண்டும் என்று உங்களிடம் யாரும் வந்து கோரிக்கை வைக்கவில்லை
இல்லம் தேடி மருத்துவம் வேண்டும் என்று எந்த ஒரு மருத்துவ பயனாளியும் உங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை
இல்லம் தேடி நியாய விலை கடைகளில் உள்ள பொருட்கள் அறுபது வயதுக்கு மேற்பட்ட ஒரு வீடுகளுக்கு வந்து சேர வேண்டும் என்று யாரும் உங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை
பலப்போட்டி தேர்வுகளுக்கு தயாராக முதல்வர் படைப்பகம் வேண்டும் என்று யாரும் உங்களிடம் வந்து கோரிக்கை வைக்கவில்லை
கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி வேண்டும் என்று எந்த ஒரு மகளிரும் உங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை
இப்படி யாரும் எந்த கோரிக்கையும் வைக்காமலே அவர்களின் தேவைகளை அறிந்து முன் நின்று நலத்திட்டங்களை தீட்டி அவர்கள் வாழ்க்கையில் முன்னேற காரணமாய் இருந்திருக்கிறீர்கள்
சுயமரியாதை உள்ள ஒவ்வொருவரும் இதை தன் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்திருப்பார்கள்.
Reshared...
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை. எப்போதும்போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி.
திராவிட மாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் அவர்களின் வழியில் மக்கள் பணி என்றும் தொடரும். 🖤❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள். கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் சமத்துவநாள் என்று அறிவிக்கப்பட்ட நன்னாள்.
'என்னைவிட உயந்தவரும் கிடையாது; என்னைவிட தாழ்ந்தவரும் கிடையாது" என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளை நனவாக்க உழைத்துவரும் இயக்கம் நம் திராவிட முன்னேற்றக்கழகம்.
மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை சீரழிக்கத்துடிக்கும் பா.ஜ.க - அதன் அடிமையான அ.தி.மு.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி அம்பேத்கரின் சமத்துவத்தை உறுதிசெய்யும் #திராவிடமாடல் அரசு தொடர உறுதியேற்போம்.
#Ambedkar #EqualityDay #சமத்துவ_நாள்
தமிழ்நாட்டின் அடையாளங்களைச் சொல்லும் மெரினாவில் கல்வியின் பெருமையைச் சொல்லும் “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”!
குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - சுற்றுலாப் பயணிகள் கூடும் தமிழர் கடற்கரையான மெரினா நெடுக, உழைப்பாளர் சிலை - விடுதலை வீரர்கள் சிலைகள் - தமிழ் வளர்த்த ஆன்றோர் சிலைகள் உள்ளிட்ட சிலைகளுடன், தமிழ்நாட்டின் கல்விப் பெருமையைச் சொல்லும், “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”-யைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர்கள் கல்வியை இறுகப்பற்றிக் கொண்டால் போதும், ஒருபோதும் நாம் வீழ மாட்டோம்! #வெல்வோம்_ஒன்றாக!
ஆண்டுகள் பல நூறு வாழ்ந்து அனைத்தும் மக்களின் துயர் துடைக்க உழைப்பு, உழைப்பு என ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் வாழ வேண்டும் பல்லாண்டு என தங்களின் பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன் தலைவா...
#ஸ்டாலின்_தொடரட்டும்
Warmest birthday greetings to my dear brother and the Honorable Chief Minister of Tamil Nadu, Thiru @mkstalin. Your steadfast leadership and dedication to the welfare of the people continue to be a source of inspiration. On this occasion, I also salute your unwavering resolve in protecting the democratic and secular ethos of our country against the forces of divisiveness. As we stand together to uphold the constitutional values that define our country, I wish you a year of good health, happiness, and continued success in serving the people.
Wishing the legend @arrahman a birthday filled with the same peace and joy his music gives the world.
Keep reimagining the future of sound every single day.
#ARRahman#HappyBirthdayARRahman#HBDARR
2026 புத்தாண்டு தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஆண்டாக அமையட்டும்.
2026-இல் திராவிட மாடல் 2.o நிச்சயம் மலர, கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சாதனைகள் தொடர, ஓரணியில் திரள்வோம், உற்சாகமாக உழைப்போம்!
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
#HappyNewYear2026
#HappyNewYear2026
மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்; தமிழ்நாட்டு மக்களான நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்!
Marching ahead towards a resounding victory; we, the people of Tamil Nadu, will rise together and succeed.
'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்
ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.