Happy to Release the first look poster of Actor GeorgeVijay's Short Film #Aarambam
A hard hitting story on #SexualHarrasment
Written n Directed by @Georgevijaymn
@yowayogesh
@SSumanthu
Dop @ravan_tr
Editor @gowrishankar
Dialogue @rajeshjagadeesan
#georgevijay
���ோயில்கள் கட்டுவதைவிட கழிப்பறைகள் கட்டுவதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் எனப் பேசியவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. இந்த வீடியோவில் ‘கோயிலுக்கு பதிலாக’ என எந்த இடத்திலும் ஜோதிகா சொல்லவில்லை. நீங்கள் அயோக்கியத்தனம் என சொல்வது மோடியின் கருத்துக்கான பதிலாகத்தான் இருக்கும்!
மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை, உறை கிணறுகளை பெயரளவில் மூடுவது பயனற்றது. தங்கள் செலவில் தகுந்த முறையில் மூடி இனியொரு இடர் நேராமல் காக்க கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் முன்வந்திருக்கிறது. மூட��்படாத கிணறுகள் குறித்த தகவல்களை கீழ்க்கண்ட எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.
8939999062
அரசுப் பள்ளிகளுக்கு முடிந்த உதவியை செய்ய சொல்கிறது கல்வித்துறை. உதயமார்த்தாண்டபுரம் அரசு நடுநிலை பள்ளிக்கு TV வாங்கி கொடுத்திருக்கிறார்கள் திருவாரூர் மாவட்ட நடிகர் சூர்யா
நற்பண��� மன்றத்தினர். கடைக்கோடி கிராமங்கள் வரை நீளுகிற கல்வி உதவிகளுக்கு நன்றி @Suriya_offl
@rajsekarpandian
மூன்றாம் பருவம் தொடங்கி இருக்கும் நிலையில் பல்வேறு சிக்கல்களால் அரசின் இலவச நோட் நிறைய பள்ளிகளுக்கு கொடுக்கப்படவில்லை. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பேராவூரணி ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு இலவச நோட் வழங்கி தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார் கனிமொழி. பாராட்டத்தக்க பணி!
நிலத்தை உழுது போட்டால் அதிலிருக்கும் பூச்சி புழுக்களை சாப்பிட பறவைகள் நிறைய வரும். ஆனால், ரசாயன உரமும் பூச்சிக் கொல்லிகளும் மிகுதியான பிறகு பூச்சி புழுக்களும் இல்லை; பறவைகளும் இல்லை. விஷத்தை விதைத்து விஷத்தை அறுவடை செய்வது தொடர்ந்தால், பூச்சி புழு போலவே நாமும் காணாமல் போவோம்.
வேளாண்மை, இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகளைக் கேட்கும் போதும் படிக்கும் போதும், எனக்���ு மட்டும் அல்லாது நம் எல்லோருக்கும் சேர்த்து நான் எடுத்துக் கொள்கிற குறிப்புகள்தான் என் கீச்சுகள்.
புயலால் பெரும் பாதிப்புக்கு ஆளான செருவாவிடுதி தண்டாகுளக்கரை கிராமத்தில் வீடுகள் கட்டிக் கொடுத்து, தங்கள் இல்லத்தில் கொண்டாட வேண்டிய பொங்கலை எங்களுடன் கொண்டாடி, உண்மையான ஆறுதல் எப்படி இருக்கும் என்பதை நிரூபித்த @Suriya_offl@Karthi_Offl மன்றத்தினருக்கு வாழ்நாளுக்குமான நன்றி!
மறுபடியும் வாழை இலையில் பூ மடிக்கிறார்கள். தூக்கு வாளியில் டீ வாங்குகிறார்கள். பனை மட்டையில் கறி கட்டுகிறார்கள். மந்தாரை, வாழை, பூவரசு, தேக்கு இல���களில் உணவு பரிமாறுகிறார்கள். பாலித்தீன் தடை தைத் திருநாளை இன்னும் பேரழகாக மாற்றி இருக்கிறது. பொங்கல் நல் வாழ்த்துகள் நெஞ்சங்களே...
#நம்மாழ்வார் நினைவு நாளில் விவசாய காட்சிகளோடு #விஸ்வாசம் பட டிரெய்லர் ரிலீசாகி இருப்பது சிறப்பு. கலப்பையுடன் அஜீத், நெற்கதிர் கட்டுடன் நயன்தாரா காட்சிகளை பார்க்கிறபோது விவசாயம் இனி தவிர்க்க முடியாதது என்பது உறுதியாக தெரிகிறது. விஸ்வாசமும் விவசாயமும் சேர்ந்து ஜெயிக்கட்டும்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் கிராமத்தை சேர்ந்த திருமலை என்கிற விவசாயியின் வீடு இது. சேதங்களை கடந்து உயிர்சூழ் வாழ்வு வாழ கற்றுக்கொடுக்கிறது இந்தக் குடிசை. 2018-ன் வலிகளைக் கடந்து, விவசாயிகள் வெல்லும் வருடமாக விளங்கட்டும் புது வருடம்!
#Welcome2019