கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?
வாங்க பார்க்கலாம்...
✦ கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
✦ மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு; மதுரை மாவட்ட எல்லைக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தவும் தடை விதிப்பு
✦ 11 நாட்களுக்கு முன் பதவி விலகிய ஜென்சன் ஹுவாங் என்விடியா நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் மீண்டும் நியமனம்
✦ சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 27 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு
✦ இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை தாண்டிய பயணிகள் ரெயில் சேவையை இரு நாட்டு தலைவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 உயர்வு; 1 சவரன் - ரூ.93,720க்கும், 1 கிராம் - ரூ.11,715க்கும் விற்பனை
✦ திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக, முதல்-அமைச்சர் விஜய், அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் உடன் அவசர ஆலோசனை
✦ அலுவலகம் அல்லது முக்கிய பணிகளை வாட்ஸ்அப்பில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்; வாட்ஸ்அப் பயனர்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
✦ மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
#KallakurichiMLA | #MlaArulVignesh | #TVKMLA | #Madurai | #Thiruparankundram | #ThiruparankundramDeepam | #KarthigaiDeepam | #Thiruvannamalai | #TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #GOLD | #GOLDRate | #GOLDPrice | #DailyThanthi
"ஜென்சன் எந்தத் தவறும் செய்யவில்லை; தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த பிறகே இயக்குநர் குழு ஏற்றுக்கொண்டனர்" - அதிபர் ட்ரம்ப்
#NVIDIA#Trump#JensenHuang#WorldNews#Dailythanthi