சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த க��க இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம்.
சமகால அரசியல் சூழலில் சமூக வலைதளத்தின் வாயிலாக, கழகப் பணி-மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்து,
கலந்துரையாடினோம்.
மேடைப்பேச்சு தொடங்கி, சமூகவலைதளம் வரை திறன் வாய்ந்த செயற்பாட்டாளர்களாக இளம் பேச்சாளர்கள் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை, இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதி செய்தது.
@dmk_youthwing @uyirinummelana
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் ச��ர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கி���து.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
உண்மையிலேயே ஒடடன்சத்திரம் சக்கரபாணி ஒரு hero தான் .. பாத்துக் கத்துக்கங்கய்யா ..
முப்பது வருஷமா ஒரே எம்.எல்.ஏ 💐💐💐
@r_sakkarapani
DMK should celebrate this .. Not an easy feat ..
Please friends .. pass it on to everyone ..
தி.மு.க. இளைஞர் அணி
மாவட்ட - மாநகர - மாநில
அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் : 1
வாக்களித்த மக்களுக்கு நன்றி.
நட��்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மீதும், கழகத் தலைவர் அவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 2
கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!
2026 சட்டமன்றத் தேர்தலில், கொள்கை உறுதியோடு மதச்சார்பின்மை சக்திகளை ஒன்றிணைத்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை’ உருவாக்கி, தேர்தல் களத்தில் நம்மையெல்லாம் வழிநடத்தி, முதன்மை தொண்டராய் ஓய்வில்லாமல் உழைத்து, 73 சட்டமன்றத் தொகுதிகளில் நம் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற முதன்மை காரணமாக விளங்கிய
நம் கழகத் தலைவர் அவர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 3
இளைஞர் அணி நிர்வாகிகளுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்!
2026 தேர்தல் களத்தில், தாய்க் கழகத்துடன் இணைந்து கழகத் தலைவர் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஓய்வி���்லாமல் உழைத்த இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 4
இளைஞர் அணிக்கு வாய்ப்பளித்த
கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கு இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, நமது நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்த நம் கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும், வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 5
எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துகள்!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற கழக இளைஞர் அணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கி, வழிநடத்தும், கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றியையும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர் அணிச் செயலாளர் அவர்களுக்க��� வாழ்த்துகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 6
ஜூன் - 3 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் - சிறப்பாகக் கொண்டாடுவோம்!
ஜூன் - 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவை, கருப்பு - சிவப்பு கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, இளைய தலைமுறைக்கும் சென்றுசேரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்றுச் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் வீ��ியோக்களாகப் பகிர்ந்து சிறப்பாக கொண்டாட கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அதன்படி கழக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை மக்களுக்கு பயன்படும் வகையில் எழுச்சியுடன் கொண்டாட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 7
கழகத் தலைவர் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குத் துணை நிற்போம்!
தேர்தல் களத்தில் கழகம் வெ��்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் - பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிய இணையதளம் ஒன்றை துவக்கியதோடு, தொகுதிதோறும் சென்று நேரடியாக அனைவரையும் சந்திக்கவும் ஆய்வுக்குழுவை நியமித்திருக்கிறார்
நம் கழகத் தலைவர் அவர்கள். கழகத் தலைவர் அவர்களின் இந்த முன்னெடுப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கழகத் தலைவர் அவர்கள் கழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் அனைத்துவகை மறுசீரமைப்பிற்கும் கழக இளைஞர் அணி
துணை நிற்பதோடு, வரும் காலங்களில் கழகத் தலைவர் அவர்கள் இடும் கட்டளைகளை - பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி, கழகப் பணியை மென்மேலும் வீரியத்துடன் மேற்கொள்ள உறுதியேற்கிறோம்.
தீர்மானம் : 8
முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம்!
கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் கழக உடன்பிறப்புகள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது! மறைக்க முடியாது!
நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் ��ழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.
இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல்
ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக��� கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது.
அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த
புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்.
தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொ��்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள்.
சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
தீர்மானம் : 9
ஆட்சிப் பொறுப்பேற்ற 13 நாளில் தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு!
மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திடுக!!!
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்திட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்த கழக அரசு மீது விஷமப் பிரசாரங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து, சேற்றை வாரி வீசியவர்கள் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்க��டுமை போன்ற குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன..
= கோவையில் 10 வயது சிறுமி கடத்தி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
= புதுக்கோட்டையில் நீதி��ன்றத்தில் ஆஜராக வந்த சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான்.
= வந்தவாசியில், ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
= படப்பை அருகே இரட்டைக் கொலை.
= தூத்துக்குடியில் மது தகராறில் கொலை.
= சேலத்தில் மாணவர் அடித்துக் கொலை.
= மணலி புதுநகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வெட்டி படுகொலை.
= விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை எனக் குற்றப் பட்டியல் நீள்கிறது.
பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து இன்று தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தறிகெட்ட செய்திகள் வருகின்றன.
ஆனால், முதலமைச்சர் கோட்டைக் கழற்றினார், கூலிங் கிளாஸ் போட்டார், பொலிரோ கார் ஓட்டிப் பார்த்தார், பேட்டரி காரில் பவனி வந்தார் என்ற ரீல்ஸ்களால் இவற்றைத் திசை தி���ுப்ப பார்க்கிறார்கள்.
இந்த வெற்று விளம்பர நடவடிக்கைகளுக்குப் பதிலாக முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும், ரீல் ஆட்சிய�� நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும் எனவும் தி.மு.க. இளைஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம்.
இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந்த வேகத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்!
#DMKYW
@Joel_Dmk@Inba_AN_Ragu@ilaiyadmk@keprakashdmk@AbdulmalikDmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுது��ோம்!
@Udhaystalin @dmk_youthwing