தொகுதியே தாய் வீடு, தொகுதி மக்கள் அனைவரும் உற்ற உறவுகள் என்று பேதம் பார்க்காமல் அன்பு செலுத்தும் எங்கள் அருமை அண்ணன் மாண்புமிகு அமைச்சர் பசுமை நாயகர் திரு.அர.சக்கரபாணி BA அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்🖤❤️🌄
#HBDSakkarapani@mkstalin@sunnewstamil
மாண்புமிகு கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டேன்.
#DMK
தடைகளைத் தாண்டி சாதனை படைக்கத் துடிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களின் தன்னலமற்ற சேவையும், வழிகாட்டுதலும் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்.
@rashtrapatibhvn
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தலைமையில் தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், "வாய் திறங்க CM" என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#வாயை_திறங்க_CM
சினிமாவில் 'விவசாயத்தை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்' என்று வசனம் பேசி நடித்த விஜய் அவர்களே, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்திய விவசாயிகளை, காவல்துறையை வைத்து குண்டுக்கட்டாகக் கைது செய்து அடக்குமுறையை ஏவிவிட்டுஇருக்கிறீர்களே மேடைக்கு மேடை சொன்ன மாற்றம் இதுதானா?
#TVKFails
ஒட்டன்சத்திரம் மக்களின் குரலாக எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க தொடர்ந்து ஏழாவது முறையாக மாபெரும் வெற்றியடைய செய்த ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களையும், கழக நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் காட்டும் அன்பும், பாசமும் எனக்கு மென்மேலும் ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் விளைவிக்கின்றது.
எந்த லட்சணத்தில் ஆட்சி செய்கிறார்கள்?
மின் துறையின் ஹார்டு டிஸ்க்குகள் மாயமாகியுள்ளது; பொறுப்பும் இல்லை, பாதுகாப்பும் இல்லை, பதிலும் இல்லை. அரசு அலுவலகங்களுக்குள்ளேயே இந்த நிலை என்றால், தமிழ்நாட்டை எந்த லட்சணத்தில் ஆட்சி செய்கிறார்கள்? இது ஆட்சியா?
- தி.மு.க மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் கண்டனம்.
#TamilKaAmutharasan #DMK #TVKVijay #TVKFails #TamilNadu #KalaignarSeithigal
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு”களுக்கான 152 இடங்களை “அகில இந்திய தொகுப்பிற்கு” மாற்ற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றம் 29.05.2026 அன்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது என்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேற்கண்ட இடங்களில் 63 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாவது கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 152 இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த மே 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் “தேர்வு கமிட்டி” இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறைவு செய்த சூழலில் தமிழ்வாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்து, நிரப்பப்படாமல் இருக்கும் 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போது தி.மு.க. அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வதை தடுத்து வைத்திருந்தது.
இந்தச் சூழலில் தங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு மே 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அந்த மாணவி மேற்கோள் காட்டிடும் N. Karthikeyan Vs State of Tamilnadu என்ற தீர்ப்பு இந்த வழக்கிற்குப் பொருந்தாது” என்பதையும், “அகில இந்திய இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை”, என்பதையும் “மாநில இடங்களை ஒப்படைத்த பிறகு ஒன்றிய அரசு குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைக்கக் கூடாது” என்ற தகவலையும் முறைப்படி எடுத்து வைக்கவில்லை என்று தெரிய வருகிறது. அது மட்டுமின்றி, ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைப்பதை பற்றி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் இடங்களை ஒப்படைத்த பின்பு சதவீதத்தை குறைத்து “All India merit list”மூலம் இடங்கள் நிரப்பப்பட்டால் , அது தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே “அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்” என ஒப்புக்கொண்ட காரணத்தால், “நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதயநோய், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் இட ஒதுக்கீடு, கழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022-இல் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது. அந்த இட ஒதுக்கீட்டு உரிமை தற்போது தங்கள் அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது.
ஆகவே மாண்புமிகு முதலமைச்சராகிய தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
***
#DMK
சொந்த ஜோசியருக்கு அதிகாரப்பூர்வமா பதவி கொடுக்க முயற்சி பண்ணி பல்பு வாங்குன நீங்க ஒரு உண்மையான பெரியாரிஸ்ட்டா...
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails#TVK#TVKVijayFails