கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு கிராமத்தில், சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் (34), கடந்த ஜூலை 9-ஆம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாகக் கூறி தென்தாமரைக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜூலை 13-ஆம் தேதி சபரிவர்மனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகச் சிறைத்துறை காவலர்கள் அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத, கைது செய்யப்படும்போது ஆரோக்கியமாக இருந்த ஒருவருக்கு எப்படி மாரடைப்பு வரும்? இது திட்டமிட்ட "காவல்நிலையப் படுகொலை" எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தற்போது சபரிவர்மனின் உடற்கூராய்வு (Autopsy) முடிவுகள் வெளியாகியுள்ளன. அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான இரத்தக் காயங்கள் இருந்துள்ளன. வலது கையில் 6 இடங்களிலும், வலது மற்றும் இடது கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் நெஞ்சுப்பகுதியில் கடுமையான காயமும், பின்னங்கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன; முகம் முழுவதும் சிவந்து போயிருந்தது.
இதைப் பார்க்கும்போது மிகக் கொடுமையான சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு சபரிவர்மன் கொல்லப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது சிறையில் நடந்த மரணமாக இருந்தாலும், இதற்குச் சிறைக்காவலர்கள் மட்டுமே பொறுப்பல்ல.
இது திட்டமிட்ட காவல் படுகொலை. சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ், திருப்புவனம் அஜித்குமார் ஆகியோருக்கு என்ன நடந்ததோ, அதுதான் தற்போது சபரிவர்மனுக்கும் நடந்துள்ளது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கடந்த ஆட்சியில் நடந்த காவல்நிலைய மரணங்களைக் கண்டித்து, "சாரி (Sorry) வேண்டாம், நீதி வேண்டும்" என்று அறிக்கை விட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இந்தப் பச்சைப்படுகொலைக்கு இதுவரை வாய் திறக்காதது ஏன்?
நாகர்கோவிலில் லாக்கப் டெ**த் | உடம்பெங்கும் காயம் | கதறும் உறவினர்கள் | கண்டுகொள்ளாத முதல்வர் |
https://t.co/TLErhAEE4J
#JusticeForSabarivarman #PoliceBrutality #TamilNadu #TVKVijay @TVKVijayHQ
@Swiggy very very worst experience with order id : 242728059070770 . Ordered for elderly person and you guys casually cancelled it after placing. How can they manage? Pls respect to customer trust
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள்.
தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.
எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கர்நாடகாவை சார்ந்த திரைப்பட (ஜனநாயகன் ) தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை நியமித்துள்ளார் முதல்வர் விஜய் அவர்கள்
தமிழக பிரதிநிதியாக இருக்க தமிழ்நாட்டை சார்ந்த யாருக்கும் தகுதியில்லையா ? @CMOTamilnadu
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அஇஅதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
@AIADMKOfficial
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மின்துறை தலைமை அலுவலகத்தில் Hard Disk-கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, யூடியூபர் திரு. @SavukkuOfficial பல்வேறு தகவல்களைக் கூறி #பொய்க்கால்_குதிரை_அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எப்போதும் மைக்கைப் பிடித்துக்கொண்டு அப்படிப்பட்ட ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சி, Transparency என்றாலே நாங்கள் தான் என்ற ரேஞ்சுக்கு பேசும் மின்துறை அமைச்சராக இருக்கும் @CTR_Nirmalkumar, ஏன் தனது துறையில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய திருட்டை பற்றி செய்திகளில் வெளிவருவதற்கு வருவதற்கு முன் கூறவில்லை? எங்கே போனது Transparency?
இதுபோன்ற அதிமுக்கியமான வழக்கை உடனடியாக CBCID-யிடம் ஒப்படைக்காமல், ஏதோ சாதாரண திருட்டு வழக்கு போல அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறுவது பொறுப்புள்ள செயலா? இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விடலாம் என்று நினைத்தீர்களா?
திரு. சவுக்கு சங்கர் கூறுவது உண்மையெனில், மின்துறை Vigilance இயக்குனர் அறையில் இருந்தே திருட்டு நடக்கிறது என்றால், இந்த ஆட்சி எப்படி Vigil ஆக இருப்பதாக கருத முடியும்?
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கூறியது போல, இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
Data Theft நடந்திருக்கிறது.
எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தூயசக்தி என்கிறார்கள்… ஆனால் செயல்பாடுகளை பார்த்தால் நாம் வைத்த #பேரசக்தி என்ற பெயருக்கான பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது!
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்
தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று
தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?
இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார்.
இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?
“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?
ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?
இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh