நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!
நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.
காஷ்மீர் இளைஞர்கள் மீது பயன்படுத்தப்பட்ட பெல்லெட் குண்டுகள், தில்லி மாணவர்கள் மீதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண்ணில் பாய்ந்த குண்டால் இந்த மாணவருக்கு பார்வை போய்விட்டது.
காஷ்மீர் அடக்குமுறை இஸ்ரேல் மாடல். தில்லி அடக்குமுறை காஷ்மீர் மாடல்!
There will be no justice for students until NEET is abolished.
Today, we, the DMK MPs, staged a protest within the Parliament premises demanding the complete abolition of NEET, which continues to shatter the dreams of countless students aspiring to pursue medical education.
நீட் ஒழியும் வரை, மாணவர்களுக்கு விடிவில்லை!
நம் பிள்ளைகளின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #DMKinParliament #SaveStudents
ஒரு வழியாக ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை இன்று வாசித்து முடித்தேன். 75 ஆண்டு கால நெடிய பயணத்தை 30 நாட்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான்கைந்து கட்டுரைகள் என படித்து முடித்த போது இந்த நூலுக்கான உழைப்பைத் தந்த அனைவரையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அரசியல் தொகுப்பில் 33 கட்டுரைகள், சமூகம் என்ற பிரிவில் 20 கட்டுரைகள், பண்பாடு என்ற கட்டுக்குள் 20 கட்டுரைகள், பொருளாதாரம் பற்றி 6 கட்டுரைகள் (கழகம் ஆற்றிய பொருளாதாரப் பணிகளுக்கு 6 கட்டுரைகள் என்பது மிகவும் குறைவு), தோழமைக்குரல்கள் என்ற அடுக்கில் 23 கட்டுரைகள் (இப்போது படிக்கும் போது, கொள்கையற்ற அரசியல் தான் பலரை என்ன பாடுபடுத்துகிறது என்று நகைப்பாக இருக்கிறது), கழகக் குரல்களாக 10 கட்டுரைகள் என மொத்தம் 112 கட்டுரைகள்.
கழக வரலாற்றையும் தமிழ்நாட்டு வரலாற்றையும் படித்தவர்களுக்கு ஏறத்தாழ எல்லாமே அறிந்த செய்திகள் என்றாலும் அவற்றை ஓரிடத்தில் தொகுத்து அழகுறக் கொடுத்திருப்பது இதை ஒரு சிறந்த குறிப்பு நூலாக (reference) வைத்துக் கொள்ள உதவும். கட்டுரையாளர்கள் தேர்வும் மிகச் சிறப்பு. தங்கள் துறைகளில் கரை கண்டவர்கள். திமுகவினருக்கான புதிய வரலாற்றுக் கையேடு இந்த நூல்.
திராவிடம் என்ன செய்தது என்று கேட்கும் எல்லோரும், குறிப்பாக இளைய தலைமுறை இதைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். அரசியல் பார்வைகள் வெவ்வேறு வழிகளில் இருந்தாலும் இக்கால தமிழ்நாட்டு அரசியலில், தமிழ்நாட்டின் நலத்தில், தமிழ் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல்.