சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.
இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.
கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.
இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.
ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்.
ஸ்கூல்ல அடிச்சா அங்கேயே திருப்பி அடிக்கும் தெம்பு - தைரியம் - திராணி இல்லாம அடிச்சவன் பேரையெல்லாம் நோட்டில் எழுதிட்டு போயி வீட்ல அம்மா அப்பா கிட்ட சொல்லி அழுகிற பிள்ளையா இருக்கும் போல இருக்குது, சட்டமன்றத்திலேயே பதில் சொல்ல தெரியாத தற்குறி.
#TvkFails
ஆட்சி எப்படி நடத்துவது என்று தெரியாமல் ஆட்சிக்கு வந்து விட்டார்கள் இனி எதை எடுத்தாலும் தடைகளா தான் அமையும்...
இவர்கள் எப்படி ஐந்து வருடம் தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றப் போகின்றார்கள் என்று தெரியவில்லை ஆனால் மாற்றம் என்று மார்பு தட்டி கிட்ட Genz பாய்ஸ்... க்கு வாழ்த்துக்கள்..
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
இனிமேல் ஒன்று செய்யலாம். சட்டசபைக்கு செல்வதற்கு முன், உதய் அண்ணாவிடம் என்ன பேசப் போகிறார் என கேட்டு தெரிந்துக் கொண்டு அதற்கான பதிலை தயார் செய்துக் கொண்டு செல்வது நல்லது!!
சட்டசபையில் பதிலடி கொடுத்தது போலவும் இருக்கும்.
தன் ஆட்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.
திமுக செயல்படுத்திய திட்டங்களை நிறுத்த முற்ப்பட்டாலோ....
ஒன்றிய பாஜக அரசுக்கு அடிபணிந்தாலோ...
உன் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் இருக்கின்ற வரையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் இந்த தமிழ்நாட்டை ஆள்கிறார் என்று பொருள்..🖤❤️🔥🔥🔥🔥
இன்னும் தலைமைச்செயலகமே போகல இதுக்குள்ள கஜானா காலி வெள்ளை அறிக்கை ஜெயிக்கவா போறோம் ன்னு நினைச்சு நீ அள்ளி விட்டஎந்தவாக்குறுதியும்நிறைவேற்ற முடியாது என்பதால் பழி போடுவதற்கு இப்பவே தயார் ஆகிட்ட! 2021 அதிமுக பெரும் கடனோடு தான் ஆட்சியை விட்டுசென்றதுஆனால்ஸ்டாலின் இப்படியெல்லாம் பேசல
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!