🔥1991 – தமிழ்நாட்டின் புதிய வரலாறு படைக்கப��பட்ட நாள்!🔥
மக்களால் நான் - மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் இன்று.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது முதல் அமைச்சரவையில், டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல ம��த்த அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் 31 வயது இளைஞனான எனக்கு முக்கிய பொறுப்பை வழங்கினார்கள்.
அடிமட்ட தொண்டனான என்னை அடையாளம் கண்டு அமைச்சரவை வரை அழைத்து சென்றவர் அம்மா!!
பல்வேறு இன்னல்களையும், சிக்கல்களையும் தாண்டி, கழகத்தை மீட்டெடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற புரட்சித்தலைவி அம்மாவின் வரலாற்று அமைச்சரவையை நினைவுகூரும் நாள்!
#PuratchiThalaiviAmma
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
இன்று தந்தையர் தினம்…
என் வாழ்வுக்கும், என் அரசியல் பயணத்திற்கும் ஆழமான அடித்தளமாக இருந்தவர் என் தந்தை துரைராஜ் அவர்கள்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, அதன் பின் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1949ஆம் ஆ��்டு செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய காலத்திலேயே கழக உறுப்பினராக இணைந்து பொதுப் பணியில் தன்னை அர்ப்பணித்தவர்.
இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உறுதியுடன் பங்கேற்று, அதற்காக சிறைத் தண்டனையும் அனுபவித்தவர்.
1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான காலத்தில் சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பொறுப்பேற்று, மண்டலக் ���ுழுத் தலைவர், கல்விக் குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் மக்களின் நலனுக்காக இடைவிடாது செயல்பட்டவர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆர் அவர்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் துணைத்தலைவராக இருந்த காலத்தில் உறுப்பினராக இணைந்து பணியாற்றிய பெருமையும் பெற்றவர்.
அரசியல் என்பது அதிகாரத்தின் உயரம் அல்ல, மனிதர்களின் நம்பிக்கையை சுமக்கும் பொறுப்பு என்பதை தனது வாழ்நாளின் மூலம் உணர்த்தியவர் அவர்.
அவர் நடந்த பாதை இன்று என் பயணத்தின் திசை.
அவர் வாழ்ந்த நெறி இன்று என் பொதுவாழ்வின் அடையாளம்.
அவர் விட்டுச் சென்ற மதிப்புகளோடு, மக்களுக்கான என் பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!!!!
*வாயில நல்லா வருது!!!*
திருச்சி கிழக்கில் தனக்கு வாக்களித்த மக்களை வரவழைத்து நன்றி சொன்ன முதல்வரின் வாயில் வராத சில வ���ஷயங்கள்...
*குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 - வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள்* - *மாதம் ஒருமுறை மின்சார அளவீடு* - *5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி* - *மாவட்ட வாரியாக சிறப்பு திட்டங்கள்*
ம���தல்வரான பின்பும் எதிர் கட்சிகளை எதிரிகளாக சித்தரித்து சினிமா அரசியல் செய்யும் முதல்வர் அவர்களே - திருச்சி வரை சென்று வீர வசனம் பேசியதற்கு பதிலாக தாங்கள் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் ஒருசிலதாவது வாயில வந்திருந்தா நல்லாருந்துருக்கும்....
கழகத்தின் மீது அளவற்ற பாசமும், அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்த கழக உடன்பிறப்பின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது அர்ப்பணிப்பும், கழகத்தின் மீதான பற்றும் என்றும் நினைவில் நிலைத்திருக்கும்.
இறைவனின் திருவடிகளில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
D.ஜெயக்குமார்
இன்று (31/05/2026) இராயபுரம் - K.C.S சங்கரலிங்க நாடார் உயர்நிலை பள்ளியில் என்னுடன் படித்த நண்பன் திரு.சோமசேகர் அவர்களின் இல்ல விருந்து உபசரிப்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது….
அன்பு சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் மனவருத்தத்தையும் அளிக்கிறது.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாயின் இடம் என்பது எந்த உறவாலும், எந்த சாதனையாலும், எந்த வெற்றியாலும் ஈடு செய்ய முடியாதது. நாம் முதன்முதலில் உலகை அறிந்ததும் தாயின் கண்களில்தான்; அன்பை உணர்ந்ததும் தாயின் அரவணைப்பில்தான்.
பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பெருமையுடன் கண்டு மகிழ்ந்த அந்த அன்னையின் பிரிவு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரிழப்பு.
இந்தத் துயரமான நேரத்தில், தாயாருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற நினைவுகளே சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு ஆறுதலாகவும் மனவலிமையாகவும் அமையட்டும்.
அன்னையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— D.ஜெயக்குமார்
பேரவைத் தலைவர் அறையில் (Office of the Honourable Speaker)....
பேரவைத் தலைவர் எனும் பெரும் பொறுப்பை எனக்களித்து, இந்த சாதாரண தொண்டனுக்கும் சரித்திரத்தில் இடமளித்த புரட்சித் தலைவியின் புகழ் என்றென்றும் வாழும்....
#என்றென்றும்_அம்மா
பசியை போக்கிய வரலாற்றை
புகைப்பட அரசியலால் மறைக்க முடியாது…
“அம்மா” என்ற பெயர்
மக்��ள் மனதில் பத��ந்த நம்பிக்கை!
அதை மாற்ற நினைக்கும் தவேக அரசியல்…
மலிவான விளம்பரமாகவே முடியும்...
#tvkfails #vijay #admk #jayakumar #royapuram
I feel deeply saddened for Tamil Nadu, especially Royapuram, for not choosing someone who always stood by the people & supported them in difficult times. @djayakumaroffcl sir is truly gold. I hope you contest from a place that recognizes your true value.
https://t.co/nZOoP0MNxT
இன்று மே 21 —
1991 ஆம் ஆண்டு இதே நாளில், முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். 1991 தமிழ���நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று கொண்டிருந்த சூழலில், அ.தி.மு.க. சார்பில் ராயபுரம் தொகுதி வேட்பாளராக தேர்தல் பிரச்சாரத்திலும் கழகப் பணிகளிலும் இருந்தேன்.
சென்னை ராஜாஜி மண்டபத்தில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது, டாக்டர் நாவலர், அய்யா S.D. சோமசுந்தரம், புலவர் இந்திரகுமாரி, செ. மாதவன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினேன்.
மேலும், அந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை, திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களுடன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
அந்த நாளின் நினைவுகள் இன்றும் மனதில் ஆழமாக பதிந்துள்ளன.
1991 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் முதல்முறையாக இராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளராக அறிவித்த போது பிரச்சாரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம்...
இன்றும் அந்த பசுமையான நினைவுகளுடன்...🌱🌱🌱🌱🌱