”பிரதமர் மோடி சொல்வதை எல்லாம் தமிழ்நாட்டில் செயல்படுத்தவே இங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி தொடர்கிறது”
- கழக தலைவர் @mkstalin அவர்கள் குற்றச்சாட்டு.
திருவாரூர் அர.திருவிடம் அவர்கள் தொகுத்த, சீதை பதிப்பக வெளியீடான 'திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை' என்ற திராவிட இயக்க வரலாற்று நூலை இன்று வெளியிட்டேன். அன்று ராஜாஜி - இன்று அமித்ஷா, அன்று சமஸ்கிருதம் - இன்று நீட் நூறாண்டு கடந்தும் துரத்தும் இந்த ஒற்றுமைகளை பற்றி பேசினேன்.
உயரப் பறக்கும் @arivalayam கொடி
அஞ்சி நடுங்கும் பாசிச கைத்தடி
சிறையெல்லாம் எமக்கு பள்ளிக்கூடம்
சீறியெழும் மாணவரணியை உம் புழல் சிறையா தடுத்து நிறுத்தும்?!
திமுக மாணவரணி தலைமையகம்
#dmkstudentwingprotests
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய
சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல���ல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நம் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்களின் பிரச்சார சுற்றுப் பயண விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில், பொதுக்கூட்டதுக்கு கூடும் அளவுக்கு இளைஞர்கள் திரண்டனர். மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்த இளங்கோ, சையது அப்பாஸ் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்
கோவை தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணியின் ஆய்வுக்கூட்டம் பெரிய நெகமம் பகுதியில் இன்று நடைபெற்றது. அண்ணன்கள் கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற இதில் உறுப்பினர் சேர்க்கை உள்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
கோவை வடக்கு மாவட்டம் மேட்டு���்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். கழகத்துக்குக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கற்றுத் தந்த அண்ணாவின் புகழைப் போற்றுவோம்.
திருப்பூர் தெற்கு மாவட்ட குண்டடம் ஒன்றிய செயலாளராக தொடர்ந்து 11முறை ���ொறுப்பேற்று கழகப் பணியாற்றியவர் ஏ.சுப்பராயன். மூத்த முன்னோடியான இவர் சில மாதங்களுக்குமுன் காலமானார். அவரின் இல்லத்துக்கு சென்று உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினேன். சுப்பராயன் அவர்களின் புகழ் ஓங்குக!
அரசுகளின் அவலங்களை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும் வகையில் தி.மு.க இளைஞர் அணியில் சேர வி��ும்பும் தோழர்கள் https://t.co/3wHzIzefSe என்ற இணையதளத்தின் வழியாகவும் தங்களை இளைஞரணியில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளலாம�� #DMKYouthWing https://t.co/qVI0Hc2A4R via @YouTube
‘பேனர்கள் கூடாது’ என்று கேட்டு��்கொண்டிருந்தேன். ‘இது, இதற்கான நிகழ்ச்சி’ என்பதை உணர்த்த மேடையில் வைக்கப்பட்ட அந்த ஒன்றைத் தவிர கூடுதலாக ஒரு பேனர்கூட வைக்கவில்லை என்பது மகிழ்ச்சி. இந்தப் புரிதலே உங்களை இன்னும் நெருக்கமாக உணரவைக்கிறது. தொடரவும். நன்றி, வாழ்த்துகள். #BANBANNERS
‘இந்த பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும்’-சுபஸ்ரீயின் தந்தை தெரிவித்த இந்தக் கருத்துக்களே நமக்கான பாடம். விதம்விதமாக பேனர் வைப்பது, சால்வை அணிவித்து பட்டங்க��் சொல்லி முழங்குவது, பட்டாசுகளை கொளுத்திப்போடுவது… இவை எதுவும் நமக்கிடையேயான அன்பை-பிணைப்பை அதிகரிக்கப்போவதில்லை. #BANBANNERS
தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, 'சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நம் அணி அதிக கவனம் செலுத்தும்' என்ற தீர்மானத்தின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் உள்ள கே.கே.நகர் குளத்தைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதுபோன்ற பணிகள் தொடரும்.
தென்மேற்குப் பருவமழையில் சிக்கித் தத்தளிக்கிறது நீலகிரி. இந்த பேரிடரால் சிலர் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர். பலர் தங்களின் உடைமைகளை இழந்து நிற்கின்றனர். மக்களைக் காக்கும் களப்பணிகளில் நம் இளைஞரணியினர் ஈடுவேண்டும். மக்களுக்காக உழைப்போம்; மக்கள��டு நிற்போம்; நீலகிரியை காப்போம்!
நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பதற்கு எதிர்க்கட்சி வரிசையில் மேலும் ஒரு சிப்பாய் தேவை என வேலூர் மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.
மாநில உரிமை,மொழி உரிமை,
கூட்டாட்சி,மதச்சார்பின்மை ஆகியவற்றை காக்க திமுகழகம் நாடாளுமன்றத்தில் ஆற்றிவரும் சிறப்பான பணியை அங்கீகரிக்கிறது இந்த வெற்றி!
வேலூர் நாடாளுமன்றத் தேர���தலில் வென்ற தி.மு.க வேட்பாளர் @dmkathiranand வாழ்த்துகள். வெற்றியைத் தேடித்தந்த தலைவர் @mkstalin அவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், களத்தில் உழைத்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞரணி தோழர்களுக்கும் வாழ்த்துகள். வெற்றியை கலைஞருக்குச் சமர்ப்பிப்போம்.