யார் சீமான்?
மக்கள் போராடிய இடமெல்லாம் நின்றவர். தமிழர் குரல் ஒடுக்கப்பட்ட போதெல்லாம் குரல் கொடுத்தவர்.
2011-ல் அணுஉலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் நின்றவர் சீமான்.
அப்போது விஜய் என்ன செய்துகொண்டிருந்தார்?
போராட்டக் களத்தில் வியர்வை சிந்தாதவர்கள், இன்று அரசியல் பாடம் எடுக்க வருவது தான் வேடிக்கை!
திரையை விட்டு தரையில் தலைவனைத் தேடுங்கள் தற்குறிகளே. அங்கே தான் சீமானின் வரலாறு கிடைக்கும்.
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்த���வை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக�� கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்த��ண்டு!
மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!
“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldBloodDonorDay
வீட்டுக்கொரு மரம்
-------------
வளர்க்��� வேண்டியதெல்லாம் வளர்த்தாகிவிட்டது
மரம் தான் பாக்கி
மரம் வளருங்க!
காட்டில் வளர்ந்ததையெல்லாம்
அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள்
எனவே இனி வீட்டில் வளருங்க!
வீடே இல்லையே என்கிறீர்களா?
அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்க!
அதனடியிலேயே குடியிருக்கலாம்!
பிள்ளைகளை வளர்த்தால் சோறு கேட்பார்கள், வேலை கேட்பார்கள்
எனவே மரமே வளருங்க!
வீட்டுக்கொரு ஆண்மகன் வளர்ந்தால் போராட வருவான்
இது அகிம்சை நாடு
எனவே மரம் வளருங்க!
வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அவர்களை வளர்த்தீங்க
அவர்கள் காட்டில் மழை பெய்கிறது!
நீங்கள் காய்ந்து போனீர்கள்!
அவர்களுக்கு வாங்கும் கரங்கள்!
மரங்களுக்குக் கொடுக்கும் கரங்கள்!
அவர்கள் வெயிலை��் தருபவர்கள்;
மரங்கள் நிழலைக் கொடுப்பவை;
எனவே இனியாவது மரங்களை வளருங்க!
என்றைக்காவது ஒருநாள் உங்களுக்குச் சூடுசொரணை வந்தால்
தடிகள் செய்யலாம்!
அதனால்தான் சொல்கிறேன் மரங்களை வளருங்க!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
ஸ்கூல் பையன அடிச்ச நீ லாம் பேசலாமா ஈரோடு மாநகர் மாவட்டம் தவெக கே பி ராமலிங்கம்
அன்னைக்கு உன்ன காப்பாத்துனதே இப்ப இருக்க ஈரோடு மாவட்ட செயலாளர் மனோகரன் அண்ணன் தான்
தவெகவுக்கு போனோமா ஒரு கவுன்சிலர் சீட்டு வாங்குனோமா இருக்கனும்...
திரும்ப எதாவது தவறா வந்தா எங்களட இருக்கு இன்னும் நிறைய ஆதாரம் வேணுமா 🤣
தமிழீழத்துக்கு அவர் என்ன செய்தார், என்று தெரிந்து கொண்டு தா #தமிழினத்தலைவர்_பிரபாகரன் அவர்களே அழைத்து பேசினார். 2009 போர் காலத்தில் இங்கு போராட்டத்தில் இருந்தார்
அவருக்கு கிடைத்த பத்மஶ்ரீ விருதை தூக்கி எறிந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை கண்டனர்
இயக்கமே அறிவிப்பு கொடுத்திருக்கு
வைகை அணை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது... அதை தூர்வார எதற்கு ஒன்றிய அரசின் அனுமதி??
பாஜக விசுவாசி நிர்மல் குமார் தன்னுடைய விசுவாசத்தை நிரூபிக்க தமிழ்நாட்டின் உரிமையை ஒன்றிய அரசுக்கு விட்ட��க்கொடுப்பதை ஏற்க முடியாது...
வ��கை அணையை தூர்வாருவதற்கு கே.கே ரமேஷ் என்பவர் 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
2024 பிப்ரவரி மாதம் வழக்கை விசாரித்தபோது அப்போதைய தமிழ்நாடு அரசு நீர்மட்டம் 69 அடியாக உள்ளது 40 அடிக்கு கீழே குறையும்போது அணையை தூர்வார முடியுமென்று விளக்கம் கொடுப்பட்டது...
இதையடுத்து வழக்கை விசாரித்த "நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி ஆர். விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, வைகை அணையில் நீர்மட்டம் 40 அடிக்கு மேல் இருப்பதால் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை என்று குறிப்பிட்டது. நீர்மட்டம் 40 அடிக்குக் கீழே வரும்போது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தாமதமின்றி அதற்கான நிதியை ஒதுக்கி அணையில் தூர்வாரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தனர்."
தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 26 அடி மட்டம் மட்டுமே உள்ளது... இப்போது தூர்வாரும் பணியை ஆரம்பிக்க தவெக அரசுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை...
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் மீது குற்றஞ்சுமத்துகிறார் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்.
நடவடிக்கை எடுக்கத் துப்பு இல்லையா முதல்வரே? @TVKVijayHQ
4 Million views for Annan's Voice😱 Unexpected reach in Instagram💥
இதுதான் சரியான நேரம், அண்ணனை பற்றிய காணொளிகள் அதிகம் பரப்புங்கள்!
IT wing அமைதியாக இருப்பது நல்லதல்ல 🤷♂️
#ntk#seeman
அனுமதியற்ற கல்குவாரிகள் அனைத்தையும் மாண்புமிகு கனிவளத்துறை அமைச்சர் மூடியதாக அறிவித்தாரே !
பிறகு எதற்கு கனிவளக்கொள்ளை நடப்பதாக வேலை வெட்டி இல்லாமல் சாலை மறியல் செய்கிறார்கள் ?
என்று யாராவது கேட்டால் அவன் மகேந்திரனாக இருக்கலாம் .