தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள்; தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.
தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.
தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.
அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது, நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்!
15 நாட்களில் வோட்டர் ஐடி (Voter ID) ரெடி..!
18 வயது நிரம்பி விட்டதா? உடனடியாக வாக்களிக்கும் உரிமையை பெற வாக்காளர் அடையாள அட்டைக்கு கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி உடனே விண்ணப்பித்து Voter ID பெறுங்கள்.
✅ 1. ஆன்லைனில் விண்ணப்பிப்பது (புதிய வோட்டர் ஐடி):
வெளியூர் இடமாற்றம் / புதிய பதிவு / பெயர் சேர்க்கும் போது
👉 இணையதளம்:
https://t.co/2TtRxBG0J8 (அல்லது NVSP - National Voter Services Portal)
✅ செய்ய வேண்டியவை:
1. Register/Create an account (மொபைல் OTP மூலம்)
2. Form 6 (New Voter Registration) தேர்வு செய்யவும்.
3. தேவையான விவரங்களை உள்ளிடவும்:
• பெயர்
• பிறந்த தேதி
• முகவரி
• ஆதார், புகைப்படம், முகவரி ஆதாரம் (PDF/JPG)
4. Submit செய்து, Reference ID சேமிக்கவும்.
5. அந்த ID மூலம் விண்ணப்ப நிலையைத் தொடர்ந்து பார்வையிடலாம்.
✅ 2. மொபைல் செயலி வழி (Mobile App)
Voter Helpline App (iOS/Android)
• Open the app
• “New Voter Registration” → Fill Form 6
• Documents upload → Submit
✅ 3. Manual (வட்டாட்சியர் அலுவலகம் வழியாக):
• உங்கள் அருகிலுள்ள ஈ.சி.ஐ அலுவலகம் அல்லது தாலுகா/முனிசிபல் அலுவலகத்தில் போய் Form 6 பெற்று நிரப்பி கொடுக்கலாம்.
📑 தேவையான ஆவணங்கள்:
1. வயது ஆதாரம் – பிறப்பு சான்றிதழ் / 10ம் வகுப்பு சான்றிதழ் / பாஸ்போர்ட்
2. முகவரி ஆதாரம் – ரேஷன் கார்டு / வங்கி பாஸ்புக் / லீஸ் அடிப்படையிலான வாடகை ஒப்பந்தம்
3. புகைப்படம் (passport size)
⏱️ 15 நாட்களில் பெற எப்படி?
1. ஆன்லைனில் சரியாக எல்லா ஆவணங்களையும் தெளிவாக அப்லோட் செய்தால்
2. உங்கள் பகுதியில் வேகமாக செயல்படும் Booth Level Officer (BLO) இருந்தால்
3. Verification visit உடனடியாக வந்துவிட்டால்
→ உங்கள் ID 10-15 நாட்களில் தயார் ஆகலாம்.
📥 வோட்டர் ஐடி டவுன்லோட்:
அங்கீகாரம் (approval) கிடைத்ததும், Digital Voter ID (e-EPIC)
https://t.co/2TtRxBG0J8 → Login → Download e-EPIC
உதவி தேவைப்பட்டால்:
📞 Voter Helpline: 1950 (இலவசம்)
📧 [email protected]
விரைவில் பெற விரும்பினால் ஆன்லைன் வழி தான் சிறந்தது. BLO விசிட் ஆனதும் மிக விரைவில் approve ஆகும்.
#VoterID #India #Election #KHByte
Visited 20 breweries over 16 days on the Bangalore Craft crawl, 2024. Going in chronological order of last to first, and my favourites and the hamper given for finishing the crawl are at the end of the thread.
Here's my story
(longish thread) two parts, Part 1
General Advice for Bali:
Rain: It can rain anytime in Bali, so it's better to keep an umbrella or raincoats if you are traveling with kids.
Mosquito Repellent: Buy some mosquito repellent, especially during your stay in Ubud.
Beaches: Visit some great beaches like Dreamland in Uluwatu.
Pool Toys: If you are staying in accommodation with a private pool, you can even rent pool toys for your kids through [WeFloat Bali](https://t.co/yE5atmgEIN). They will place the inflatable toys in your pool before your arrival.
Relax and Enjoy: The most important thing is to relax and enjoy your vacation. No need to rush and try to see all the places—it's not a race. Take your time and give the kids their time. You will anyway visit Bali again.
Feel free to DM me if you have any queries related to your upcoming Bali trip!
#TravelWithKids #Bali #FamilyTravel #ccgeek #ccgeek
Looking for remote jobs ?
YT Jobs is one of the best sites to get them.
You can get jobs like
1. Channel Manager
2. Script Writer
3. Thumbnail Designer
4. Video Editor
5. YouTube Strategist
6. Creative Director
Go to https://t.co/I9BtzNiEsT and work with creators.