No Sugar Challenge சில விளக்கம்.
இந்த #NoSugarChallenge ஏற்றுக்கொண்டு 18 நாளுக்கு சர்க்கரையை எதிர்த்து போரிடும் பருத்தி வீரர்கள் வீராங்கனைகளே..உங்களுக்கான சிறிய விளக்கம்.
1. No Sugar Challenge என்றால் ஜானி ஜானி எஸ் பாப்பா பாடலில் வரும் வெள்ளை சர்க்கரை மட்டும் அல்ல. கருப்பட்டி, வெல்லம் என அனைத்தும் தான்.
2. No Sugar Challenge என்றால் சர்க்கரையை மட்டும் தான் சாப்பிட கூடாது, சர்க்கரை போட்ட லட்டுவை, ஜாங்கிரியை திங்கலாமா தோழர் என்று ஒரு கேள்வி. பதில் : கூடாது.
3. ஒரு கோப்பை குளிர்பானத்தில் 7 ஸ்புன் சர்க்கரை உள்ளது. அதனால் அதையும் உள்ளே நைசாக தள்ளிக்கொள்ள முயல கூடாது.
4. சர்க்கரை மூளைக்கு தேவையான முக்கியமான மூல பொருள் என்று இதுவரை நீங்கள் நம்பிக்கொண்டு இருந்தால் ஒரு நிமிடம் வெயிட்டீஸ். இது சுத்தமான நல்லெண்ணையில் செய்த தரமான உருட்டு. அது குளுக்கோஸ், அது மிக மிக மிக சிறிய அளவில் தான் தேவை, அதை உடலே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் இயற்கை நம்மை வடிவமைத்து இருக்கிறது.
5. குரோனிக் இல்னஸ் எனப்படும் நாள்பட்ட நோய்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் (எம்.பி.பி.எஸ் படித்த) கலந்து ஆலோசித்து விட்டு கண்டிப்பாக இதில் இறங்கலாம்.
6. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இதுபோன்ற முயற்சியில் இறங்கும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசி என்ன செய்வது என்பதை கேட்டு தெளிவு பெறலாம்.
7. பழங்களில் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை இருக்கிறது, ஆகவே அதனை கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும். ஒரே ஒரு ஒஞ்ச வாழைப்பழம் இல்லாமல் காலையில் காக்கா வராது என்ற பிரச்சனை இருப்பவர்கள் நல்லதாக ரெண்டு சொம்பு வெந்நீர் குடித்து ரெண்டு முக்கு முக்கி பார்த்துவிட்டு, முடியவில்லை என்றால் மட்டுமே ஒஞ்ச வாழை பழத்தை மறுபடி நாடலாம். உள்ளே போகும் எதுவும் வெளியே வந்தே தீரும் என்பது நியூட்டன் விதி.
8. தினமும் #NoSugarChallenge என்ற சுட்டியில் ஒரே ஒரு ட்வீட் போட்டால் நான் உங்களை தேடி வந்து உற்சாகப்படுத்துவேன்.
சர்க்கரை என்பது மாபெரும் அரசியல். கார்ப்பரேட்டுகள் இணைந்த மாபெரும் ஆக்டோபஸ். உங்களை சுற்றிலும் பின்னப்பட்ட கண்ணில் காண முடியா சிலந்தி வலை. அதில் இருந்து மீள்வது எளிதல்ல. உங்களை சுற்றிலும் இருக்கும் உறவினர் நண்பர்கள் என அந்த வலையில் பிணைக்கப்பட்டு ஈவில் டேட் பேய் மாதிரி வா வா என்று அழைப்பார்கள். அதில் விழ வேண்டாம். 18 நாள் இதனை வெற்றிகரமாக செய்து முடித்து வாருங்கள் பருத்தி வீரர்களே !!!
Thulasimathi M. Student of VCRI, Namakkal, TANUVAS makes India and the Institution Proud in Badminton Asian PARA games at Hanghzou, China.
Singles Gold Medal and Bronze in Mixed doubles along with Nitesh. Honourable Prime Minister wished the Duo on twitter.
Some தர்க்குரிஷ்🤣 #LEO படம் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியா இல்ல, kotதா... எப்போ தாண்டா நிங்களாம் திருப்தி ஆவிங்க ...
தமிழ் சினிமாவ காப்பாத்தனுனா நீங்களே படம் எடுத்து அந்த கருமத்த நீங்களே பாத்துக்கோங்க.. 😤
#tharkuris
முதல் நாள் முதல் காட்சி!
28 வயதானாலும் அந்த பிடிவாதம் ஏன் இன்னும் குறையவில்லை?என்ன ஆனாலும் FDFS போனும்,சின்ன வயசுல இருந்து கேட்டு வியந்த பிரம்மிப்பு@RamCinemas என்பது தளபதி கோட்டை!
அதும் வாழ்க்கைல ஒரு தடவ @RamCinemas FdFS பாக்கனும் என்பது!
நிறைவேறிய நாள் 19.10.23
@DaniNishanth1
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு வருகின்ற 10ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம் ;
ஒரு நபருக்கு 6500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ; ஏசி வசதியுடன் கொச்சினில் தயாரிக்கப்பட்ட "சிரியாபாணி" என்ற பெயரிடப்பட்ட கப்பல் 7 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து ஒன்றிய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 6500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும். இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட "சிரியா பாணி" என்ற கப்பலில் 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 7 ஆம் தேதி சனி கிழமை காலை நாகை துறைமுகம் வர உள்ள கப்பலின் சோதனை ஓட்டம் 8 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய உள்ளனர். பின்னர் 10 ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளது. KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துள்ளது. துறைமுக நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கை நாட்டிற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Condition of TTFs helmet and jacket after the bike topple . That helmet costs 1.5 lakh rupees . The only reason why he is alive now .
Most of your bikes are not 1.5 lakh rupees . So , never try to be him !