இதைப் பற்றி உதகையில் சுவாரஸ்யமான செய்தி ஒன்று பேசப்படுகிறது. முதலில் டிசைன் செய்யப்பட்ட அந்த உடையில் வந்து இவர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டு பிரதமர் போயிருக்கார். பிறகு ஒரு ஃபாரீன் மீடியா இந்தத் தம்பதிகளைச் சந்தித்து பிரதமரைச் சந்தித்த அனுபவம் எப்படின்னு கேட்டிருக்காங்க! இவர்களோ, பிரதமரா! யாரோ ஃபாரஸ்ட் ஆஃபீசர்தானே வந்துட்டுப் போனாங்க என அப்பாவியா கேட்டிருக்காங்க! இந்தச் செய்தியைக் கேட்டுப் பதறிப் போன பிரதமர் PR குழு, மீண்டும் அவரை அழைத்து வந்து வழக்கமான வடநாட்டு காஸ்டியூம் அணிவித்து படம் எடுக்கச் செய்தனராம்!
பிரதமர் வேலைன்னா சுலபம் இல்லை போல!