சென்னை வெள்ளத்தைப் பார்த்த பிறகும் பாடம் கற்றுக் கொள்ளாத அரசுப் பணியாளர்கள். இடம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டி. முதல்வர் மற்றும் துணை ���ுதல்வர் கவனத்திற்கு #chennaifloods @CMOTamilnadu @Udhaystalin @stali
I strongly condemn the celebration of Hindi Month valedictory function along with the Golden Jubilee celebrations of Chennai Doordarshan.
Hon’ble @PMOIndia,
The Constitution of India does not grant national language status to any language. In a multilingual nation, celebrating Hindi Month in non-Hindi speaking states is seen as an attempt to belittle other languages.
Therefore, I suggest that holding such Hindi-oriented events in non-Hindi speaking states could be avoided, and instead, the celebration of the local language month in the respective states should be encouraged.
சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு @PMOIndia,
நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை.
���ன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும்.
இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை ம���ழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்!
#StopHindiImposition
Arsenic in our rice, pesticides in our spices ... the damage of industrialized agriculture accumulates.
If we don't respect the farmer, if we don't take care of the soil and all its microorganisms, if we don't take care of ponds or lakes and instead keep drilling deeper and deeper for (arsenic laden) water, we will destroy ourselves as a species. One of the fastest growing sectors in Tamil Nadu is the fertility clinic - let's reflect on why.
We have to revere the people who grow our food so they in turn treat soil and water with reverence. We have to connect back with nature.
https://t.co/iYxS6lWi5m
சொந்த மண்ணிலேயே சில தெருக்களில் நடக்கக்கூடாது என்று கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படும் நம் சகோதரர்களுக்கு ஓர் அநாகரிகத் தடை இருந்தது.
அதை எதிர்த்து 1924ஆம் ஆண்டில் போராட்ட��் வெடித்தது. நம் தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக அப்போரில் கலந்துகொண்டார். சிறை சென்றார். தடை தகர்ந்தது. மண்ணில் மனிதர் சமமென நடைமுறை வந்தது.
அவ்வெற்றிப் போரான வைக்கம் போரின் நூற்றாண்டு நாள் இன்று. சமத்துவம் விரும்புவோர் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுவோம். பிறரும் சமத்துவம் விரும்பத் தொடங்கும் வரை போராடுவோம்.
திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் KDMK வேட்பாளர் சூரியமூர்த்தி 10 வருடங்களுக்கு முன்பு பேசிய வெறுப்பு பேச��சு அடங்கிய காணொளி. சிறையில் இருக்க வேண்டிய இந்த நபருக்கு பாராளுமன்ற வேட்பாளராக சீட் கொடுப்பது தான் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் சமூக நீதியா? ஆணவக்கொலையை ஆதரித்து பேசுபவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது தான் உங்கள் கொள்கையா?
இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இவர் மீது மோசடி, திருட்டு மற்று���் கொலை முயற்சி வழக்குகள் (IPC Section 307, 326, 395, 397) இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறது?
#Arappor Know Your Candidates #Namakkal
@arivalayam @mkstalin @ereswaranoffl @ECISVEEP @SpokespersonECI
வன்முறை இல்லாமல் மக்கள் போராட்டங்களின் வழியாக நம்முடைய உரிமைகளை மீட்டு விட முடியுமெனும் நம்பிக்கையை தண்டி யாத்திரை மூலமாக தன்னுடைய சகாக்களுக்கும், இந்தியாவிற்கும் நிரூபணம் செய்தார் காந்தி.
1930 மார்ச் 12-ம் தேதி சத்தியாகிரகத்துக்குப் பயிற்றுவிக்கப்பட்ட 79 போராட்ட வீரர்களுடன் காந்தியார் தொடங்கிய யாத்திரை இந்திய விடுதலை வ���லாற்றின் மாபெரும் திருப்புமுனைகளுள் ஒன்றாக அமைந்தது.
பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து புண்ணான கால்களுடன் 61 வயது முதியவர் தண்டி கடற்கரையில் குனிந்து ஒரு பிடி உப்பை அள்ளி தன் கரங்களை வான் நோக்கி உயர்த்திச் சொன்னார் ‘நம் கையில் இருப்பது வெறும் உப்பு அல்ல. இது இந்தியாவின் கெளரவம். நமது கரங்கள் தாளாதிருக்கட்டும்’
ஆம் பெரியவரே… நீங்கள் தந்து சென்றிருக்கும் அஹிம்சை எனும் ஆக சக்த�� வாய்ந்த ஆயுதத்தால் தேசத்தின் மானம் காப்போம் நாங்கள்.
#DandiMarch #SaltSatyagraha
I am delighted that the President of India has nominated @SmtSudhaMurty Ji to the Rajya Sabha. Sudha Ji's contributions to diverse fields including social work, philanthropy and education have been immense and inspiring. Her presence in the Rajya Sabha is a powerful testament to our 'Nari Shakti', exemplifying the strength and potential of women in shaping our nation's destiny. Wishing her a fruitful Parliamentary tenure.
��யோத்தி #இராமர் விழா:
-------------------------
அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா!
சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
------------------------
ஐந்து வயது குழந்தை இராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோவில். நாடெங்கிலும் இராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக�� கூத்தாடும் வெற்றிக் களிப்பில் சங் பரிவார்கள்.
பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இசுலாமியர்கள்.
1949 இலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்ட இசுலாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலின் விளைச்சலாக- வெற்றி விழாவாக சனவரி 22 இல் அயோத்தியில் இராமர் விழா அரங்கேறுகிறது.
'இராமர் பிறந்த இடம் இதுதான்' என்று நானூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பாபர் மசூதி 1992 இல் அடியோடு பெயர்த்துத் தகர்க்கப்பட்டது. ���சுலாமிய இந்தியர்கள் சிந்திய செங்குருதியில்
மத அடிப்படையிலான ஆதிக்கப் பெரும்பான்மைவாதம் நிலைநாட்டப்பட்டது. 'இராமருக்கே வெற்றி' என்னும் 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கத்தையே ஆயுதமாக உயர்த்திப்பிடித்து இன்று அங்கே இராமர் திருக்கோவில் நிறுவப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கற்பாறையிலிருந்து எடுக்கப்பட்ட கருப்புக் கல்லில் செதுக்கி வடிக்கப்பெற்ற ஐந்து வயது குழந்தை இராமர் சிலை அக்கோவிலின் கருவறையில் ஏற்கனவே நிறுவப்பட்டு, அதற்கு உயிரூட்டும் நிகழ்வுதான் சனவரி 22 அன்று நடைபெறுகிறது. அந்த சடங்குதான் சமற்கிருதத���தில் 'பிராண பிரதிஷ்டை' என அழைக்கப்படுகிறது.
அக்னி குண்டங்களில் நெய் வார்த்து,
பெரும் தீ வளர்த்து, சமற்கிருத மொழியிலான வேதங்களை ஓதும் யாகங்கள் என்னும் வேள்விகளின் மூலம், கற்சிலையாகவுள்ள மழலை இராமருக்கு, பிரபஞ்சத்திலிருந்து 'தெய்வீக ஆற்றலை' ஈர்த்தளிப்பது தான் 'பிராண பிரதிஷ்டை' என்னும் அந்த உயிரூட்டும் சடங்காகும்.
இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர���கள், தனது கைகளால் தொட்டு பால இராமரின் கற்சிலைக்கு உயிரூட்டப் போகிறார். அதற்கு வட இந்திய சங்கராச்சாரிகள��ள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சூத்திரரான மோடி இராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும் !" - என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.
மோடியும் அமித்ஷாவும் இந்துத்துவ செயல்திட்டத்திற்கு ஊழியம் செய்யும் சங்கிகளாக இருந்துகொண்டே சனாதன மரபுகளை மீறுவது, கட்சிக்குள்ளேயே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கலாம். இதில் பெருமை கொள்வதற்கு ஏதுமில்லை. ஏனென்றால், மோடி, அமித்ஷா போன்றவர்கள் சனாதனத்தின் அடிப்படையை எதிர்க்கவில்லை. அதாவது, இது பிராமணர்- பிராமணரல்லாதார் ஆகியோ��ுக்கிடையிலான கருத்தியல் முரண் அல்ல; மாறாக அதிகாரம் தொடர்பான நபர் முரணேயாகும். இதனால் பார்ப்பனீயம் பலவீனமடையாது. மாறாக, இவர்களே பார்ப்பனீயம் என்னும் சனாதனத்தின் பாதுகாவலர்களாக மாறி தொண்டு செய்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள் - குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்.
பிரதமர் மோடி அவர்கள் இதற்காக பதினொரு நாட்களுக்கு விரதமிருந்து வருகிறார். தென்னிந்திய மாநிலங்களில் கோவில் கோவிலாகச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டு நாள்களாக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு திருவரங்கம், இராமேசுவரம், தனுஷ்கோடி கோவில்களுக்குச் சென்று இராமரை வழிபட்டு வருகிறார். இராமேசுவரத்திலிருந்து நேரடியாக அயோத்திக்குச் சென்று பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கிறார்.
உத்தரபிரதேசத்திலும் அத���ைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் சனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்ம��லம் அறியலாம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சனவரி 22 அன்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை. எல்லாம் இராமர்மயமாகி வருகிறது. ஆனால், அடிப்படையில் எல்லாம் தேர்தல்மயமாகி வருகிறது என்பது தான் உண்மை!
அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையா��� நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.
இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா! இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்-பரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, அப்பாவி இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத���துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பாசிச பாஜக கும்பல், இந்துப் பெரும்பான்மைவாதம், இசுலாமிய- கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவரகள் என்றும் பிளவுபடுத்துகிற மக்கள்விரோத அரசியலையே 'இந்துத்துவா' என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர்.
அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு சிலரின் வளர்ச்சிக்கும் அவர்களின் பாதுகாப்புக்குமே ஆட்சி நடத்தியுள்ளனர். அப்பாவி ஏழை எளிய உழைக்கும் இந்து மக்களை ஏய்க்கும் அப்பட்டமான 'இந்து விரோத' ஆட்சியே மோடி ஆட்சி என்பதை இன்று யாவரும் உணரத் தொடங்கியுள்ளனர்.
இராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா.
இதனை அனைத்துத் தரப்பு இந்துப் ப���ருங்குடி மக்கள் யாவரும் உணர்ந்து, சங்- பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தமிழக மின்சார வாரியத்தில் Transformer வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரில் போட்டியிட்ட அனைவரும் ஒரே தொகைக்கு (சந்தை விலையை விட லட்சக்கணக்கில் அதிகமாக) டெண்டர் கொடுத்து அவர்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள். இதற்காக ஏற்கனவே மின்சார வாரியத்தில் முறைகேடு செய்து விரட்டப்பட்ட காசி என்ற நபரை பணியில் அமர்த்தி அவருக்கு Transformer வாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இந்த Transformer டெண்டர் செட���டிங் நடைபெறும் சமயத்தில் அவர் மின்சார அலுவலகம் செல்லாமல் தினமும் தற்பொழுது சிறையில் இருக்கும் அன்றைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வீட்டிற்கு சென்று வேலை செய்கிறார். அவரை பின்தொடர்ந்து சென்று எடுக்கப்பட்ட காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.
Video - https://t.co/YDggxMHHsx
இந்த புகாரை அனைத்து ஆதாரங்களுடன் https://t.co/H0f3nNRjYU அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்கு அனுப்பி 5 மாதங்கள் கடந்து விட்டது. இது வரை இந்த புகார் குறித்து எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை. ஊழல் நடைபெறவில்லை என்றால் புகாரை விசாரித்து அறிக்கை அளிக்க என்ன பயம்.? விசாரணை செய்ய தைரியமாக உத்தரவிடுவீர்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே..!
#Arappor #TransformerScam @CMOTamilnadu @Chief_Secy_TN @TThenarasu @TANGEDCO_Offcl @RajeshLakhani69
இதென்ன உங்கப்பன் வீட்டு சொத்தா?
தமிழக மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை தமிழக மக்களின் துயர் துடைக்க தர மறுப்பவர்கள், தமிழக மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சொத்து குவிப்பவர்கள், தமிழக மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் அவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சட்ட விரோத பேனர் கொடி கம்பங்கள் வைப்பவர்கள் அனைவரையும் பார்த்து மக்களாகிய நாம் இதை ��ான் கேட்க வேண்டும்.
#Arappor