ஆர்.எஸ்.எஸ் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் எந்த சட்டத்தின் கீழும் அந்த அமைப்பு பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
இந்து மதம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா? என்ற ஒரு எதிர் கேள்வியை இறுமாப்புடன் அவர் எழுப்புகிறார்.
கர்நாடக மாநிலத்தில் 20 இலட்சம் சேவக்குகளை தங்கள் அமைப்பு வழியாக உருவாக்கி இருப்பதாக அண்மையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர்மட்ட பிரிவான "பாரதிய பிரதிநிதி சபா"
அறிவித்ததைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆர். எஸ் .எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அரசு சார்பில் ஒரு கடிதம் எழுதினார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சட்ட பூர்வ நிலை ; திரட்டும் நன்கொடைகள்; செலுத்தும் வரிகள் குறித்த விவரங்களை அதில் கேட்டிருந்தார்.
"இதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை ;நாங்கள் எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை; இந்து மதம் என்ன பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?" என்று மோகன் பகவத் போகிற போக்கில் ஒரு செய்தியாளரிடம் கருத்து கூறியிருக்கிறார்.
இது ஒரு மாநில அரசு எழுப்பும் கேள்வி என்பதால் மோகன் பகவத் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
அண்மையில் தனது தலைமை அலுவலகத்தை நாக்பூரில் இருந்து டெல்லிக்கு மாற்றிய ஆர்.எஸ்.எஸ் அதற்கு செலவிட்ட தொகை ரூ.250 கோடி ;எந்த சட்டப் பதிவும் இல்லாத இந்த மாளிகையை திறக்கும் சடங்கு நிகழ்ச்சிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
சட்டப்படி பதிவு செய்ய மாட்டோம் என்று இறுமாப்புடன் அறிவிக்கக்கூடிய துணிச்சல் ஆர்.எஸ்.எஸ்- க்கு எப்படி வந்தது? இதுதான் பார்ப்பனியத்தின் அதிகார வன்முறை!
ஆர்.எஸ்.எஸ் சட்டமீறலை பகிரங்கமாக அங்கீகரிக்கும் ஒன்றிய பாஜக ஆட்சி, பதிவு செய்து செயல்படும் தொண்டு நிறுவனங்களை முடக்குவதற்கும் ஒரே உத்தரவின் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் வழி வகுக்கும் (#FCRA) மசோதாவை கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.
பல தொண்டு நிறுவனங்களை சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டலில் கொண்டு வரப்பட்டுள்ளது இந்த மசோதா.
2014 முதல் 2026 வரை எந்த முறையான காரணங்களும் இன்றி 22,000 தொண்டு நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்து இருக்கிறது ஒன்றிய மோடி ஆட்சி. இந்த நிறுவனங்கள் பள்ளிகள்; கல்லூரிகள்; மருத்துவமனைகள்; ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற அமைப்புகளை நடத்தி வந்தார்கள். இதில் பணியாற்றிய பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளார்கள்.
அமெரிக்காவில் செயல்படும் பன்னாட்டு மத சுதந்திர ஆணையம் 2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக மத சுதந்திரத்தை முடக்கும் திட்டங்களை
உருவாக்கி செயல்படுவது ஆர்.எஸ்.எஸ் என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.
இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ; காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அமைப்பு; பெண்களை உறுப்பினராக அனுமதிக்க மறுக்கும் அமைப்பு;
இந்தியாவில் எந்த சட்டத்தின் கீழும் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று அறிவிக்க முடிகிறது என்று சொன்னால் அதற்கு ஒரே காரணம் பார்ப்பனியம் என்ற இறுமாப்பு.
#இந்திய #ஆட்சி #அதிகாரம் #எந்த #மையப் #புள்ளியில் #இயங்குகிறது #என்பதை #இப்போதாவது #புரிந்து #கொள்ள #வேண்டும்!
விடுதலை ராசேந்திரன்
பொதுச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்
17.06.2026
@dvkcoimbatore

@SJForumindia@arivalayam@KanimozhiDMK@mkstalin
2) பெரியார் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து தெருமுனை கூட்டங்களை நடத்துவது.
3)சமூக வலை தளங்களில் இளம் தலைமுறையினர் மூலம் புதிய(apps) செயலிகளை பயன்படுத்தி பெரியாரிய கொள்கைகள் கொண்டு செல்வது
4) விரைவில் புதிய தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குபயிற்சி வகுப்பு நடத்துவது
கடந்த 6/6/2026 மாலை 4.30மணி அளவில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் தமிழ் புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானங்கள்👇🏻👇🏻
#dvk#periyar
1) 21 ஆம் நம்பர் அரசு பேருந்து ஜாதிய தீண்டாமைகளை தகர்த்து
கோவை தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு பல வருடங்களுக்குப் பிறகு சென்றது. அதற்கு காரணமாக இருந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்
ஆணவக் கொலை முடிவுகட்டுவோம்
கோவில்பட்டி அருகே காதல் விவகாரத்திற்காக 19 வயது பெண்ணை கொலை செய்த அண்ணனையும் தாயையும் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் !!
மத்திய அரசே ‼️ மாநில அரசே ‼️
ஆணவகொலைக்கான “சிறப்பு சட்டத்தை” உடனடியாக அமல்படுத்து
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து 21 செல்லாமல் இருந்தது.. இன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியர் அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது.
நன்றி தோழர் : @Vannikural_
ஜாதிய தீண்டாமை காரணமாக கடந்த 20 ஆண்டுகள் அண்ணா நகருக்கு செல்லாமல் இருந்த பேருந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் டிச 29 நடை பெற்ற போராட்டதிற்கு பிறகு பல சிக்கல்கலை தாண்டி தற்போது நடக்கும் ஆட்சியில் சமூகநீதி துறை அமைச்சர் @vannikural அவர்களின் முயற்சியால் சென்றது !!
#dvk#periyar
வரும் சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் .
*அடுத்த கட்ட பணிகள் குறித்து திட்டமிட விவாதிக்க*
தமிழ் புலிகள் கட்சி அலுவலகம் .
#dvk
“தமிழ்நாட்டுக்கு உரிமையான உயர் சிறப்பு மருத்துவ மேல்படிப்புக்கான(super speciality) 152 இடங்களை ஒன்றிய ஆட்சியிடம் சரணடைய செய்திருக்கிறது தவெக ஆட்சி; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அதிர்ச்சியான தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
@viduthalaikr
நாளை காலை 10 மணியளவில் சிவானந்தா குடியிருப்பு பகுதி பேருந்து நிறுத்தம் அருகில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தோழர்கள் அனைவரும் வருக
திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை மாவட்டம்
குறிப்பு: கடந்த ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் டிச 29.2025 கோவையில் நடந்த ஜாதிய தீண்டாமைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது ‼️
#coimbatore#untouchability#issue
கோவை தொண்டாமுத்தூர் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை விவகாரம் - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கெம்பனூர் அடுத்துள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் அண்ணாநகர் பகுதிக்கு 21 என்ற எண் கொண்ட பேருந்து இயக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கோவையில் பேட்டி.
அதை சனாதனம் என்ற வார்த்தைக் கொண்டு !! குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் முயற்சியில் தான் இன்று சனாதன இந்துகள் செயல்படுத்திக் கொண்டு வருகின்றனர் !!
சனாதனத்தை ஆதரிப்பவர்கள் படிப்பதைவிட்டு அவர் அவர் குலத் தொழிலை செய்ய தயாரா??
#dvk#tsf
கைநாட்டிற்குப் பிறந்த ~ கையெழுத்து நாங்கள் !!!!
கைநாட்டுப் பெற்றோர்களின் குழந்தைகள் அவர்களின் அப்பாவிற்கு அம்மாவிற்கு பெயர் எழுதி சொல்லி தருவார்கள் !!
அப்படிபட்ட கட்டமைப்பை தான் கடந்த திராவிட ஆட்சிகள் உருவாக்கினார்கள்!!