தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்
கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். #PeriyarEBooks
https://t.co/fbbCdzNapU
அதிரடி விலை குறைப்பு !
நூல் தொகுதிகள் விற்பனை !
4 புத்தகங்கள் தொகுப்பு - ரூ1500 /=
(கெட்டி அட்டையில்)
அதிரடி விலை குறைப்பு - ரூ 1400 / = மட்டும் (தபால் செலவு உட்பட )
புத்தகளின் பட்டியல் :
1. "ஜாதியும் ஜாதிப் பேரணியும்"
2. "பகுத்தறிவும் வாழ்வுரிமையும்"
3. "தேவ அசுர போராட்டம் முடியவில்லை"
4. "பெரியாரியத்தின் வெற்றி".
இந்த 4 தொகுப்புகள் கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் @viduthalaikr அவர்களின் எழுத்தில் தற்போது வெளிவந்துள்ள "ஆரிய மாடலா ? - திராவிட மாடலா ?" தொகுப்பிற்கு முன் வெளிவந்த 4 தொகுப்புகள் ஆகும்.
முன்பதிவிற்கு அலைபேசி எண் :
94986 56683 - இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் பெயர் முகவரியுடன் முன்பதிவு செய்யவும்.
பெரியார் குறித்த உண்மை வரலாறு, திராவிடர் இயக்கம் செய்த சாதனைகள், பெரியார் குறித்த திட்டமிட்ட பொய் பரப்புரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக தனித்தனி தலைப்புகளில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன.
வாங்குவீர் ! படிப்பீர் ! பரப்புவீர் !
- *நிமிர்வோம் வெளியீடு,*
10.04.25.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் பரிசளிக்க...
அம்பேத்கர் நம் தலைவர் - தோழர் கொளத்தூர் மணி @kolathur_mani.
விலை - ரூ 30 (ரூபாய் முப்பது மட்டும்)
பத்து புத்தகங்கள் கொண்ட தொகுப்பு ரூ.300 (ரூபாய் முந்நூறு மட்டும்)
(தபால் செலவு இலவசம்)
(குறைந்த அளவு 10 புத்தகங்கள் முன்பதிவு செய்யப்படும்)
முன்பதிவிற்கு அலைபேசி எண் :
94986 56683 - இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் பெயர் முகவரியுடன் முன்பதிவு செய்யவும்.
வாங்குவீர் ! படிப்பீர் ! பரப்புவீர் !
நிமிர்வோம் வெளியீடு,
10.04.25.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் பரிசளிக்க...
அம்பேத்கர் நம் தலைவர் - தோழர் கொளத்தூர் மணி @kolathur_mani.
விலை - ரூ 30 (ரூபாய் முப்பது மட்டும்)
பத்து புத்தகங்கள் கொண்ட தொகுப்பு ரூ.300 (ரூபாய் முந்நூறு மட்டும்)
(தபால் செலவு இலவசம்)
(குறைந்த அளவு 10 புத்தகங்கள் முன்பதிவு செய்யப்படும்)
முன்பதிவிற்கு அலைபேசி எண் :
94986 56683 - இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் பெயர் முகவரியுடன் முன்பதிவு செய்யவும்.
வாங்குவீர் ! படிப்பீர் ! பரப்புவீர் !
நிமிர்வோம் வெளியீடு,
10.04.25.
முற்றுகைப் போராட்டம் !
திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது !
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள,
தந்தை பெரியார் குறித்து இழிவான பொய்களை பேசி வரும் சீமானின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம் பங்கேற்கிறது.
கழகத் தோழர்கள் பெரும் திரளாக முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நாள் : 22.01.25 புதன்
நேரம் : காலை 10 மணி
இடம் : நீலாங்கரை, சென்னை.
- கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்
18.01.25
சுயமரியாதைத் திருமணச்சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள் இன்று.(17.01.1968)
சுயமரியாதைத் திருமணச்சட்டத்தின் சாரம் :
உறவினர் அல்லது நண்பர் அல்லது மற்றோர் முன்னிலையில் கீழ்க்கண்ட வகையில் சுயமரியாதை மணம் அல்லது சீர்திருத்த மணம் என்றோ அல்லது வேறெந்தப் பெயரிலோ முறையாக நிறைவேறும் திருமணத்திற்கு இப்பிரிவு பொருந்தும்.
(a) மணமக்கள் இருவரும் அறிந்துள்ள மொழியில் ஒருவர் மற்றொருவரைச் சட்டப்படிக்கான மனைவி-யாகவோ அல்லது கணவனாகவோ ஏற்றுக்கொள்வதாகச் சாற்றுதல்,
அல்லது
(b) மணமக்கள் இருவரும் ஒருவர் மற்றொருவருக்கு மாலை அணிவித்தல் அல்லது விரலில் மோதிரமணிவித்தல்
அல்லது
(c) தாலி அணிவித்தல்.
'எம்.ஜி.ஆர் பிறந்தநாள்.'
50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர்.
பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தத்தை அரசு ஏற்பு செய்தவர்
நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழி எழுத்து முதன்மையாகவும், ஆங்கில எழுத்துக்களை விட தமிழ் எழுத்துக்கள் அளவில் இரண்டு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்தவர்.
தஞ்சைப் பல்கலைக் கழகம் நிறுவ 100 ஏக்கர் நிலம் ஒதுக்க்கீடு செய்தவர்.
உங்கள் மதம் என்ன? என்று கேட்ட பொழுது "என் மதம் திராவிட மதம்" என அரசு ஆவணத்தில் பதிவு செய்தவர்.
இந்தியாவை "இந்திய ஒன்றியம்" என்றே இறுதி வரை அழைத்தவர்.
விடுதலைப் புலிகளுக்கு பல கோடி ரூபாய் வழங்கி புலிகள் அமைப்பை கட்டி எழுப்ப பெரும் துணையாக நின்றவர். ஈழத்தமிழர்கள் நலனில் பெரும் அக்கறை கொண்டவர்.
பெரியார் நூற்றாண்டு விழாவை 1 ஆண்டு கொண்டாடியவர்.
மாவீரன் கேணல்.கிட்டு அவர்களை இந்திய ஒன்றியம் கொலை செய்த நாள் இன்று (16.01.1993)
அனைத்துலகக் கடலில் கிட்டு 'அகாத்' என்ற கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை இந்திய அரசு அறிந்து கொண்டது. அவர் மேற்கு நாடுகள் தயாரித்த அமைதித் திட்டத்தின் தூதுவனாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் இந்தியாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இருந்தும் கிட்டுவின் கப்பலை இடைமறிக்குமாறு இந்திய அரசு கடற்படைக்குக் கட்டளை இட்டது.
1993 ஆம் ஆண்டு 13ம் நாள் கிட்டுவின் கப்பல் இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த இரண்டு நாசகாரிக் கப்பல்களால் அனைத்துலகக் கடலில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டது. கிட்டு அந்தச் செய்தியை தொலைத் தொடர்பு கருவியின் மூலம் வி.புலிகளின் அனைத்துலகப் பணிமனைக்கு அறிவித்தார். கப்பல் இடைமறிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. இந்தியா மவுனம் சாதித்தது. அகத் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு நேரே, இந்;தியக் கடல் எல்லைவரை கொண்டு வரப்பட்டது. தளபது கிட்டுவும் அவரது போராளிகளும் சரண் அடையுமாறு கேட்கப்பட்டனர். சரண் அடைய மறுத்தால் அகத் தாக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவீர்கள். எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரித்தது.
கிட்டுவைக் கைது செய்து ராஜிவ் காந்தியின் கொலைக்கு அவர் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதே இந்திய அரசின் தந்திரமாக இருந்தது. அதே நேரம் கிட்டுவை உயிரோடு பிடிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சரணாகதி என்ற வார்த்தை புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை.
வாழ்ந்தால் மானத்தோடு இல்லையேல் வீரமரணம் என்பது புலிகளின் தாரக மந்திரம் என்பது உலகறிந்த செய்தி.
தளபதி கிட்டுவும் அவருடன் பயணம் செய்த ஒன்பது போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வங்கக் கடலில் சங்கமமானார்கள்!
சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரியார் அலை வீசுகிறது. சுமார் 100 ஸ்டால்களில் பெரியார் பற்றிய புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. பெரியார் சார்ந்த புத்தகங்களுக்கென எக்ஸ்க்ளூசிவாக 10 ஸ்டால்கள் உள்ளன. குறிப்பாக 18 - 35 வயது இளைஞர்கள் பெரியார் ஸ்டால்களை நோக்கி படையெடுக்கிறார்கள்.
(இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி. படத்தில் இடம்பெற்றிருப்பது @PeriyarBooks https://t.co/5eKgxBkRvr ஸ்டால் #129)
திருவல்லிக்கேணி பகுதி 25ஆம் ஆண்டு பொங்கல் விழா! மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்கள் பரிசளித்து விழாப் பேருரையாற்றவுள்ளார். கழகத் தலைவர் @kolathur_mani, பொதுச்செயலாளர் @viduthalaikr, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் @Dayanidhi_Maran உள்ளிட்டோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
அனைவரும் வருக!!!
தி.வி.க. ஆலோசனைக் கூட்டம் - 05.01.25 - ஈரோடு
ஒரு மாதிரிப் பரப்புரைப் பயணம் நடத்தலாம் என்பதைக் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோடு ம.தி.மு.க. அலுவலகத்தில் 05.01.25 ஞாயிறு காலை 11.00 மணி அளவில் கழகப் பொருளாளர் துரைசாமி அவர்கள் தலைமையில், அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி அவர்கள் முன்னிலையில் தொடங்கி நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :
பரப்புரைப் பயணம் ஈரோட்டில் 25.01.25 சனிக்கிழமை தொடங்கி மதுரையில் 29.01.25 புதன் கிழமை நிறைவு செய்வது
பரப்புரைப் பயணத் தொடக்க நிகழ்ச்சி ஜன.25 காலை 10.00 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவில்லத்தில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் தொடங்குவது
பரப்புரைப் பயணத்திட்டம் :
25.01.25 - சனி
10.00 - ஈரோடு பெரியார் நினைவில்லம் - பரப்புரைப் பயணம் தொடக்கம்.
01.00 மணி - சோலார்
04.00 மணி - கணபதி பாளையம்
06.00 - கருமாண்டாம் பாளையம்
07.00 - கொடுமுடி
இரவு தங்கல்.
26.01.25 - ஞாயிறு
10.00 மணி -சாலைப்புதூர்
12.00 - நொய்யல்
01.00 - வேலாயுதம் பாளையம்
04.00 - புகழூர்
06.00 - வெங்கமேடு
07.00 - கரூர்
இரவு தங்கல்
27.01.25 - திங்கள் :
10.00 - அரவக்குறிச்சி
12.00 - பள்ளப்பட்டி
01.00 - இடையக்கோட்டை
04.00 - வேடசந்தூர்
06.00 - தாடிக்கொம்பு
07.00 - திண்டுக்கல்
இரவு தங்கல்
28.01.25 - செவ்வாய்
10.00 மணி - சின்னாளப்பட்டி
12.00 - செம்பட்டி
01.00 - சோழவந்தான்
04.00 - சமயநல்லூர்
06.00 - மதுரை.1
07.00 - மதுரை.2
இரவு தங்கல்
29.01.25 - புதன்
10.00 மணி - பழங்காநத்தம்
12.00 - திருப்பரங்குன்றம்
01.00 - திருமங்கலம்
04.00 - மாட்டுத்தாவணி
06.00 - அவனியாபுரம்
07.00 - நிறைவு பொதுக்கூட்டம்
5 நாட்களும் முழுமையாக கலந்து கொண்ட இசைவு தெரிவித்துள்ள தோழர்கள் பட்டியல் :
"மந்திரமா ? தந்திரமா ?" - ஆத்தூர் மகேந்திரன்.
1.ஈரோடு ரத்தினசாமி
2.பால். பிரபாகரன்
3.அய்யனார்
4.காவை ஈஸ்வரன்
5.நாத்திக ஜோதி
6.செல்வராஜ்
7.செந்தில்
8.கோபிநாத்
9.நங்கவள்ளி கிருஷ்ணன்
10.வேணுகோபால்
11.மதன் விருதாசலம்
12.தேனி ராயன்
13.திண்டுக்கல் 5 தோழர்கள்
14.ரமேஷ் நம்பியூர்
15.கோபி 4 தோழர்கள்
16.குமார் - மறவப் பாளையம்
பயணப் பொறுப்பாளர்கள்:
ஈரோடு- செல்வராஜ், எழிலன்
கரூர் - காமராஜ்
திண்டுக்கல் - மோகன் தாஸ்
மதுரை - காமாட்சி பாண்டியன்
“பெரியார் கருத்துகளில் சுழன்ற 2024”
புரட்சிப் பெரியார் முழக்கம் ஜனவரி மாத இதழில், “பெரியார் கருத்துகளில் சுழன்ற 2024” என்கிற ஆக்கமொன்றை விடுதலை இராசேந்திரன் @viduthalaikr எழுதியிருக்கின்றார்.
இதில் 2024 இல் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இடம்பெற்ற சமூக நீதி, மதவாதப் போக்கு போன்றவற்றுடன் தொடர்புபட்ட முக்கியமான சில நிகழ்வுகளைப் பட்டியலிட்டிருந்தார்.
ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கூட நிகழுகின்ற இத்தகைய பிரச்சனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டுவருவது பிரச்சனைகளை தொகுத்தும் பகுத்தும் ஆராய உதவும். 2025 இற்கான தீர்மாணங்களில் ஒன்றாக இதனையும் கருத்திற்கொள்ள முயல்கின்றேன்.
தற்போதைக்கு விடுதலை இராசேந்திரனின் ஆக்கம் கீழ் தரப்படுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ்களை எண்ணிம வடிவில் கீற்று இணையத்தளத்தில் படிக்கலாம்.
(கிஅ)
இனி,
//சமூகநீதி – சமத்துவத்துக்கு முதற்பெரும் தடை பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பு என்று பெரியார் அடையாளப்படுத்தினார். //
வரலாற்றுப் போக்கு இதை உறுதிப் படுத்துகிறது. பிரச்சனைகளின் வடிவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மய்யம் பார்ப்பனியம் × திராவிடம்; மனுநீதி × சமூகநீதியாகவே சுழன்று கொண்டிருக்கிறது. இந்தப் பார்வையில் கடந்த ஆண்டின் நிகழ்வுகள் சிலவற்றின் தொகுப்பு.
• அயோத்தி இராமன் கோயில் தேர்தலுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பே அவசர அவசரமாக ஒன்றிய ஆட்சி திறந்தது. (ஜன 5) மோடி கோயிலுக்குள் இராமன் சிலையைத் தூக்கிச் சென்று கர்ப்பகிரகத்தில் நிலைநாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டது.
பிரதமராக இருந்தாலும் ‘பிறப்பால்’ சூத்திரர்; பூரி பார்ப்பன சங்கராச்சாரி நித்தியானந்த சரஸ்வதி, மோடிக்கு அந்தத் தகுதி இல்லை; இது சாஸ்திரத்துக்கு எதிரானது என்று நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.
கோயில் திறப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆங்கில ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் வர்ணாஸ்ரமமே சனாதனம், அதை மீற பிரதமராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது என்று பேட்டியளித்தார். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவேயில்லை.
• குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணைச் சிசுவோடு எரித்தனர் சங்கிகள். அவரது குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முறைகேடாக குறுக்கு வழியில் தண்டனை குறைப்பு செய்து அவர்களை விடுதலை செய்தது குஜராத் நீதிமன்றம்.
குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்றனர் பா.ஜ.க.வினர். இவர்கள் பிராமணர்கள், குற்றம் செய்யமாட்டார்கள் என்றார் ஒரு பா.ஜ.க. அமைச்சர். உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலையை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
• அரசுப்பள்ளிகளில் கடவுள் வாழ்த்து – சரசுவதி துதிப் பாடல்கள் பாடப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை “சமூகநீதி”ப் பாடலோடு பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று ஆணையிட்டது. உதயநிதி ஸ்டாலின் இதற்கு முன் முயற்சி எடுத்தார்.
• கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து தனியாரிடம் வழங்க வேண்டும் என்பது பார்ப்பனர்களின் நீண்டகாலப் போராட்டம். நீதிக்கட்சியில் பனகல் அரசர், அறநிலையத்துறை வாரியம் கொண்டு வருவதற்கு முன்பு கோயில்கள் பார்ப்பனர்கள், நிலவுடமையாளர்களின் கொள்ளைக் கூடாரமாக இருந்ததை, சர்.சி.பி.ராமசாமி அய்யர் முதல் பல்வேறு விசாரணை ஆணையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தப் பின்னணியில் கோயில்களை அறநிலையத்துறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பச்சையாக சட்டத்துக்கு விரோதமானக் கருத்தை உயர்நீதிமன்றப் பார்ப்பன நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கருத்தரங்கு ஒன்றில் பேசினார். மூத்த வழக்கறிஞர் துரைசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதி பதவிநீக்கம் செய்யக் கோரினார். தொடர்ந்து நீதிபதிகள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சந்திரசூட் பேசினார்.
மற்றொரு பார்ப்பன உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ மதி, இந்துக் கோயில்களில் பிற மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தார். பழனி முருகன் கோயில் கொடி மரத்தில் இதை அறிவிப்பாக எழுத வேண்டும் என்று தீர்ப்பளித்தார். உண்மையில் பழனி முருகன் கோயில், அங்கே கொடிமரம் இல்லை. அதில் எப்படி எழுத முடியும் என்று ஆன்மீகவாதி சுகி.சிவம் கேட்டார். ‘இந்து’ என்றால் யார் என்ற கேள்வியை முன்னாள் நீதிபதி சந்துரு எழுப்பினார்.
• பார்ப்பன பயங்கர வாதத்துக்கு பலியானவர், பகுத்தறிவாளர் தபோல்கர். அவரை மகாராஷ்டிராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பத்து ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடந்தது. மூளையாக செயல்பட்டவரை விடுவித்துவிட்டு அவருக்குக் கருவியாக செயல்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது பம்பாய் சிறப்பு நீதிமன்றம். பூனே காவல்துறையும், சி.பி.அய்.யும் மூளையாக செயல்பட்டவரை காப்பாற்றவே முயற்சித்தது. உரிய ஆவணங்களை மறைத்தது என்று நீதிபதியே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் “அர்த்த மண்டபத்தில்” இசைஞானி இளையராஜாவை அனுமதிக்க ஜீயர்கள் மறுத்தனர். இந்தத் தீண்டாமையை எதிர்த்து கடும் விவாதங்கள் நடந்தன. பார்ப்பனிய ஆதிக்கம் மேலும் வெளிச்சத்துக்கு வந்தது.
• பார்ப்பனர்கள் சென்னையில் தங்களுக்கு தனிப் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அர்ஜுன் சம்பத் என்ற ஒரு ‘கோடாரிக் காம்பு’வைத் தலைமை தாங்க வைத்தனர் பார்ப்பனர்கள். ஜாதிவெறியுடன் பேசினார்கள்.
கஸ்தூரி என்ற பார்ப்பன நடிகை கலைஞர் குடும்பத்தைத் தெலுங்கு மொழிக் குடும்பமாக சித்தரித்து அந்தப்புரச் சேவை செய்ய வந்தவர்கள் என்று சாக்கடை மொழியில் பேசினார். பேசிய பிறகு ஆந்திராவுக்கு ஓடி தலைமறைவானார். போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர். நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் துணைவியார் அவருக்குப் பிணை வழங்க வேண்டும் என்று அறிக்கைவிட்டார்.
நீதிபதிகள் குடும்ப உறுப்பினர்கள் வழியாக தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் அதிசயம் முதன்முதலாக தமிழ்நாட்டில் நடந்தது.
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்குப் பார்ப்பன சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்சநீதிமன்றத்திலும், பல மாநிலத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், உதயநிதி அழிந்து போவார் என்று சாபமிட்டார். ஆந்திரக் கோயில் வாயில் உதயநிதியின் படத்தை அச்சடித்து அதை காலால் மிதித்து உதயநிதியை அவமதித்தனர்.
பார்ப்பனியத்தின் அதிகாரத்தை இந்நிகழ்வுகள் வெளிப்படுத்தின.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான அனிதா சுமந்த் எனும் பார்ப்பனர் உதயநிதி பேச்சு சட்ட விரோதமானது என்றார்.
சனாதனத்தை நியாயப்படுத்துவதற்கு ஆதாரங்களைத் தேடி தீர்ப்பில் பதிவு செய்தார். இணையதளத்தில் தனது தீர்ப்பை பதிவேற்றியவுடன் (மார்ச் 9) அடுத்த இரண்டு நாட்களிலேயே தீர்ப்பில் திருத்தங்கள் செய்து வெளியிட்டார்.
(மார்ச் 10) தீர்ப்பைத் திருத்த வேண்டுமானால் மீண்டும் நீதிமன்ற நடவடிக்கை வழியாகவே செயல்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை மீறி செயல்பட்டார். பார்ப்பனியத்தின் முறைகேடுகளை மக்கள் மன்றம் புரிந்து கொண்டது.
”நாடாளுமன்றத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்தார். அந்தப் பெயரை உச்சரிப்பதே ஃபேஷன் ஆகிவிட்டது என்றும் அதற்குப் பதிலாக கடவுள் பெயரை கூறினால் மோட்சம் போகலாம் என்றும் பேசினார். அமித்ஷாவுக்கு எதிர்வினையாக மோட்சத்துக்கு எதிராகவும், கடவுள் மற்றும் பார்ப்பனியத்துக்கு எதிராகவும் கருத்துகள் வெடித்துக் கிளம்பின.”
புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா வேத வைதீக மரபுப்படி நடத்தப்பட்டது.
தீட்டாகிவிடும் என்று நாடளுமன்றத்தின் சட்டப்பூர்வ தலைவரான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒரு பழங்குடி சமூகத்தை சார்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டார். இதற்கு எதிர்வினையாக பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்தியல் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன.
சிறைக்குள் பார்ப்பனர்கள்
1. மகா விஷ்ணு (சூத்திர) என்ற மதப் பிரச்சாரகர் சைதை அரசுப் பள்ளியில் மாணவர்களிடம் “ஊனமாகப் பிறப்பவர்கள் முன் ஜென்ம பாவம்” என்று பேசியது சர்ச்சையானது. மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார்.
2. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய எச்.ராஜா என்ற சங்கி பார்ப்பனருக்கு நீதிமன்றம் 6 மாதம் தண்டனை விதித்தது. ‘குற்றவாளியாக’ ஜாமீனில் வெளிவந்து மேல் முறையீடு செய்துள்ளார்.
3. திருவரங்கம் வேத பண்டிதர் ரெங்கராஜ நரசிம்மன், ஜீயர்கள், உதயநிதிப் பற்றி யூடியூப்பில் அவதூறு பரப்புரை செய்தார். கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளார்.
4. பெண் செய்தியாளர்களை ஆபாசமாக பதிவிட்ட எஸ்.வி.சேகர், ஒரு மாத சிறை தண்டனைக்குள்ளாகி மேல் முறையீடு செய்துள்ளார்.
40க்கு 40
தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றி வாகை சூடியது. பா.ஜ.க.வின் 400 எண்ணிக்கைக் கனவைத் தகர்த்து 240 என்ற எல்லையில் நிறுத்திய பெருமை தமிழ்நாடு வாக்காளருக்கு உண்டு.
ராகுலின் ‘பெரியார்’ குரல்!
ராகுல் ‘மனுசாஸ்திரத்துக்கு’ எதிராக வெளிப்படையாகவே பேசினார். பெரியார் இயக்கத்தின் குரலாகவே அது ஒலித்தது. இந்தியாவை ஆட்சி செய்வது டெல்லி அல்ல; ஆர்.எஸ்.எஸ். தலைநகர் நாக்பூர் என்றார். இட ஒதுக்கீட்டின் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றார். உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பங்கு என்ன? என்று ஊடகவியலாளர்களிடம் கேட்டார்.
நாட்டின் முதல் 200 தொழில் நிறுவனங்களில் ஒரு பிற்படுத்தப்பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ, உரிமையாளர்களாக இருக்கிறார்களா?
என்று கேட்டார்.
(பிப் 18)
நாடாளுமன்றத்தில் பேசுகையில் அரசியல் சட்டத்தையும், மறு கையில் மனு சாஸ்திரத்தையும் ஏந்திக்காட்டி அரசியல் சட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி மனுசாஸ்திரம் ஆட்சி செய்கிறது என்று முழக்கமிட்டார். ராகுல்.
ஏகலைவன் கட்டைவிரலைத் துரோணாச்சாரியார் கேட்டதைப் போல ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நசுக்குகிறது பா.ஜ.க. ஆட்சி என்று பெரியார் குரலை ஒலித்தார்.
(டிசம்பர் 14)
‘தகுதி திறமை’ பேசுவது மோசடி என்ற பெரியாரின் கருத்தை ராகுல் எதிரொலித்தார். தேர்வு முறையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்களே தகுதியைத் தீர்மானிக்கிறார்கள் என்று நச்சென்று கூறினார்.
- விடுதலை இராசேந்திரன்