ஒரு கதை சொல்லட்டுமா சார்!
மக்கள் நலத்திட்டம் என குடும்ப நலன் பேணிய கதை இது.
மக்கள் வரிப்பணத்தில் தாத்தா வண்ணத் தொலைக்காட்சி கொடுத்ததை,
“எங்க தாத்தா கொடுத்தது… எங்க தாத்தா கொடுத்தது…”
என ஏதோ அவர்களின் அப்பா வீட்டு பணத்தில் கொடுத்ததைப் போல மார்தட்டிக் கொள்கின்றனர்.
கொடுப்பதையும் கொடுத்துவிட்டு, கேபிள் கட்டணம் என்ற பெயரில் குடும்ப ஆதிக்க நிறுவனங்கள் மூலம் மக்களிடமிருந்து பணம் வசூலித்து, தங்களது பைகளை நிரப்பிக்கொண்டனர்.
வெளியில் “மக்கள் நலத்திட்டம்” என நாடகமிட்டு,
உள்ளே “குடும்ப நலன்” காத்த உத்தம சிகாமணிகளே…!
வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் தவெக ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்கள் இனியும் உங்களது கட்டுமரக் கதைகளை நம்ப தயாராக இல்லை!
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!
இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!
#CMJosephVijay
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!
എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
#CMJosephVijay
"நம்ம TVK ஆட்சி அமைஞ்சதும் எல்லாரும் நல்லாயிருப்போம்
நல்லா,நல்லாயிருப்போம்" என தேர்தல் களத்தில் அன்று வாக்குறுதி அளித்ததை இன்று நிறைவேற்றி, இது மனசாட்சியுள்ள மக்களாட்சி என்று நிரூபித்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தேர்தல் வாக்குறுதிகள்
படிப்படியாக நிறைவேற்றப்படுவதால் தாய்மார்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல் !
பரவும் செய்தி
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் தங்கம், ஒரு பைசாவுக்கு வழங்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தொடர்ந்து பேசி வருகிறார்.
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் விலை தனியாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் மற்றும் BIS தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களும் சேர்த்து ரூ.0.01 என நிறுவனங்கள் குறைந்த விலைப்புள்ளியினை அளித்ததால் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.0.01 என்பது தவறான தகவலாகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
பல்லாயிரம் கோடி பறந்துபோனதா?
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என்ற அறிவிப்பிற்கு, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என்று அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருக்கிறது.
Business பார்த்துவிடலாம் என்று கணக்குப் போட்டு, சில இலட்சங்கள் போகும் இடங்களை பல கோடிகளாக விலையேற்றி, பல்லாயிரம் கோடி செலவழித்து இடம் வாங்கிப் போட்ட தீயசக்தியினருக்கு, இந்த அறிவிப்பு காலில் சுடுதண்ணியை ஊற்றியது போல இருக்கிறது.
இடத்தை வைத்து மடத்தைப் பிடிக்க நினைத்த கதை பொய்த்துப்போனதே என்ற ஒவ்வாமையில், தீயசக்தியுடன் தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து விதவிதமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் இல்லாதவர்கள் வேறு, “போச்சே!” என்று குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்.
தீயசக்தியோ, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், துக்கத்தைச் சுமக்க முடியாத பதற்றத்தில் கதறிக் கொண்டிருக்கிறது.
இவர்களின் பதற்றத்தைப் பார்த்தால்…
பரந்தூர் அடுத்த 2ஜியா?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த திரு.ஜி.சுப்பிரமணியன், திரு.எஸ்.டி. கதிரேசன் மற்றும் உள்ளுர் விவசாயப் பெருமக்கள் சந்தித்து, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
#CMJosephVijay
Live நாவே அழுகிறாங்க இந்த திமுக, மானியக் கோரிக்கையைப் பற்றி பேசுங்கய்யா என்றால், கண்டதையும் பேசுவாங்க.
கடைசியாக @JCDPrabhakar அண்ணன் முடித்து விட்டாரு 🔥
தளவாய் சுந்தரம் பிளாஸ்ட்!
அண்ணன் செங்கோட்டையன் ஒரு அடி! 🔥
கே. என். நேருவை “உட்காருங்கய்யா”னு அழுகை!
கொறடா வேலு ஒரு மொக்க காமெடி.
சட்டமன்றமா இது?
இதுல ஆளும் கட்சியைக் குறை சொல்றது!
ஒரு காமெடி எதிர்க்கட்சித் தலைவர் !
#TVK
#TVKVijay
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
பரந்தூர்ல ₹8 லட்சத்துக்கு இருந்த ஒரு ஏக்கரின் guidline value'வ, ₹65 லட்சத்துக்கு மாத்த நூதனமா ஒரு நிறுவனம் வேல பாத்து இருக்கு..
இதனால் அரசுக்கு ₹170 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும்.. இந்த மாதிரி எத்தன நிறுவனங்கள் எத்தன பெரும் முதலாளிகள் இதில் ஈடுப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இடியாக தான் இருந்து இருக்கும்...
ஆனால் பரந்தூரில் வசிக்கும் விவசாயிகள் Market Value ல இருந்து 3.5 மடங்கு அதிகம் குடுத்தாலும் வேண்டாம் விவசாயம் தான் முக்கியம்.. அந்த மண்ணின் ஆதாரமான நீர்நிலைகளை அழிக்க கூடாது என போராடியவர்களுக்கு இது பெரும் வெற்றி...
இது சாத்தியப்படுத்த மிக பெரிய ஆன்ம பலம் வேண்டும்..
இதை @CMOTamilnadu விடுத்து
எந்த முதல்வராலும் செய்து இருக்க முடியாது.. கூடிய விரைவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கு உரிய இடம் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி..
வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay