தாமரையும் அல்லியும் - லோகமாதேவி
புத்த மதம் கூறும் 8 புனிதங்களில் தாமரையும் ஒன்று. எகிப்திலும் தாமரை புனிதமலரே. டுடன் காமன் கல்லறை திறக்கப்பட்டபோது அவரது உடலின் மீது தாமரை இதழ்கள் தூவப்பட்டிருந்ததைக் கண்டார்கள்.
https://t.co/i1abFamUgT
ஜெ.புனித ஜோதி கவிதைகள்
https://t.co/HGk1uAY9VM
அவமானங்கள் பல தாங்கி
மனம் வெம்பிய நாளில்
என் தோளை உரித்துத்
தடாரி செய்து
சன்னதமாடுகிறேன்.
என் முன்னோர்கள்
ஒவ்வொருவராய் இறங்கி வருகின்றனர்,
செந்தழலென
அவர்களின் வடுக்கள் காணக் காண
ருத்ர தாண்டவமும்
கொற்றவை ஆட்டமும்
எனக்குள் எழுகிறது.
பாலைவன லாந்தர் கவிதைகள்
https://t.co/Js1QO0kDi5
ஒற்றைக் கால்களில் நிற்கும் கொக்குகள்
தங்களை வயற்காட்டின்
பிதாமகரென நம்பிக் கொள்வதில் பிழையென்ன
அவை
உலகிற்குக் காட்டிய பாதத்தில்
எந்த மீனுமில்லை
எந்தப் புழுவுமில்லை
எந்தத் தவளையுமில்லை.
- பாலைவன லாந்தர்
அந்த அழகருமல தீர்த்தமா
அடமழச் சத்தமா
ஆறா ஓடுச்சே நம்ம ரத்தம்
- ஒப்பாடி வரிகள் முத்துராசா குமார்
(நிறுமானக்கலை - தூண்டாமணி விளக்கு, என் வீடு - வ.சரண்ராஜ்)