Tamil Nadu has always had a unique political culture rooted in Secularism, Democracy, and Social Justice.
I believe the people have once again reflected the same values in the 2026 election verdict.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் அண்ணன் @ikamalhaasan அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் நல்வாழ்த்துகளுடன் நிறைவாழ்வு பெற்று நீடூழி வாழ-நூறாண்டு காண எமது நெஞ்ச��் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#HBDKamalHaasan
#MNM_KamalHaasan
இன்று பிறந்தநாள் காணும் அருமை தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டோம்.
@EvidenceKathir
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை
ரத்து செய்ய வேண்டும்!
______________________________
தீபாவளி பண்டிகையை முன���னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்க்மானது.
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுவதால், நவம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் நெடுஞ்சாலைகளில் வழக்கத்தை விட பல மடங்கு வாகன நெரிசல் ஏற்படும். இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத���திருக்கும் நிலைதான். ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது தொடர்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எரிபொருள் விரயமும், காற்று மாசும் அதிகரிக்கிறது.
எனவே, மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
1. தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
2. தீபாவளி மற்றும்பொங்கல் ஆகிய பண்டிகைகளையொட்டிக் கட்டணம் ரத்து செய்யப்படும் நாட்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து, தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும���.
3. பண்டிகை கால நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ,அத்துடன், அவசர மருத்துவ உதவி மையங்களை அமைத்திடவேண்டும். மேலும், கூடுதல் ஆம்புலன்சுகளையும் நெடுஞ்சாலைகளில் ஏற்பாடு செய்யவேண்டும்.
சுங்கக் கட்டணத்தை விட, மக்களின் நேரமும், பாதுகாப்பும், நிம்மதியான பயணமுமே முக்கியம் என்கிற வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளி பயண நாட்களில் சுங்கக் கட்டண��்து ரத்து செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
நவம்பர் 01 தமிழ்நாடு மாநில நாளில்,
1950 -களில் மொழிவழி அடிப்படையில் மாநிலம் அமைந்த காலச் சூழலில், தமிழ்த்தேசிய இனத்துக்கான தமிழ்மண்ணைக் காத்தப் போராளிகள் அனைவரையும் நன்றிப்பெர���க்கோடு நினைவுகூர்ந்து அவர்கள் யாவருக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.
உண்ணாநிலை அறப்போர் நடத்தி தன்னுயிரை ஈகம் செய்த சங்கரலிங்கனார் , எல்லைப் போராளிகள் ம.பொ.சி., மார்ஷல் நேசமணி உள்ளிட்ட அனைத்துப் போராளிகளின் மகத்தான பங்களிப்பே இன்றைக்கு நாம் பெற்றிருக்கும் இந்த பெருநிலப்பான தமிழ்நாடு ஆகும்.
தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் 'தமிழ்நாடு நாள்' வாழ்த்துகள்!
ஒரு MLA சீட் கொடுக்கலைனு திமுகவுக்கு ஒடிய நீ பேசலாமா ஸ்னேக் பாபு..
அங்க போனியே உனக்கு இதுவரை எதாவது போஸ்டிங் கொடுத்தாங்களா இருந்தும் மானங்கெட்டு திமுகவினரிடம் கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கும் நீ பேசலாமா..?? @PanaiyurBabu
ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பகவத் அவர்கள், நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டங்கள் என்றும், அது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்காது என்றும் விஜயதசமி விழாவில் பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.-ஆல் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக���கி எறிய வேண்டும் என்றுதான் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நடைபெறும் போராட்டங்கள் வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளுக்காக நடைபெறுகின்றன என்பது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும்.
எனவே, நீங்கள் ஏதோ பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பது போலவும், அதைக் கவிழ்க்க நாங்கள் போராடுகிறோம் என்றும் திசைதிருப்ப வேண்டாம்.
CJP ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ், அசுதோஸ் ரங்கா ஆகிய இருவருக்கும் 5 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
வாக்குத் திருட்டைக் கண்டித்துப் போராட வந்த பெண்களின் உடைகளைக் கிழித்துத் தாக்கிய குண்டர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாறாக, அவர்களை வலதுசாரி அமைப்புகள் மாலையிட்டு வரவேற்று, கொண்டாடி வருகின்றன.
ஆனால், ஜந்தர் மந்தருக்குத் தேசியக் கொடியுடன் சென்றவர்களையோ குற்றவாளிகளாகக் கைது செய்��ிறது மோடி-ஷா அரசு.
தேசத்தின் நிலமெங்கும்
ஜந்தர் மந்தராக மாறவேண்டிய நேரமிது.
#CJP #SouravDas #AshutoshRanga #JantarMantar
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கு: விசிகவும் இணைந்தது
இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக திரு.ராகுல் காந்தி மற்றும் நான் உள்ளிட்ட 12 தலைவர்கள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம் 15 ஆம் நாள் இந்த மனு விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றேன்.
சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கே, டி.இராஜா, எம்.ஏ.பேபி, த��ஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி, தீபங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணியின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
'சனநாயகம் காப்போம்' போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனைகளை தலைவர்கள் ஒவ்வொருவரும் கூற வேண்டும் என ராகுல் காந்தி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
'வாரம் ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம், அல்லது நாள்தோறும் ஒரு கட்சியென பெரியகட்���ிகள் ஒவ்வொருநாளும் போராட்டத்தை ஒருங்கிணைக்கலாம்' என ஆலோசனை வழங்கினேன்.
அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது .