ஒடிசாவில் தேர்தல் நடக்கும் சமயத்தில் தமிழ்நாட்டு மக்கள் சாப்பிடும் முறையை அவமானப்படுத்தி வீடியோ வெளியிட்ட பாஜக சங்கிகள் தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வந்துவிட்டதால் உடனே பல்டி அடிக்கிறார்கள்.
பாஜக என்றால் நயவஞ்சகம்.
நரித்தனம், பச்சோந்தித்தனம்😡😡
#SayNoToNDA#VoteForDMK
கைகால் விளங்காமல் போனால் அவ்வளவு தானா? ஒண்ணுமே செய்ய முடியாதா? 🤔
ஸ்ட்ரோக் (Stroke) என்பது, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் டக்கென அடைத்துக் கொள்வது. எந்த மூளைப்பகுதி பாதித்திருக்கிறதோ, அதற்குண்டான உடல் பாதிப்பு இருக்கும். சிலருக்கு ஒரு கால் மட்டும் செயல்படாது, சிலருக்கு இடது பக்க உடம்பே செயல்படாது. சிலருக்குப் பேச்சு மட்டும் போகும்.
பிரஷர் இருப்பவர்கள் அதைக் கட்டுக்குள் வைக்கத் தவறுவதுதான் 75% ஸ்ட்ரோக்குகளுக்குக் காரணம். 🩸 மேலும் கிராமப்பகுதிகளில் தான் இது அதிகம். பிரஷர் இருப்பதே தெரியாமல் இருப்பது, அதைப்பற்றிய புரிதல் இல்லாமை, சரியாக மருந்து எடுக்காமை ஆகியவற்றால் இது நேர்கிறது.
படுபயங்கர தலைவலி அல்லது கைகால் வலுவிழந்து போகுதல் போன்ற அறிகுறிகள் வந்த நாலரை மணி நேரத்தில் (Golden Hour) மருத்துவமனை வந்து விட்டால், உடலில் எந்தச் செயல் குறைபாடும் இல்லாமல் தப்பித்து விடலாம். ✨
ஆனால் 40% நபர்கள், லேட்டாக மருத்துவமனைக்கு வந்ததால் ஊனமுறுகிறார்கள். ஸ்ட்ரோக் வந்த 24-48 மணி நேரத்திற்குள் செயல்படாத உடல் பாகங்களுக்குப் பயிற்சிகள் ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் பக்கவாதம் சரியாகி விடும். இன்றும் கூட சாலையில் கையைத் தாங்கிக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். இவர்கள் எல்லாரும் கைகால்கள் மறுபடி செயல்படச் சரியான பயிற்சி எடுக்காதவர்களே.
மூளைக்கு Neuro Plasticity என்ற விஷயம் உள்ளது. 🧠 அதாவது ஒயரிங் பாதிக்கப்பட்டதால் தானே பக்கவாதம் வந்தது? பயிற்சி செய்தால் புது வயரிங் ஏற்பட்டு, பழைய மாதிரி நார்மலாகி விடலாம்.
என் கிளினிக்கிற்கு வந்த சிலரிடம் பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். 2-3 வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்தது, இன்னும் சரியாகவில்லை என்பார்கள். ஒழுங்காகப் பயிற்சிகள் செய்திருந்தால் ஆறு மாதத்திலேயே நார்மலாகி இருக்க முடியும். அதை விட்டு விட்டு 2-3 வருடம் ஒன்றுமே செய்யாமல் இருந்தால், எப்படி சரியாகும்?
"பிசியோதெரபி செய்தீர்களா?"
"ஆமா சார். ஒரு மாசம் வீட்டுக்கு வந்தாரு, மசாஜ் எல்லாம் தந்தாரு, சரியாகலன்னு நிறுத்திட்டோம்."
"நிறுத்தி?"
"நிறுத்திட்டோம்."
"இப்பவும் அப்படியே கைகால் விளங்காம இருக்கீங்க." 😔
பிசியோதெரபி என்றால் மசாஜ் செய்வார்கள் என்றுதான் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. பிசியோதெரபி என்றால் உங்களை வேலை செய்ய வைப்பது. விளங்காத காலை வைத்து நடக்கப் பழகுவது, செயலற்ற கைகளை நீங்களே மடக்க முயற்சிப்பது, அவ்வளவே. அவர் சொல்லிக் கொடுக்கும் ஒரு 'Coach' மட்டுமே. மாதக்கணக்கில் நீங்கள்தான் பயிற்சி செய்ய வேண்டும். 💪
'Basic Instinct' படத்தில் நடித்த ஷரோன் ஸ்டோன் (Sharon Stone), அவரது 42-வது வயதில் ஸ்ட்ரோக் வந்து, 1% தான் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் இருந்தவர். அதிலிருந்து மீண்டு, ஒரு கை, ஒரு கால் விளங்காமல் போனாலும் கடினப் பயிற்சி செய்து, முற்றிலும் குணமடைந்து, அடுத்த சில வருடங்களில் மீண்டும் சினிமாவில் சாதித்தார். 🎬
வெறும் 1% வாய்ப்புள்ள நபர் மீண்டு வர முடிகிறது என்றால் நம்மாலும் முடியும். ஸ்ட்ரோக் வந்து பல வருடங்கள் ஆனாலும் சரி, இப்போது நினைத்தாலும் பயிற்சி செய்து பழைய மாதிரி நடக்க முடியும்.
முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ✅
சாலையில் யாராவது இப்படி கஷ்டப்படுவதைப் பார்த்தால், அவர்களுக்குச் சரியான பிசியோதெரபி பற்றி எடுத்துச் சொல்லுங்கள். 'இனிமேல் சரியாகாது' என்ற எண்ணத்தை மாற்ற உதவுங்கள்.
நம்பிக்கை பாதி மருந்து, பயிற்சி மீதி மருந்து! 🔥
Dr. V. Hariharan, MD, (PhD) 👨⚕️
Diet Consultant & Metabolic Scientist
இனிய காலை வணக்கம் நண்பர்களே. கணேசன் உஷா.
#எச்சரிக்கை#எச்சரிக்கை#எச்சரிக்கை. உங்களுக்காக உங்கள் #கணேசன்உஷா.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.
1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள்.
இதற்க்கு காரணம்.
1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.
2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.
3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் திடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.
4. காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.
இதை தவிர்ப்பது எவ்வாறு?
1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.
2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது
3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின் சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது.
5. நான்கு வழிச்சாலைகளில் ஒரு லயனில் இருந்து மற்றொரு லயனிற்க்கு மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.
6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.
7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அதிக வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.
8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக்கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.
9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம்.
10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம்.
இந்த தகவலை அதிகம் பகிர்ந்து ஆதரியுங்கள் விலை மதிப்பற்ற உயிரை காப்போம்
ஆகவே மிகவும் அதிக கவனம் செலுத்துங்கள் நட்புகளே......
உயிர் என்றாவது ஒருநாள் பிரியப் போவதுதான் இருந்தபோதிலும் அது இயற்கையாக வழியற்றதாக இருக்கவேண்டுமென்பதை கவனத்தில் கொள்ளுங்கள்....🙏🙏🙏
அன்புடன் கணேசன் உஷா.
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
இது அவமானகரமான செயல். தமிழ்நாட்டைத் தலைக் குனியவைக்கும் செயல். இந்த செயலில் கட்சி வேறுபாடின்றி எல்லோரும் சாதிவெறியோடு நிற்கிறார்கள். இந்த அநீதியைச் சரி செய்து சமூகநீதியை நிலைநாட்டுவது எப்போது @CMOTamilnadu ?!
🔴 #BREAKING | இந்தியாவில் புழங்கும் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி - ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை!
💉 2023 நவம்பர் 1 முதல் இந்தியாவில் Abhayrab என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசியின் போலியான தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளன
💉 போலியான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு வெறிநாய்க்கடி நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம்
💉 எனவே, அவர்கள் ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பூசியின் மாற்றுத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரை
💉 2023 நவம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் Abhayrab தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்களைப் பெற்றவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Link: https://t.co/IthlVVlja3
#Rabbies #Vaccine #Abhayrab #Australia #SparkMedia