தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணியின் மாநிலங்களவை வேட்பாளர் தானென்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
அதில் நமக்கெந்த பிராதுமில்லை.
ஆனால்,
இந்தக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இருப்பதாகக் கூறியுள்ளார்.
நீங்கள் சொல்லும் இந்தக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இருப்பதாக உங்களுக்கு யார் சொன்னது பிரவீன்
"Block surrender of 152 medical seats to national quota" என்று உதயநிதியை மேற்கோளிட்டு ஒரு செய்தி நறுக்கை 05.06.2026 நாளிட்ட Hindu தந்திருக்கிறது.
உதயநிதி தரும் விவரம் இதுதான்,
இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான மருத்துவ மேல்படிப்பிற்கான எண்ணிக்கை 430.
இதில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கானது 215.
இதில் 63 இடங்கள் முதல் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.
மீதமுள்ள 152 இடங்கள் இரண்டாம் கலந்தாய்வில் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
இதற்கிடையில் தமிழ்மணி என்பவர் இந்த 152 இடங்களையும் ஒன்றிய கோட்டாவிற்குத் திருப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்.
08, 10, மற்றும் 16.04.2026 தேதிகளில் வழக்கு விசாரனைக்கு வந்தபோது திமுக கூர்மையாக வழக்காடியது.
25, மற்றும் 29.05.2026 தேதிகளில் நீதிமன்றத்தில் தவெக ஆரசு சரியாக வாதாடததால் உச்சநீதிமன்றம் 152 இடங்களையும் ஒன்றிய கோட்டாவிற்குத் திருப்பிவிட்டது.
இதை சரி செய்யுமாறு முதல்வருக்கு உதயநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் மீதான விவாதங்களை பிறகு பார்க்கலாம்.
முதல்வர் விஜய் இதை சரி செய்வதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.
தங்கள் கட்சி 107 இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் தவெகவின் கிளை நிர்வாகிகள் வரை தாங்கள் எதை வேண்டுமானாலும் ஆய்வு செய்யும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாகக் கருதுகிறார்கள்.
பள்ளி முதல் மருத்துவமனைவரை சோதனைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குற்றம்.
அரசாங்கம் வேறு, அரசியல் கட்சிகள் வேறு.
தவெக நிர்வாகிகள்,
சாராயம் விற்று பிடிபடுகிறார்கள்.
பாலியல் பிரச்சனைகளில் பிடிபடுகிறார்கள்.
பணமோசடி வழக்குகளில் பிடிபடுகிறார்கள்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகளோ, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளோ தவெக அலுவலகங்களையோ அல்லது அவர்களது சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களையோ சோதனைசெய்ய கிளம்பினால் என்ன ஆகும்?
முதல்வர் விஜய் இதைத் தடுக்க வேண்டும்.
காலையில் விக்டோரியாவை பேருந்திலேற்றிவிட்டு இன்னொரு கோப்பை தேநீருக்காக நின்றபோது வந்த நண்பர்,
பருத்திக்கான இறக்குமதி வரியை விஜய் கேட்டு ஒன்றிய அரசு குறைத்துள்ளது என்றும்,
அதனால் ஆலை முதலாளிகளுக்கு சிரமம் குறைந்துள்ளது என்றும் கூறியவர் விஜய் நன்றிக்குரியவர் என்றார்.
முதலில் 11 விழுக்காடு பருத்திக்கான இறக்குமதி வரி தள்ளுபடி என்பது ஏற்கனவே இருக்கிறது. இதில் விஜய்க்கு ஏதும் இல்லை.
இறக்குமதி வரி தள்ளுபடியானால் பருத்தி விலை குறையும். அப்படி குறைந்தால் உள்ளூர் பருத்தி விவசாயி தற்கொலைதான் செய்துகொள்ள நேரும்.
அதற்கு பதிலாக உள்ளூர் உற்பத்திக்கு மான்யம் அல்லது பருத்தி உற்பத்தியை நவீனப்படுத்தி, விளைச்சாலை பேரதிகப்படுத்தி உள்ளூர் பருத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும்
காலையில் விக்டோரியாவை பேருந்திலேற்றிவிட்டு இன்னொரு கோப்பை தேநீருக்காக நின்றபோது வந்த நண்பர்,
பருத்திக்கான இறக்குமதி வரியை விஜய் கேட்டு ஒன்றிய அரசு குறைத்துள்ளது என்றும்,
அதனால் ஆலை முதலாளிகளுக்கு சிரமம் குறைந்துள்ளது என்றும் கூறியவர் விஜய் நன்றிக்குரியவர் என்றார்.
முதலில் 11 விழுக்காடு பருத்திக்கான இறக்குமதி வரி தள்ளுபடி என்பது ஏற்கனவே இருக்கிறது. இதில் விஜய்க்கு ஏதும் இல்லை.
இறக்குமதி வரி தள்ளுபடியானால் பருத்தி விலை குறையும். அப்படி குறைந்தால் உள்ளூர் பருத்தி விவசாயி தற்கொலைதான் செய்துகொள்ள நேரும்.
அதற்கு பதிலாக உள்ளூர் உற்பத்திக்கு மான்யம் அல்லது பருத்தி உற்பத்தியை நவீனப்படுத்தி, விளைச்சாலை பேரதிகப்படுத்தி உள்ளூர் பருத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும்
ஆச்சரியமாக இருக்கிறது.
எடப்பாடி சாரா இப்படி?
விஜயை சும்மா துவைத்து காயவைத்து பறந்துபோய்விடாமல் இருக்க க்ளிப்பும் போட்டு விடுகிறார்.
இதை திமுக அரசுமீது செய்திருக்க வேண்டும்.
அதற்கு எத்தனையோ வாய்ப்புகளை திமுக கொடுக்கவே செய்தது.
அப்போதெல்லாம் சொதப்பினார்.
சாம்சங் போராட்டத்தில் தூங்கிவிட்டு, கோயில் காசில் பள்ளிக்கூடம் கட்டலாமா? என்றார்.
திமுகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போட, சிறையிலடைக்க கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டது.
இவற்றை இவர்கள் செய்திருந்தால் ஆட்டம் இவர்கள் இருவருக்குமிடையில் இருந்திருக்கக் கூடும்
சரியான தயாரிப்பு இல்லை,
ஸ்கிரிப்ட் தப்பு,
இதெல்லாம் இல்லை.
நல்ல ஹோம்வொர்க். நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஸ்கிரிப்ட். பிறகெங்கே பிழை நேர்ந்தது.
அசிங்கத்தை செதுக்கி செதுக்கி எந்த வடிவத்தில் கொடுத்தாலும்,
அதை எத்தனை மெனக்கெட்டு எந்த ஒப்பனையில் வந்து ஒப்பித்தாலும்
அது இப்படித்தான் அசிங்கப்பட்டும் அம்பலப்பட்டும் நிற்கும்.
எந்த தயாரிப்பும் ஸ்கிரிப்டும் தேவையில்லை விஜய்.
உளறினால்கூட அறமும் உண்மையும் அழகாய்த்தான் இருக்கும்
திக நடராஜன் சார் பணிநிறைவு விழாவில்
ஆசிரியர் அய்யாவை சந்தித்தபோது அருகில் நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம் சிரித்தபடியே கேட்டேன்,
(பெரம்பலூர்காரய்ங்க எங்களுக்கு எப்போதும், எத்தனை சண்டை இருந்தாலும், இன்னும் எத்தனைபேர் பெரம்பலூரிலிருந்து அமைச்சரானாலும், அமைச்சர்னா அது ராசாதான்)
"ஆறுமாசத்துல ஒரு சனாதன ஒழிப்பு மாநாடு பெரம்பலூர்ல நடத்தலாமா சார்"
சிரித்தார்.
சன்னமான அளவிலேனும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
CBSE தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பேபியின் கோரிக்கை நியாயமானது
மேற்கு வங்கத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் cpm கொஞ்சம் வெற்றிமுகம் காட்டுவதாக சில பதிவுகள்வழி அறிந்துகொள்ள முடிகிறது.
மம்தா காலத்தில் அப்படி ஒரு கொடூரம்.
மக்களுக்கு அச்சம்.
பையப் பைய மீள்கிறது இடது
நீங்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு நிகழும் அனைத்திற்கும் நீங்கள்தான் பொறுப்பு விஜய்.
உளறக் கூடாது.
உருப்படியாக என்ன செய்திருக்கிறீர்கள்?
அருவருப்பாக இருக்கு சார் கேட்க.
பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தனது தேர்தல் அறிக்கையில் அன்றைய ஆளும் கட்சியும் வாயைத் திறக்கவில்லை.
எதிர்க்கட்சியும் திறக்கவில்லை.
களநிலவரம் அப்படி.
RBI வேறு கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறது.
முடியாது என்று வல்லுனர்கள் கத்தினார்கள்.
ஆனால் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக சொன்னீன்கள்.
இப்போது லாக் செய்துவிட்டு போயிருக்கிறது திமுக என்கிறீர்கள்.
இடைக்கால பட்ஜெட் பத்தாயிரம் கோடி கடனென்று சொன்னது.
RBI தள்ளுபடிகளுக்கான வாசலை இறுக்கியது.
இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமலா அறிக்கை தயாரித்தீர்கள்.
தொடர்ந்து அம்பலப்படுகிறீர்கள் விஜய்.
ஒன்று சொல்லவா விஜய்,
எப்படி எதற்கென்றே தெரியாமல் பெருந்திரள் உங்களை ஆதரித்ததோ
அதேபோல் எதற்கென்றே தெரியாமல் எதிர்க்கவும் செய்யும்.
காரணப்படனும்
காரணப்படுத்த வேண்டும்
இப்படிவொரு கருத்துக் கேட்பை கரப்பான் பூச்சிகள் வைத்திருக்கிறார்கள்.
இல்லை,
தேவையே இல்லை.
முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய அரசியல் அசிங்கம் என்பதே நமது பதில்.
விஜய் அவர்கள் வெளிப்படையாக உரையாட வேண்டும்.
அல்லது ஊகங்களின் அடிப்படையில்தான் அவரது செயல்பாடுகள் குறித்து மக்கள் முடிவிற்கு வரவேண்டியது இருக்கும்.
ஊகங்கள் ஆபத்தானவை.
இப்போதுகூட அவர் தில்லிக்கு போய்வந்தது குறித்து பலவகையான ஊகங்கள்.
ஏன் அமித்ஷாவை சந்திக்கவில்லை?
பிரதமரோடு ஏன் இவ்வளவு கூறுகியநேர சந்திப்பு?
ராகுலை ஏன் சந்திக்கவில்லை?
உங்களோடு வந்த எட்டு நபர்களுக்கும் இந்தப் பயணத்திற்கும் என்ன தொடர்பு?
அரசு செலவில் ஏன் தனி விமானம்?
CBSE இந்தமுறை "on screen marking system" என்ற முறையை அறிமுகப்படுத்தியது.
மாணவர்களின் விடைத்தாட்களை டிஜிட்டலாக்கி ஸ்க்ரீனில் பார்த்து திருத்தும் முறை இது.
அறிவியல் தொழில்நுட்பம் வளறுகிறபோது இத்தகைய முயற்சிகளை நாம் ஏற்கத்தான் வேண்டும்.
ஆனால் இந்த முறை வந்தபிறகு சென்ற ஆண்டைவிட மூன்று சதவிகிதம் தேர்ச்சி விழுக்காடு குறைந்தது.
இந்த வீழ்ச்சி குறித்து CBSE நிர்வாகமோ ஒன்றிய அரசோ கொஞ்சமும் கவலைப்பட்டது மாதிரித் தெரியவில்லை.
மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் லட்சக்கணக்கில் மலைபோல் குவிந்துள்ளன.
மாணவர்களின் உயர்கல்வி கனவுகள் காவுகொடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து 30.05.2026 தீக்கதிரில் வந்துள்ள செய்தி இப்படியாக முடிகிறது.
"கண்ணைத் திறந்து விடைத்தாட்களைத் திருத்தப் பழகுங்களேன்"
ஆலயத்தையும் மருத்துவமனையையும் ஆய்வு செய்தது ஒரே அமைச்சர்தான் என்றும்
அர்ச்சகரிடம் மன்னிப்பு கடிதமும்,
மருத்துவமனை கடைநிலை ஊழியரை பணி நீக்கமும் செய்த அமைச்சர்மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவியவே அர்ச்சகர் உள்ளிட்ட மூன்றுபேரையும் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஆக, அமைச்சர் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறார்.
அனவரையும் சமமாகப் பார்ப்பேன் என்ற நிலையில் இருந்து பிறழ்ந்திருக்கிறார்.
அவர்மீது நடவடிக்கை என்ன?
போக, இந்த ஆய்வு செய்வது மட்டுமே அமைச்சரின் வேலை இல்லை.
உங்கள் அமைச்சர்களில் ஒருவர் ஒரு மருத்துவமனைக்கு ஆய்விற்காகப் போகிறார்.
நோயாளிகளை சக்கர வண்டியில் வைத்து தள்ளிச் செல்லும் ஊழியர் பத்து ரூபாய் கூடுதலாகப் பெற்றதாக செய்தி.
அந்த ஊழியரை பணிநீக்கம் செய்கிறார்.
"கூடுதலாக" என்று செய்திகள் வருவதால் அதற்கு கட்டணம் இருப்பதாகக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
கட்டணம் இருப்பின் அதை நீக்க வேண்டும்.
அதே அமைச்சரா வேறு ஒருவரா தெரியவில்லை.
திருச்செந்தூர் போகிறார்.
கடவுளிடம் சீக்கிரமாக அழைத்துப் போவதற்கு 4,000 ரூபாய் லஞ்சம் வாங்குகிறாயர் அர்ச்சகர்.
அவரிடம் மன்னிப்புக் கடிதம் மட்டும் பெறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்படவில்லை.
பாரதி சொல்வான்
"சூத்திரனுக்கொரு நீதி
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின்
அது சாத்திரமன்று
சதியென்று காண்பீர்"
எனில் பாரதி மொழியில் சொல்வதெனில் உங்கள் அமைச்சர்கள் ஆய்வென்ற பெயரில் சதி செய்துகொண்டிருக்கிறார்கள் விஜய் .