திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பெருமைக்குரிய சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டு- பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள @dmk_youthwing நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.
அன்றாடம் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் செலுத்தி, கொள்கை உறுதியுடன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் கழகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முனைப்புடன், கழக இளைஞர் அணியின் இக்கொள்கைக் கூட்டம் பணியாற்றும்!
@arivalayam@rdsekarmla@Joel_Dmk@JJEbenezer1
வெள்ளை மனம்
பிள்ளை குணம்
முல்லை சிரிப்பழகில்
கொள்ளை கொள்ளும்
பேரழகு..
திக்கெட்டும்
புகழ் மணக்கும்
திராவிடர்நல் திருநாட்டின்
தீர்க்கமான திசைமுகம்;
திராவிட பேரரசர்
தீட்டிய பாதையிலே..
தினமும் களமாடும்
கொள்கை திருவிளக்கு
எங்கள் இளம் தலைவர்
என்றும்
வாழ்கவே! 💪🔥🌅
@Udhaystalin
#DyCMUdhay
#DMK4TN
#TamilNadu
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு சிகிச்சை அளித்து உறுதுணையாக இருந்த மருத்துவர்களுக்கும், உங்களைப் போன்ற செவிலியர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin
நீதிக்கட்சி காலத்தில் தொடங்கப்பட்ட Tamil Nadu Nurses and Midwives Council நம் திராவிட_மாடல் அரசின் காலத்தில் நூற்றாண்டு காண்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் இன்று பங்கேற்றோம்.
இந்தக் கவுன்சிலை அங்கீகரிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, "Trained nurses are the cornerstone of modern public health" என்று புகழ்ந்தார் சமூகப் போராளி மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள்.
Tamil Nadu Nurses and Midwives Council-இன் 2.5 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் மருத்துவத் தொண்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிராமப்புற சுகாதார கட்டமைப்பின் அடித்தளமாக இருப்பது முதல், பெருந்தொற்று - பேரிடர் மற்றும் போர் காலங்கள் அனைத்திலும் மனிதகுலத்தைக் காக்கும் முன்கள வீரர்களாக சேவையில் ஈடுபடும் செவிலியர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள்.
அவர்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் Tamil Nadu Nurses and Midwives Council இன்னும் பல நூற்றாண்டுகள் காணட்டும் என்று இந்நிகழ்வில் வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@Subramanian_ma@thayagamkavi@Dr_Ezhilan@PriyarajanDMK@nchitrarasu
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!
உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!
மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் இன்று அப்போலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும்வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு தெரிவித்த கழகத்தலைவர் அவர்கள் 150 தொகுதிகளில் 30% உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்கை அடைந்ததுள்ளதையும் சுட்டிக்காட்டி பாராட்டினார். அதேசமயம் உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.
சில பாகங்களில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களில் சில குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் முதலில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
வீடு வீடாகச் செல்லும் போது மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சியுடன் மக்கள் பேசுவது ஆகியவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் விளக்கினர்.
இக்கலந்துரையாடலில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும் கேட்டறிந்தார்.
***
#ஓரணியில்_தமிழ்நாடு
மாநில மக்களின் நலன்களுக்கு
நோயற்ற ஆரோக்கியமான
வாழ்விற்கு ஆதாரமாக
விளங்குவது மருத்துவமனைகள்.
கடைக்கோடி கிராமம் முதல்
முன்னேறிய நகரம்வரை
தமிழ்நாட்டில்
அனைத்து பகுதிகளிலும் சுகாதாரமும் மருத்துவமும் இருக்க மலரச்செய்த,
மானுட யுகத்தின் நவீனசிற்பி
முத்தமிழறிஞர் கலைஞரின் மகத்தான சேவையை மறக்கவும்
கூடுமோ!
@Udhaystalin
#KalaignarForever
#DyCMUdhay
#DravidianModdl
#DMKGovt
75-ஆண்டு கால ஆலமரமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை அணியாக 46-ஆம் ஆண்டில்
அடியெடுத்து வைத்திருக்கிறது நம் @dmk_youthwing. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தமான நம் இளைஞர் அணி, மாவட்டம்-மாநகரம்-ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர் வரை பரந்து விரிந்து வளர்ந்துள்ளது.
இந்தக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கழகத்தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் தற்போது ஒன்றியத்துக்குட்பட்ட கிளைகளிலும் நகர-பகுதி-பேரூர் வட்டங்களிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதன் முதற்கட்டமாக சென்னை மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட 43-வட்டங்களிலும், 712-பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில்
கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டுடன் கழகக் கொள்கைகளை மனதிலேந்தி மக்கள் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam@nchitrarasu@Joel_Dmk@Prakashbalara01
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!
விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில், கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும் - தமிழ்நாட்டின் உரிமை & வளர்ச்சிக்காகவும், இச்சிறப்புக்குரிய பொதுக்குழுவில் 27 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை செயல்படுத்திட, சிறப்பு தீர்மானத்தை நம் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்தார்கள்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தது 30% வாக்காளர்களை 2 மாதங்களில் பூத் கமிட்டிகள் மூலம் கழக உறுப்பினர்களாக்கிட நம் முதலமைச்சர் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள்.
கல்வியாளர் அணி - மாற்றுத்திறனாளிகள் அணி என கழகத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முடிவுகளும் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
கழகத்தின் கொள்கைகள் - திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
நம் முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் கழக கூட்டணியை 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்லச் செய்ய பொதுக்குழுவில் உறுதியேற்றோம்.
2026-இல் கழகம் பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்!
#திமுகபொதுக்குழு2025
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!
#கலைஞர்102 🖤♥
தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத்தரத்திலான பாடத்திட்டங்கள் குறித்த Global Exposure பெற வேண்டும் என்ற இலக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், ‘#நான்_முதல்வன்’ Scholars for Outstanding Undergraduate Talent in Tamil Nadu (SCOUT) திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம், தென் கொரியாவின் புகழ்பெற்ற Gachon University மற்றும் Pusan National University-யில் International Internship Training முடித்து திரும்பியுள்ள, தமிழ்நாட்டின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 6 மாணவ – மாணவியரை இன்று நேரில் சந்தித்து அவர்களது அனுபவத்தைக் கேட்டறிந்தோம்.
எளிய குடும்பச் சூழல் மற்றும் முதல் தலைமுறையாக கல்லூரிக்குச் செல்லும் இம்மாணவர்கள், கொரியாவில் தங்களுக்குக் கிடைத்த அறிவுசார் அனுபவங்களை நம்மிடம் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், தென் கொரியாவில் மேற்படிப்பு படிப்பதற்கான சூழல், அங்குள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி முறைகள் குறித்தும் அறிந்து கொள்கிற வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறினர்.
இந்தப் பயணமும் - பயிற்சியும், தங்கைகள் வித்யா, அக்ஷரா, தம்பிகள் சுமித்குமார், பால்வண்ணன், சுகந்த், சந்துரு ஆகியோருடைய அடுத்தகட்ட உயர்கல்விக்கும் - வேலைவாய்ப்புக்கும் அடித்தளமிட்டுள்ளதில் பெருமிதம் கொள்கிறோம்.
அவர்களின் எதிர்காலம் சிறக்க #நான்_முதல்வன் துணை நிற்கும் என்று வாழ்த்தினோம்!
#PradeepYadavIAS #KrantiKumarPatiIAS
கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கும், நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதிப் பகிர்விலும் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளர் ஒருவர், இளம் பேச்சாளர் ஒருவர் என தொகுதிக்கு இரண்டு பேர் பேசவுள்ளனர். மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், 72-வது பிறந்தநாள் காணும் மாண்புமிகு கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில், விளக்கிப் பேசுவார்கள்.
தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையைத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையிலும், இந்தப் பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#கழக_இளைஞர்_அணி #தலைவர்72 #FairDelimitationForTN #StopHindiImposition
@dmk_youthwing