கமல்ஹாசனும் இளையராஜாவும் விழிப்புலன் அற்ற சிறுவர் இல்லத்தின் மரத்தடியில் அழுத நிகழ்வை முன்னர் பகிர்ந்திருந்தேன்.
இப்போது அபூர்வ சிங்கீதத்திலும் சொன்னார்கள்.
அதை விட முக்கியமாக
2015 இல் சென்னைப் பெருவெள்ளத்தில் அந்தப் பள்ளி சிக்கிய போது இசைஞானி தேடிச் சென்று ஆதரவு கொடுத்தது
❤️❤️❤️
மேன் மக்கள் மேன் மக்களே
❤️❤️❤️
நானும் இளையராஜாவும் கட்டிப்பிடித்து அழுதோம் ❤️
ஜெமினியில் உள்ள சிறுமலர் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோர், வாய் பேச முடியாதோர் குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2018 இல் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
அப்போது அவரை வழி நெடுகிலும் குழந்தைகள் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் மேடையில் பேசும்போது கண்கலங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ''இங்கே நான் வாழ்த்த வந்தேன் என்பதை விட வாழ்த்து பெற வந்தேன். நான் சினிமாவில் பாடி உங்களுக்கு உத்வேகமூட்டிய அந்தப் பாடல் இன்று எனக்கே தெம்பூட்டுவதுபோல் தோன்றியது.
நான் செல்ல வேண்டிய பாதையில் இன்னும் வேகமாக பீடுநடை போட்டுச் செல்ல குழந்தைகள் வாழ்த்தியதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
37 ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் இதேபோன்ற மாணவர்களுடன் 'ராஜபார்வை' படத்திற்காக நானும், இளையராஜாவும் வந்தோம். அப்போது உள்ளே போகும்போது பலரும் பாட ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்து என்னாலும், இளையராஜாவாலும் அழுகையை அடக்க முடியவில்லை.
தனியாக இருவரும் வெளியே வந்து ஒரு மரத்தின் மறைவில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழுதோம்'' என்று கமல் பேசினார்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்தச் செய்தியைக் கடந்த நவம்பர் 14, 2018 தமிழ் இந்து செய்தித் தளத்தில் படிக்கும் போதே பாதியில் கண்கள் பூத்தன. சினிமா என்றாலும் கூட உணர்வினைச் சீண்டிப் பார்க்கும் காட்சியமைப்பு வந்தால் இடம் பாராமல் கண்ணில் நீர் சொரிந்து விடும் எனக்கு.
அப்படித்தான் “ராஜ பார்வை” படத்தில் விழிப்புலனற்ற சிறுவர்களோடு கலந்து பேசி விட்டு கமல் (ரகு என்ற பாத்திரம்) திரும்பும் போது
“ரகு அண்ணா..
ரகு அண்ணா
கிட்ட வாங்கண்ணா”
என்று பேபி பேபி சாரதா ப்ரீத்தா கூப்பிட்டு அவர் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்பாளே அந்த நேரம் என் விழி நீர் சொரிந்ததை நினைவுபடுத்தியது கமலின் மேற்கண்ட பேச்சு.
அந்தக் காட்சியோடு தொடர்ந்து ஒரு பாடல் ஒலிக்கும். படத்தின் காட்சிக்காகவே மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட பாட்டு அது. இசைஞானி இளையராஜா சினிமா எனும் ஊடகத்தில் எவ்வளவு அணுக்கமாக, ஆத்மார்த்தமாக இயங்கியிருக்கிறார் என்பதற்கு இந்தப் பாடலும் ஆகச் சிறந்த உதாரணங்களில் ஒன்று. எமது வாழ்வியலோடு பாடல்களைப் பொருத்தி அனுபவிக்க முடியும் என்றால் அதற்கு இம்மாதிரியான உணர்வு பூர்வமான பந்தம் ஒரு படைப்பில் பிணைக்கப்பட்டு கருவிலேயே உருவாகியிருக்க வேண்டும்: கமலும் ராஜாவும் தம்முடைய படத்துக்காக அந்தக் களம் தேடிக் கண்டு உருகியதைப் பின் காட்சியிலும், இசையிலும் அப்படியே கொண்டு வந்து தந்திருக்கிறார்கள்.
2015 இல் சென்னை வெள்ளத்தில் இந்தப் பள்ளி சிக்கிய போது இளையராஜா நேரில் சென்று ஆறுதல் பகிர்ந்திருந்தார்
https://t.co/VNavrTMhp0
இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி எவ்வளவு மனித நேய சிந்தனை கொண்டவர் என்பதற்கான சான்று அது.
கமலின் பேச்சைக் கேட்டு விட்டு இந்தப் பாடலைக் கேட்கும் போது மெய் சிலிர்ப்போடு கண்ணீர் வந்தது.
பனி விழும் பொழுதினில்
இரு விழி நனைந்தது நேற்று
மலர்களின் இமைகளைத்
திறந்தது மெல்லிய காற்று
இரவின் பிள்ளைகள் நாங்களே
காதுகளே எம் கண்களே
நிறங்களில் பேதம் இல்லையே...
கானா பிரபா
“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for your kindness and for respecting our privacy as we walk through this fragile chapter.”💐
#arrsairaabreakup
They’re stripping everything of soul, aren’t they? The Tyson-Jake match felt so hollow—a culmination of the modern marketing gimmick that benefits everyone except the end consumer. The joke, as always, is on us. Isn’t that how it goes with most things, these days?
@BCCI WeRot Slowly
NoHit Marma
another WC opportunity gone before it even starts
pandya, jadeja, siraj these immune taken-for-granted selections will not get us the cup
#T20WorldCup2024
இந்தியில் எஸ்பிபிக்கு முதல் படம் ஏக் து ஜே கேலியே.
எஸ்பிபிதான் பாடவேண்டும் என்று பாலசந்தர் விருப்பப்படுகிறார். லக்ஷ்மிகாந்த் பியாரிலால்தான் இசையமைப்பாளர்(கள்). இந்தி இசையமைப்பாளர்களுக்கு ‘மதராஸி’ என்றாலே கசப்பு. ‘நாயகன் தமிழன். கொஞ்ச நஞ்சம் உச்சரிப்பு பிழையாயிருந்தாலும் பரவாயில்லை’ என்று லக்ஷ்மிகாந்த் பியாரிலாலை சம்மதிக்க வைக்கிறார் இயக்குநர். (பிறகு அந்த இரட்டையர்கள் ஒவ்வொரு பேட்டியிலும் எஸ்பிபியைக் கொண்டாடிக்கொண்டே இருந்தது தனிக்கதை.)
எஸ்பிபிக்கு தான் இந்தியில் பாடவேண்டிய முதல் பாடலில் லதா மங்கேஷ்கரோடு இணைந்து பாடவேண்டும். அல்ல. பேசவேண்டும். ’தேரே மேரே பீச் மே(ன்)’ பாடல். லதா மங்கேஷ்கர் பாட இடையிடையே எஸ்பிபி பேசவேண்டும். முதல் வசனம் ’ஓ அப்படியா..’ அடுத்து.. ‘ஏய்... நீ ரொம்ப அழகா இருக்கே’..
அதற்கடுத்து தான் பேசவேண்டிய வரியைப் படித்ததும்தான் எஸ்பிபிக்கு உதறலெடுத்தது.
’பரவாயில்லயே நீ நல்லா பாடற’
சுதந்திரத்துக்கு முன்பிருந்து பாடிக்கொண்டிருக்கும் பாடகி லதா மங்கேஷ்கர். சுதந்திரத்துக்கு 20 வருடங்கள் கழித்து பாட ஆரம்பித்தவர் எஸ்பிபி. இந்த உரையாடல்கள் நடப்பது 1981ல். காலவித்தியாங்களைக் கணக்கில் கொள்ளுங்கள்.
எஸ்பிபி மனதில், இசையாளுமையாக இருந்த ஒருவரிடம், தனக்குத் தெரியாத மொழிப்படத்தில் பாடப்போகும் முதல் பாடலில் ‘நீ நல்லா பாடற’ என்று சொல்ல வேண்டும். லைவ் ரிகார்டிங். அருகில் அவர் இருக்க இதைச் சொல்லவேண்டும்.
ஒலிக்கூடத்துக்கு லதா மங்கேஷ்கர் வருகிறார். அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். எஸ்பிபியை அறிமுகப்படுத்துகிறார்கள். லதாஜியின் காலைத்தொட்டு வணங்குகிறார் எஸ்பிபி. தேநீர் வழங்கப்படுகிறது. பாலசந்தர் கொடுத்த சிச்சுவேஷன், ஆனந்த் பக்ஷி எழுதிய பாடல் வரிகளெல்லாம் இவருக்கும் சொல்லப்படுகிறது. இந்த ‘நீ ரொம்ப நல்லா பாடற’ வரி சொல்லப்படும்போது கை நடுங்குகிறது எஸ்பிபிக்கு. அவர் கையில் இருந்த தேநீர் லதா மங்கேஷ்கரின் சேலையிலேயே கொட்டுகிறது.
‘இவன்கூடலாம் பாடமாட்டேன்’ என்று லதாஜி சொல்வார் என நினைக்கிறார் எஸ்பிபி. “இது நல்ல சகுனம். இந்த பாட்டு ஹிட்டாகும்’ என்று லதா மங்கேஷ்கர் சொல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிறது எஸ்பிபிக்கு. ரெகார்டிக்குக்கு தயாராகிறார்.
******
இதுவரை நடந்தவை விஷயமல்ல. அந்தப் பாட்டைக் கேட்கும்போது இந்தப் பின்னணியெல்லாம் நம்மால் உணரமுடிந்ததா? அத்தனை கேஷுவலாகப் பாடுவார் / பேசுவார் எஸ்பிபி.
கர்நாடக சங்கீதமே தெரியாமல் பாடிய சங்கராபரணம் பாடல்களுக்காக முதல் தேசிய விருதை வாங்கியவர், இந்தி தெரியாமல் பாடிய ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்கு, இரண்டாவது தேசிய விருது வாங்குகிறார்.
மைக் முன் நின்றால் அவர்தான் கமல். அவர்தான் ரஜினி. அவர்தான் மோகன். அவர்தான் டி ராஜேந்த்தர். அவர்தான் விஜயகாந்த். அவர்தான் தனுஷ்.
இந்த நாயகர்களாக தன்னை வரித்துக்கொண்டு பாடுவார். உச்சரிப்பு முதற்கொண்டு அந்த நாயகர்களின் தன்மையிலேயே இருக்கும். ஹானஸ்ட் ராஜ் படத்தில் "காட்டுறேன் காட்டுறேன்" பாடலை ஒருமுறை கண்மூடிக்கேட்டுப் பார்த்தால் விஜயகாந்த் பாடுவது போலத்தான் இருக்கும்.
அதனால்தான் அவர் எஸ்பிபி!
i hope there's another app that sings the death knell to Chennai auto drivers. Demanding unreasonable and unrealistic trip rates, no usage of meter, high time Chennai auto annas reel themselves in
@AmazonHelp@TCL_Global@tcl_india World's most customer centric company might be the biggest paradox I've heard @AmazonHelp@amazonIN
November 15th reported the TV repair of a comprehensive warranty covered TCL
It is Feb 3 today and yet not 1 word of support or care to help customer
@amazonIN@tcl_india@TCL_Global worst customer support and considering the customer to be stupid and complete neglect of grievance.
We 1st reported the TCL 43P615 display going blank on the 15th of November. Trying to reach out to customer support
Thanks to the social media response team at least for taking care to respond to customers grievance @AmazonHelp
Whereas no response or sense of accountability from @TCL_Global@tcl_india
@AmazonHelp The only thing that has happened till now after a month of raising the poor customer support issue from Amazon India - every week or so we get a mail update that Amazon don't have any updates from tcl or any help to repair/replace the warranty covered tv
@AmazonHelp@amazonIN