மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
சாலை விபத்தில் மரணமடைந்த
திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.முத்துசுரேஷ்ராஜா - விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ்ராஜ் - ஈரோடு தெற்கு மாவட்டத���தைச் சேர்ந்த கல்வெட்டுபாளையம் பி.சரவணன், சூரம்பட்டி த.விஜயகுமார் - கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.ராமமூர்த்தி ஆகிய 5 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் 50 இலட்சம் ரூபாயினை இன்று (2.7.2026) குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார். இதுவரை 27 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியே 70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்."என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விக்னே��் - கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.மேகலிங்கம் - ��ேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முருகன் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார், ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம். லிங்கேஸ்வரன் - மதுரை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். திருப்பதி - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.முத்துராஜா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நா.மாரிமுத்து - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பார்வதி (எ) உஷா - திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இ.பரத்குமார் - தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.சண்முகம் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் ஆகிய 22 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து;
���ிருநெல்வேலி மேற்கு மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த எம்.முத்து சுரேஷ்ராஜா அவர்கள் 03.01.2026 அன்று வீ.கே.புதூர் - அத்தியூத்து ரோட்டில் வன்னார் மாடசாமி கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதிய விபத்தில் சிக்கியும் - விழுப்புரம் வடக்கு மாவட்டம், அருவாப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்ராஜ் அவர்கள் கடந்த 21.7.2025 அன்று திண்டிவனத்திலிருந்து அருவாம்பாக்கத்தில் உள்ள தனது வீ���்டிற்கு வந்து கொண்டிருந்தபோது எறையனூர் மேம்பாலம் இறங்கும் முன்பே ஜோசப் பள்ளிக்கூடம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் சிக்கியும் - ஈரோடு தெற்கு மாவட்டம், வெங்கம்பூர் அஞ்சல், கல்வெட்டுபாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பி.சரவணன் அவர்கள், கடந்த 15.10.2025 அன்று தாமரைபாளையம் சென்று வீடு திரும்பும் வழியில் கால்நடை மருத்துவமனை அருகில் கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கியும் - ஈரோடு தெற்கு மாவட்டம், சூரம்பட்டி, ஸ்���ாலின் தெருவைச் சேர்ந்த த.விஜயகுமார் அவர்கள், 12.10.2025 அன்று திண்டல் ரிங் ரோடு ரங்கம்ப்hளையம் மேம்பாலத்தில் லாரி மோதி விபத்தில் சிக்கியும் - கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம், துரிஞ்சிபட்டு கிராமத்தைச் சேர்ந்த கு.ராமமூர்த்தி அவர்கள், 26.3.2026 அன்று திருக்கோவிலூர் வட்டம், ஜானகிபுரம் அருகே அவர் சென்ற இருசக்கர
வாகனம் விபத்தில் சிக்கியும் உயிரிழந்த இந்த 5 குடும்பங்களுக்கும் குடும்ப நிவ���ரண நிதியாக, தலா ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.முத்துசுரேஷ்ராஜா அவர்களின் மனைவி திருமதி எம்.முத்துச்செல்வி அவர்களிடமும் - விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ்ராஜ் அவர்களின் மனைவி திருமதி பி.அபிதா அவர்களிடமும் - ஈரோடு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.சரவணன் அவர்களின் மனைவி திருமதி எஸ்.ஜானகி அவர்களிடமும் - ஈரோடு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த த.விஜயகுமார் அவர்களது மனைவி திருமதி வி.நதியா அவர்களிடமும் - கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.ராமமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி மனோன்மணி அவர்களிடமும் இன்று (2-7-2026) காலை, வழங்கினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக��கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உ��ர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்க��், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Ahmedshabbir20 Shab.. you missed a few things.. Personal lawyer to Vijay, appeared for Vijay in a tax evasion case and a former Advocate General during the EPS period
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆள���நர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த ச���யத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், ���ிராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
Arsenal is here.
தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்!
பயன்படுத்திக்கொள்ள:
https://t.co/MGZfzpj62D
Use it. Amplify it. Own the narrative.
#VoteForDMK
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த போது, உற்சாக வரவேற்பு அளித்த கழக நிர்வாகிகள் - இளைஞரணியினர் - கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள் - பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்.
உங்கள் அன்பினில் நெகிழ்ந்தேன்.
@k_vasantham@TUdhayasuriyan@AbdulmalikDmk
#CMStalinInKallakurichi கள்ளக்குறிச்சி மாவட��டத்திற்கு வருகை தரும்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழக தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களை, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் வருக வருக என அன்போடு வணங்கி வரவேற்கிறோம்....🙏
#CMStalinInKallakurichi
#CMStalinInKallakurichi கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழக தலைவர் அண்ணன் தளபதியார�� அவர்களை, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் வருக வருக என அன்போடு வணங்கி வரவேற்கிறோம்....🙏
#CMStalinInKallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழக தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களை, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் வருக வருக என அன்போடு வணங்கி வரவேற்கிறோம்....🙏
#cmstalininkallakurichi