தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
தொழிற்துறையினர் தமிழ்நாட்டைத் நாடி வரவும் - சீரான வளர்ச்சியில் நாம் நடைபோடவும், சட்டம் - ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாக்கும் என்னுடைய துறையான காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில்,
👮 மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து பல இடங்களில் புதிய காவல் நிலையங்கள், காவல் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு நிலையங்கள் - வாகனங்கள்
👮♂️ ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள், காவலர் நாள்
⛓️💥 ஆதிக்கத்தின் - தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,
என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன்.
ஊர்ந்து கிடக்க அடிமைகள் அல்ல நாம்; நெஞ்சுநிமிர்த்தி நடைபோட்டு 2026-இல் #DravidianModel 2.0 ஆட்சியமைக்கப் பயணத்தைத் தொடர்வோம்! வரலாறு படைப்போம்!
இவரை நான் வெறும் அரசியல் தலைவராக பார்க்கவில்லை.
நம் அனைவரது குடும்பத்திலும் ஒருவராக வாழ்ந்து வருபவர்.
இப்படி ஒரு அருமையான மனிதரை நான் பார்த்ததே இல்லை... இனி பார்க்கவும் முடியாது
❣️❣️❣️❣️❣️
#HBDMKStalin
அகமென்றும் புறமென்றும்
வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற
இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலகமொழி
நம் மொழி - அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்…
உலகத் தாய்மொழி நாள் நல்வாழ்த்துக்கள். ❤️
#தமிழ்_வாழ்க
தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.
தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.
தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது.
இனியும் வீழ்த்தும்.
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே " - எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்.
#தமிழ்_வாழ்க
#InternationalMotherLanguageDay