Celebrating 5 years of Ahimsa Entertainment ❤️
One lucky follower will win free tickets to every Tamil film for the next 12 months, anywhere in the world — we book them for you.
To enter:
1. Follow @ahimsafilms
2. Repost this
Winner chosen July 30, 2026.
மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி கொடுத்த திருத்தம் என்ன என்று சபைக்குச் சொல்லாமல், 'அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்' என்கிற அணுகுமுறை, தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பானது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அது என்ன திருத்தம் என்று தெளிவாக விளக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை. எனவே, திங்கட்கிழமை காலை அவை கூடியவுடன், "தானாக முன்வந்து இந்தத் திருத்தத்தைத் திரும்பப் பெறுகிறோம்" என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த தி.மு.க ஆட்சியில் அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் என்ற நல்ல திட்டத்தை தான் கொண்டு வந்தார்கள்..! ஆனால் அவர்கள் செய்த வேலை என்ன தெரியுமா..? இது தான் சமூக நீதியா..? ஒரு பிச்சைக்காரனிடமிருந்து 10 ரூபாய் பிடிங்கி அவனுக்கு 5 ரூபாய் கொடுப்பது தான் தானமா..? முதலமைச்சர் விஜய் அண்ணா எங்களுக்கு விடியல் கொடுங்க.. தலைமைச் செயலகத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி
#CMVijay #TVK #DMK #PTTeachers
Cristiano Ronaldo's vertical leap is pure elite athleticism. Incredible power, perfect timing, and unmatched aerial presence. Truly a master of the game. ⚽📈
எங்க பெயரையோ எங்க கட்சி பெயரையோ சொல்லி வந்தா நம்பாதீங்க.. எனக்கு மினிஸ்டர் நல்லா தெரியும்னு சொன்னா அவருக்கு GET OUT சொல்லிடுங்க.. " - அமைச்சர் ராஜ்மோகன்..
#Tamilnadu#Minister#RajMohan
ஈரான்- இஸ்ரேல்-சில தகவல்கள்-1
ஈரானின் மக்கள் தொகை 7 கோடியே 70 லட்சம். பார்சி மொழியே தாய் மொழி. ஆர்யன் என்பதே ஈரான் என்று அழைக்கப்படுகிறது எனும் கருத்துண்டு. தற்காலப் பாரசீக மொழியில் உள்ள "ஈரான்" எனும் பெயர் "ஆரியர்களுடைய நிலம்" எனும் பொருள்படும் ஈரானியச் சொல்லான "ஆர்யானா" என்பதில் இருந்து பெறப்பட்டது.
3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சசானியக் கல்வெட்டில் ஈரானைக் குறிக்க "ஏரான்" என்னும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. இத்துடன் சேர்ந்திருந்த பார்த்தியக் கல்வெட்டில் ஈரானியர்களைக் குறிக்க "அர்யான்" எனும் பார்த்தியச் சொல் பயன்பட்டுள்ளது. 1935 வரை பாரசீகம் எனும் பொருளில் பெர்ஷியா என்றே ஈரான் அழைக்கப்பட்டது.
6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர்ப்புற மக்கள் குடியேற்றங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆரிய நாடோடிக் கூட்டத்தினர் அலை அலையாக வந்து தங்கியுள்ளனர்.கி.மு. 7 மற்றும் 6 ம் நூற்றாண்டுகளில் ஒன்றுபட்ட தேசமாக ஈரான் வலுவுடன் இருந்துள்ளது.
கி.மு.334 ல் அலெக்சாண்டர் படையெடுத்து அப்போதிருந்த அகமெனிட் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினார். கி.மு.36 ல் மார்க் ஆண்டனி படையெடுத்து பார்த்திய அரசை தோற்கடித்தார். கி.பி.632 ல் அரேபியர்கள் பாரசீகத்தை வென்று இஸ்லாமிய அரசை நிறுவினர். 9 ம் நூற்றாண்டிற்குள் இஸ்லாம் பாரசீகத்தின் பிரதான மதமாக மாறியது.
கி.பி.1218 ல் செங்கிஸ்கான் படையெடுப்பால் பாரசீகம் பெரும் அழிவைச் சந்தித்தது. 25 லட்சம் மக்கள் தொகை இரண்டரை லட்சம் மக்கள் தொகையாக சுருங்கிப் போனது.16 மற்றும் 17 ம் நூற்றாண்டுகளில் சஃபாவிட் வம்ச ஆட்சியின் கீழ் ஷியா இஸ்லாமிய நாடாக மாறியது.
1722 ல் ஆப்கானிய கிளர்ச்சியாளர்களால் சஃபாவிட் வம்ச ஆட்சி முடிவிற்கு வந்தது. 1735 ல் ஆப்கானியர்களை விரட்டிவிட்டு நாதிர்ஷா ஆட்சிக்கு வந்தார். இந்த நாதிர்ஷா தான் இந்தியாவிற்குள்ளும் படையெடுத்து கோஹினூரைக் கொண்டு சென்ற நபர்.
பல்வேறு படையெடுப்புகளையும், உள்நாட்டுக் குழப்பங்களையும் சந்தித்த பாரசீகம் 1906 ல் மன்னரின் கீழான முதல் பாராளுமன்றத்தை அமைத்துக் கொண்டது. 1925 ல் கஜார் வம்ச ஆட்சியை வீழ்த்தி ரேஸாகான் என்பவர் ரேஸாஷா என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார். அவருக்குப் பிறகு அவரது மகன் ரேஸா பலாவி ஆட்சிக்கு வந்தார்.
1951 ல் ஆட்சிக்கு வந்த மொசாதிக் நாட்டின் எண்ணெய் வளத்தை அரசுடமையாக்கினார். இதனால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி, 1953 ல் மொசாதிக் சிஐஏ சதியால் கைது செய்யப்பட்டார். ஷா மீண்டும் வலுப்பெற்றார். சிஐஏ உதவியுடன் எதிர்க்கட்சிகளை நசுக்கினார். ஷாவின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்த அயோதுல்லா கொமேனி சிறையிடப்பட்டு பிறகு நாடு கடத்தப்பட்டார்.
1978 ல் ஷா விற்கு எதிராக ஈரானியப் புரட்சி தொடங்கியது. 1979 ஜனவரியில் ஷா நாட்டை விட்டு ஓடினார். கொமேனி நாடு திரும்பினார். 1979 ஏப்ரல் 1 ஈரான் இஸ்லாமியக் குடியராகி, கொமேனி பெருந்தலைவரானார். அமெரிக்காவுடனான ஈரான் உறவு சீர்கெட்டது. 1979 அமெரிக்க தூதரகத்திலிருந்த 52 பேரை 444 நாட்கள் பிணைக்கைதிகளாக வைத்திருந்து விடுவித்தனர் ஈரானிய மாணவர்கள்.
இக்குழப்பத்தை பயன்படுத்தியே ஈரானுக்குள் புகுந்து தனது எல்லையை விரிவுபடுத்த முயன்றார் ஈராக் அதிபர் சதாம் உசேன். இதுவே ஈரான்- ஈராக் போராக வெடித்தது. 1988 ல் போர் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து ரஃப்சஞ்சாணி தொடங்கி தற்போது விபத்தில் இறந்த இப்ராஹிம் ரைசி வரை ஆட்சி புரிந்தனர்.
மோசமான வானிலையால் விபத்து என்று சொல்லப்பட்டாலும், மோசமான அமெரிக்க அரசியல் ஈரானுக்குள் இஸ்ரேல் வடிவத்தில் நுழைந்ததையும் மறுப்பதற்கில்லை. இஸ்ரேல் யார்?
அரேபிய நிலப்பரப்பில் அமெரிக்காவின் ஏவுகணை தளங்களை அமைத்துக் கொள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடே இஸ்ரேல். அமெரிக்காவிலிருந்து குண்டு போட்டால் வந்து சேராதல்லவா?
வெறும் 80 லட்சம் மக்கள் தொகையையும் ஜெருசலேத்தை தலைநகராகக் கொண்ட நாடு. ஹீப்ருவும் அரபியும் மொழிகள். தற்போதைய நிலவரப்படி யூதர்கள் 77%, முஸ்லிம்கள் 16%. மேற்கு ஆசியாவின் மத்தியதரைக் கடலின் கிழக்கில் அமைந்துள்ளது. வடக்கில் லெபனான், வட கிழக்கில் சிரியா, கிழக்கில் ஜோர்டான், தென் மேற்கில் எகிப்து ஆகிய நாடுகளே எல்லைகள்.
இஸ்ரேல் என்று பெயரிடப்படாத இந்நிலப்பகுதியை கிபி 7 ம் நூற்றாண்டில் பைசாண் டைன் பேரரசன் ஹிராகிளியஸ் ஆண்டான். அதன் பிறகு 636 ல் முஸ்லிம்கள் வசம் இப்பகுதி வந்தது. ஆறு நூற்றாண்டுகள் முஸ்லிம்கள் ஆண்டனர். 1516 முதல் 20 ம் நூற்றாண்டு வரை ஒட்டோமான் பேரரசுக்கு உட்பட்ட பகுதியாக இது இருந்தது.இக்காலங்களில் இங்கிருந்து வெளியேறிச் சென்ற யூதர்கள் 1881,1904,1919,1924,1930 ஆகிய காலங்களில் பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினர்.