#நடிகர்திலகம் பாலாஜி இணையின் இரண்டாவது வெற்றிப் படம். தெலுகு மூலம். AL நாராயணன் வசனம் எழுத AC திருலோகச்சந்தர் இயக்கினார். சரோஜாதேவி, பாலாஜி, நாகேஷ், ரோஜாராமணி, பண்டரிபாய் நடிக்க கண்ணதாசன் MSV இணை அருமையான பாடல்கள் தர 1968 ஜூன் 7 ரிலீஸ். 58 ஆண்டுகள். Shiftingல் 100 தொட்டு வெற்றி.
அகிலனின் கதைக்கு A P நாகராஜன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார். #நடிகர்திலகம் வெகு இயல்பு. சரோஜாதேவி, தேவிகா இருவரும் சிறப்பு. பகவதி, சந்தியா, மனோகர் நடிக்க கண்ணதாசன் KV மகாதேவன் இணை சூப்பர் ஹிட் பாடல்கள் தர 1963 ஜூன் 7 ரிலீஸ். 63 ஆண்டுகள். மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்டது.
@N_sujatha08 It is there with a lot of jumps. Banumathi is வில்லி 😂. Padmini is paired with பாலையா. So be prepared for these things and start watching. 🙂
P.ராஜமாணிக்கம் நந்தினி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த சரித்திர படம். #நடிகர்திலகம், வைஜயந்தி மாலா, பத்மினி, பானுமதி, பண்டரிபாய், பாலையா, நம்பியார் நடிக்க, V.C.கோபாலரத்தினம், கு. ராஜவேலு கதை வசனம் எழுத G.கோவிந்தராஜூலு இசையமைக்க K. வேம்பு இயக்கினார். 1960 மே 27 ரிலீஸ். 66 ஆண்டுகள்.
இது போல் ஒரு நகைச்சுவை காவியம் 13 நாட்களில் எடுத்து முடிப்பது இனியும் சாத்தியமா? #நடிகர்திலகம் மூன்று வேடங்களில் புகுந்து விளையாட, M R ராதா இரண்டு வேடங்களில் கலக்க, தேவிகா, பாலாஜி, வசந்தி, கவியரசர், மெல்லிசை மன்னர்கள், பந்துலு அனைவரும் தோள் கொடுக்க 1962 மே 26 ரிலிஸ். 64 ஆண்டுகள்.
@N_sujatha08@Oho_Production@RagavanG திவான் மாளிகை வாசலில் போராடும்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து முத்துராமன் இறந்து விட, அவரை தகனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்து Inspector general ஆன தந்தையிடம் உணர்ச்சிகள் வார்த்தையில் அல்ல செயலில் இருக்க வேண்டும் என்று ஒரு கை உயர்த்தி ஒரு கால் உயர்த்தி #நடிகர்திலகம் பேசும்காட்சி
கேயார் தயாரிப்பில் பிரசன்ன குமார் திரைக்கதை வசனம் எழுத பிரசாந்த் குமார் இயக்கினார். ஶ்ரீராஜ் இசை அமைத்தார். கண் பார்வையற்றவராக #நடிகர்திலகம் சிறப்பாக செய்திருப்பார். அவருக்கு மனைவியாக வடிவுக்கரசி மற்றும் சிவா,மோகினி, ராஜேஷ் நடித்திருப்பார்கள், 1992 மே 22 ரிலீஸ்.34 ஆண்டுகள் நிறைவு
ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணைந்த #நடிகர்திலகம் பாலாஜி தந்த வெள்ளிவிழா படம். சுஜாதா, விஜயகுமார், சரத்பாபு, ஜெய்சங்கர், சுமலதா, நித்யா, சுதர்சன் நடிக்க மலையாள இதிகாசத்தின் தமிழ் பதிப்புக்கு AL நாராயணன் வசனம் எழுத பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.1982 மே 21 ரிலீஸ். 44 ஆண்டுகள்
#நடிகர்திலகம் பாலாஜி இணைந்த முதல் படம் புதிய பரிமாணத்தை #நடிகர்திலகத்திற்கு வழங்கியது. KR விஜயா ஜோடி. பாலாஜி, மேஜர், நாகேஷ், காஞ்சனா நடிக்க ஆரூர்தாஸ் வசனம் எழுத கண்ணதாசன் MSV இணை சூப்பர் ஹிட் பாடல்கள் தர AC திருலோகச்சந்தர் இயக்கினார். 1967 மே 19 ரிலீஸ். 59 ஆண்டுகள். பெரிய வெற்றி.
பானுமதி தயாரிக்க அவரது கணவர் ராமகிருஷ்ணா இயக்க இரட்டை வேடம் இல்லாமலே ஆள் மாறாட்டம் நடக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் முன்னோடி. #நடிகர்திலகம் கல்லூரி professor ஆக இயல்பு. பானுமதியும் சிறப்பு. TR ராமச்சந்திரன், சந்திரபாபு நடிக்க G. ராமநாதன் இசை. 1957 மே 17 ரிலீஸ். 69 ஆண்டுகள்.
தமிழ் சினிமாவின் உன்னதம். தமிழ் சினிமாவின் பெருமிதமான #நடிகர்திலகம் சிறந்த நடிகர், இசைக்காக G.ராமநாதன், படத்திற்கும் பரிசு என ஆசிய ஆப்ரிக்க திரை விழாவில் பரிசுகளை குவித்த காவியம். லண்டனில் process செய்த டெக்னிக் கலர் படம். பந்துலுவின் magnum opus. 1959 மே 16 ரிலீஸ். 67 ஆண்டுகள்.
கமால் பிரதர்ஸ் தயாரிக்க கலைஞர் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம். போஸ்ட்மானாக #நடிகர்திலகம் romantic காட்சிகளிலும் அசத்துவார். பத்மினி ஜோடி. சந்திரபாபு, பாலையா, MN ராஜம் நடிக்க மெல்லிசை மன்னர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள். 1957 மே 10 ரிலீஸ். 69 ஆண்டுகள்.
இந்து ரங்கராஜன் தயாரிப்பில் இந்தி மௌசம் தமிழ் வடிவமெடுத்தது. ##நடிகர்திலகம் அருமையாக subtle acting பண்ணியிருப்பார். ஶ்ரீபிரியா தாய் மகள் என இரு வேடங்களில் சிறப்பு. கண்ணதாசனின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் இசையமைக்க AC திருலோகச்சந்தர் இயக்கினார். 1982 மே 7 ரிலீஸ். 44 ஆண்டுகள்.
சிவாஜி நாடக மன்ற இயக்குனர் SA கண்ணன் தயாரித்து இயக்க #நடிகர்திலகத்துடன் வாலிப கமல் முதன் முறையாக இணைந்தார். தேவிகா, மஞ்சுளா, ஜெயசித்ரா, நம்பியார் நடிக்க வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனம் எழுத கவியரசர் பாடல்களுக்கு கேவி மகாதேவன் இசை. 1976 மே 6 ரிலீஸ். 50 ஆண்டுகள். இலங்கையில் 100.