தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகள��� வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடன���க்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு ��ெய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவல��க்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “��ெயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று ��ூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போ��ாடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவ��்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்���ு வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்க���் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
Nice to have met you in Nice. A productive first leg indeed. The India-France partnership will keep scaling new heights.
See you in Evian and Paris…
@EmmanuelMacron
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்���ள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொ���ைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே
#BharathiRaja 💐
Thank you Prime Minister Meloni for your warm wishes. I look forward to building on the strong momentum in our India-Italy Special Strategic Partnership for the mutual benefit of our two nations and peoples.
@GiorgiaMeloni
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டி��ுப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ��ளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வ���கம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இ��்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial