Now since the Union Education Minister has resigned, here’s one more of his masterstroke ideas that’s scrapped now:
"Replacing Greenwich Mean Time (GMT) with Mahakal Standard Time (MST)" 😭😭😭
Thank you for your services Dharmendra Pradhan Ji, You'll never be missed ❤️
உபன்யாசகர் விஷாகா ஹரி அவர்களின் ஒரு வீடியோ துணுக்கு பார்த்தேன்.
நவீன இளைஞிகள் ரொம்பவே கேள்வி கேட்கிறார்கள். அவர்களிடம் அறிவியல் பூர்வமாக பதில் சொல்ல வேண்டி இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறார். குறிப்பாக பெண்கள் பொட்டு வைத்துக்கொள்வது குறித்துப் பேசுகிறார். பொட்டு வைத்துகொண்டால் அதன் மூலம் இன்னன்ன பலன் கிடைக்கும், என்றெல்லாம் விளக்கக் கூடாது. நம் அம்மா வைத்துக் கொண்டாள், நம் பாட்டி வைத்துக் கொண்டாள். நீயும் வைத்துக் கொண்டே ஆக வேண்டும் என்று பளார் என்று கன்னத்தில் ஒன்று வைத்தால், அவள் தானாகவே பொட்டு வைத்துக் கொள்ளப் போகிறாள் என்று மாஸ் காட்டுகிறார்.
அறிவியல் பூர்வமாகவோ தர்க்க ரீதியிலோ எந்த விளக்கமும் கொடுப்பதற்கு தகுதியற்றவைதான் இந்தப் பாரம்பரிய வழக்கங்கள் என்பதை இதை விடத் தெளிவாக சொல்ல முடியாது.
இந்த மாதிரி வழி வழியாக வரும் பாரம்பரிய வழக்கங்கள் பற்றி பெரிதும் சிலாகித்துப் பேசுகிறார். அவற்றை விடக் கூடாது என்கிறார். பாரம்பரியம் என்றால் எல்லா வழக்கங்களுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. மற்ற சாதிகள் பற்றிக் கூடப் பேச வேண்டாம். பிராமண சமூகம் கடந்த நூறு ஆண்டுகளில் கைவிட்ட பாரம்பரியங்கள் பற்றிப் பேசுவோமா? சூத்திரர், தலித்துகளுக்கு கோயில் தடை, தீண்டாமை எனும் பாரம்பரியம், வேதம் படிக்க பிறருக்கு அனுமதியின்மை, அக்கிரகாரம் தாண்டி வாழாதது, குடுமி வைத்துக் கொள்வது என்று சொல்லிக் கொண்டே போகலாம். ரொம்ப முக்கியமாக, கடல் தாண்டுவது பிராமணருக்கு மறுக்கப்பட்ட விஷயம். ஆனால் லட்சக்கணக்கான பிராமணர்கள் இன்று மேற்குலகில் மிலேச்சர்களுடன் இணைந்து வாழ்கின்றனர். பாரம்பரியம் பற்றிப் பேசும் விஷாகா அவர்களே அடிக்கடி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்குப் பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்.
பெண்கள் பற்றி மட்டுமே பார்த்தாலும் நாம் கைவிட்ட பல பாரம்பரியங்கள் உள்ளன: குழந்தைத் திருமணம், விதவைக் கோலம், மொட்டைப் பாட்டி, விதவை மறுமணத் தடை, பொட்டு கட்டுதல், என்று பட்டியல் போகிறது. சிகரம் வைத்தாற்ப்போல உடன்கட்டை எனும் இரண்டாயிரம் வருடப் பாரம்பரியமும் நிறுத்தப்பட்டது.
பிரச்சினை என்னவெனில் இந்த எந்தப் பாரம்பரியமும் பிராமண அல்லது இந்து சமூகம் தாங்களாகவே முன்வந்து நிறுத்தியவை அல்ல. அறிவியல் மற்றும் செக்யூலரிசம் சார்ந்து இயங்கும் அரசுகள் வந்து தடை போட்டு நிறுத்தியதுதான். இந்த எந்த மாற்றங்களையும் பிராமண சமூகம் விரும்பி ஏற்றுக் கொண்டதே இல்லை. முரண்டு பிடித்து, எதிர்த்துப் போராடி இறுதியில் வேறு வழியின்றி சகித்துக் கொண்டதுதான் இந்த மாற்றங்கள். அதனால்தான் விஷாகா போன்றவர்களுக்கு அறிவியல் மீதும் செக்யூலரிசம் மீதும் அத்தனை வெறுப்பு. அதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். 'சயன்ஸை சார்ந்து இருந்தால் உருப்பட வாய்ப்பே இல்லை,' என்கிறார்.
அவருக்கு ஒன்று சொல்கிறேன். அறிவியலும் செக்யூலரிசமும்தான் இந்த உலகை அன்பாக, அழகாக, பெருமளவு வாழ்வதற்குத் தகுதியுள்ளதாக மாற்றியுள்ளன. வறுமை ஒழிந்து, நோய்கள் ஒழிந்து, சமத்துவம் பெருமளவு கொண்டு வரப்பட்டு, பெண்ணுரிமை, மனித உரிமை எல்லாம் வந்ததற்குக் காரணம் அறிவியலும் செக்யூலரிசமும் மட்டும்தான்.
உண்மையில் உருப்பட வாய்ப்பே இல்லாதது எது தெரியுமா மேடம்? மதங்கள் சார்ந்த சமூகங்கள் உருப்பட வாய்ப்பே இல்லை. 18ம் நூற்றாண்டு வரை உலகெங்கும் மதங்கள் சார்ந்து இயங்கிய சமூகங்கள் எல்லாமே போர்கள், வறுமை, ஒடுக்குமுறைகள், நோய்கள், என்று கடும் நரகத்தில்தான் உழன்று வந்தன. இன்றும் கூட அறிவியலை, செக்யூலரிசத்தைக் கைவிட்டு மதங்களை, பாரம்பரியங்களை கைக்கொள்ள முயலும் அனைத்து சமூகங்களும் மறுபடி வறுமை, ஒடுக்குமுறை, வன்முறை, நோய்கள் என்றுதான் திரும்பப் போகின்றன.
ஆகவே, பெண்களே, அறிவியல் பேசுங்கள். செக்யூலரிசம் பேசுங்கள். கேள்வி கேளுங்கள். உங்கள் மீது திணிக்க முயலும் ஒவ்வொரு பாரம்பரியத்துக்கும் கேள்வி கேளுங்கள். அதற்கான பதில் திருப்தி தரவில்லை எனில் அல்லது அந்தப் பதிலில் ஒடுக்குமுறை தென்பட்டால் பின்பற்ற மறுத்து நில்லுங்கள்.
மதங்கள் எப்போதுமே விளக்கங்களுக்கு எதிரிகள்தான். எழும் கேள்விகளுக்கு 'பளார் எனும் அறை'தான் அவற்றின் பதில்கள் என்பதைத் தெளிவாக ஒப்புக் கொண்ட விஷாகா மேடம் அவர்களுக்கு நன்றிகள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்.
@Trendulkar@varungrover The sad part is, majority of the people don't even think this is so tragic - they might actually celebrate or be happy with this 😀
The Ministry has issued the following directions through the Directorate General of Civil Aviation (DGCA):
1. Minimum 60% of seats on any flight to be allocated free of charge to ensure fair access
2. Passengers travelling on the same PNR to be seated together, preferably in adjacent seats
3. Carriage of sports equipment and musical instruments to be facilitated in a transparent and passenger-friendly manner, subject to applicable safety and operational regulations. Airlines shall also bring out clear, transparent policies for carriage of pets.
4. Strict adherence to passenger rights framework, particularly in cases of delays, cancellations and denied boarding
5. Prominent display of passenger rights across airline websites, mobile applications, booking platforms, and airport counters
6. Clear communication of passenger entitlements in regional languages to ensure wider accessibility and awareness
The Ministry of Civil Aviation remains committed to enhancing passenger experience, ensuring transparency, reducing grievances and upholding the highest standards of safety across the aviation ecosystem.
@RamMNK@mohol_murlidhar@samirsinha69@AAI_Official@DGCAIndia@Pib_MoCA
https://t.co/sYU6JMXLje
@varungrover I really want to know what aspect of this business model is horrible, "potential" harassment?? - that's a generic comment applicable to all profession (probably worse in the industry you work for). You don't employ house help?